பொறாமை தவிர்ப்போம்
பொறாமை தவிர்ப்போம்
♦♦♦♦♦♦♦♦♦♦
02-02--19
கட்டுரை எண்1231
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
எந்த ஒரு மனிதனின் சுய முன்னேற்றமும் யாருடைய வாழ்வையும் சீரழிக்க போவது இல்லை
காரணம் ஒரு மனிதனின் முன்னேற்றத்தில் அந்த மனிதனின் முயற்சி தான் அடிப்படையாக இருக்குமே தவிர அவனுடைய முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றத்தை இறைவனின் நாட்டமே தீர்மானிக்கிறது
உலகமே ஒன்று சேர்ந்து ஒரு மனிதனுக்கு எதிராக சூழ்ச்சி செய்தாலும் அந்த மனிதனின் விசயத்தில் இறைவனின் நாட்டத்தை எந்த மனிதனாலும் மாற்றியமைக்க முடியாது
ஆனால் தொழில் மூலமாகவோ அல்லது திறமை மூலமாகவோ ஒரு மனிதன் சுயமாக முன்னேற்றம் அடைந்தால் அந்த மனிதனின் முன்னேற்றத்தை கண்டு பொறாமை படும் தீய குணம் அநேகமான மனிதர்களிடம் புற்றீசல் போல் பரவியுள்ளது
அதன் காரணத்தால் அந்த மனிதனுக்கு எதிரான பல சூழ்ச்சிகளை கெடுதல்களை தீய குணம் உடையவன் செய்ய துவங்குகிறான்
இந்த தீய குணத்தின் விளைவாக அவனும் தனது முன்னேற்ற வழிகளை யோசிப்பதை தவிர்த்து விட்டு முன்னேற்றம் அடைந்து வருபவரின் நிலையை சிந்தித்தே உளவியல் நோயாளியாக மாறி விடுகிறான்
நாளடைவில் இவனது சந்ததியும் காரணம் இல்லாது அவனை எதிர்க்க துவங்கி குடும்ப ரீதியாக விரோதத்தையும் குரோதத்தையும் வளர்த்தி கொள்கின்றனர்
இதில் எல்லை தாண்டுகிற போது பல உயிர்கள் அதனால் தேவையில்லாது பலியாக்கப்படுகிறது
இதற்க்கு மூல காரணம் பொறாமை எனும் தீய குணமே
இந்த தீய குணத்தை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது
ஒருவரின் துன்பத்தை கண்டு ரசிப்பதும் முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொள்வதும் உலக வாழ்வையும் சிரமமாக்கி மறுமை வாழ்வையும் நாசமாக்கி விடுகிறது
عَنْ وَاثِلَةَ بْنِ اْلاَسْقَعِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ تُظْهِرِ الشَّمَاتَةَ لِأَخِيْكَ، فَيَرْحَمَهُ اللهُ وَيَبْتَلِيْكَ
உங்களது சகோதரர் சிரமத்தில் இருக்கக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடையாதீர்கள் ஏனேனில் அல்லாஹுதஆலா அவர் மீது இரக்கப்பட்டு அவரை சிரமத்திலிருந்து ஈடேற்றமளித்து உம்மைச் சிரமத்தில் ஆழ்த்திவிடலாம் என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் வாஸிலத்துப்னு அஸ்கஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment