நரகை தேடும் தவ்ஹீத்வாதிகள்

நரகை தேடும் தவ்ஹீத்வாதிகள்

      ♦♦♦♦♦♦♦♦♦♦

                    11-02--19
           கட்டுரை எண்1234  
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

மாறி மாறி ஒருவரை போற்றுவதும் அதன் பிறகு அவர்களின்  நாவில்  போற்றியவரையே கடுமையாக தூற்றுவதையும் தான் தமிழக தவ்ஹீத்வாதிகள் இத்தனை ஆண்டுகளாக தவ்ஹீதாக கற்றுள்ளனர் என்பதே தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது

சினிமா நடிகர்களின் மீதும்   அரசியல்வாதிகளின் மீதும் பாமரர்கள் வைத்துள்ள  மோகத்தை கடுமையாக  கண்டித்து உபதேசம் செய்த  இவர்களிடம் தான் தற்போது அதை விட அதிகமான மடமைத்தனமும் தனிமனித மோகமும் வெறுப்பும் ஒளிந்துள்ளது  என்பது வெளியாகி வருகிறது

இதில் சில  ஆலீம்களும்  தாயிகளும் தங்கள் நேரத்தை செலவு செய்து   ஜால்ரா அடித்து சுற்றுவதை கண்டால் நகைப்பு தான் ஏற்படுகிறது

இவர்கள் அறிந்த தூய்மையான இஸ்லாம் நமது தமிழக  இயக்கங்களும் ஒரு சில  மார்க்க அறிஞர்களும் தான் என்பதை வெட்கமின்றி வெளிப்படுத்தி வருகின்றனர்

நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களின் பெயரை கேட்டு சலவாத் சொல்லுவதை விட பீஜே எனும் ஒரு மனிதனின் பெயரை  தூற்றுவதற்க்கும் போற்றுவதற்க்கும்  திக்ரை போல பயன்படுத்தி  அன்றாடம் அறிக்கை போட்டு பாவத்தை தேனை போல் ரசித்து குடிப்போர் தான் சமூகவலைதளங்களில் மிகவும்  அதிகம்

முஸ்லிம் சமூகத்தை யாரும் சீண்ட முடியாது என்று ஒரு புறம் பேசிக்கொண்டு மறுபுறம் அந்த வேலையை தாங்களாகவே கட்சிதமாக செய்து வருகின்றனர்

வாழ்நாளில் ஈட்டுவதே அர்ப் நன்மை

அந்த அர்ப்ப நன்மைகளையும் பாவங்களாக மாற்றி தங்களுக்கு தாங்களே நரகை தேடி கொள்கின்றனர்

  عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: رُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرُ فَقِيهٍ وَمَنْ لَمْ يَنْفَعْهُ عِلْمُهُ ضَرَّهُ جَهْلُهُ اِقْرَإِ الْقُرْآنَ مَا نَهَاكَ فَإِنْ لَمْ يَنْهَكَ فَلَسْتَ تَقْرَءُهُ

கல்விமான்களில் சிலர் மார்க்க விளக்கமில்லாமல் இருக்கின்றனர்
(கல்விக்குரிய எந்த விளக்கம் தேவையோ அந்த விளக்கம் அற்றவராக உள்ளனர்)
எவரது கல்வி அவருக்குப் பலன் தரவில்லையோ அவரது அறியாமை அவருக்குத் தீங்கை விளைவிக்கும்
(பாவங்கள் மற்றும் தீமைகளைவிட்டு) குர்ஆன் உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கும் வரை தான் நீங்கள் (உண்மையில்) குர்ஆனை ஓதக்கூடியவர்களாகக் கணிக்கப்படுவீர்கள்

(பாவங்களை விட்டும்) குர்ஆன் உங்களை  தடுக்கவில்லை என்றால்  உண்மையில் நீங்கள் அதை ஒதியவராகக் கணிக்கப்படமாட்டீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

               நூல் தப்ரானி

கீழ் காணும் வீடியோவை  தனிமையில்  சிந்தித்தாலே நமது மறுமை நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதற்க்கு சரியான பாடமாக அமையும்

        நட்புடன் J .  இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்