வட்டி பத்வாவும் அறிஞர் பீ ஜெனுல் ஆப்தீனும்

    வட்டி தொடர்பான பத்வாவும்
                     அறிஞர்
       பீ . ஜைனுல் ஆப்தீனின்
               அறியாமையும்

    ♦♦♦♦♦♦♦♦♦♦

                    24-01--19
           கட்டுரை எண்1227                       
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                         بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

நூறு ரூபாய் கடனாக கொடுத்து அதை  திருப்பி அடைக்கும்  போது  நூற்றி பத்து ரூபாயை கொடுக்க வேண்டும் என்று  முறையீடாக வைத்து ஒருவருக்கு கடன் கொடுத்தால் அதற்க்கு பெயர் வட்டி

இந்த ஒப்பந்தத்திற்க்கு ஒருவர்  சம்மதித்து நூறு ரூபாயை பெற்றால் அதற்க்கு பெயரும் வட்டி என்பதை சிந்தனை செய்யும் எவராலும் மறுக்க இயலாது

வட்டி தொடர்பான அனைத்து கொடுக்கல் வாங்கலும் இவ்வாறு தான் நடை பெறுகிறது

வட்டிக்கு பணத்தை கொடுப்பவன் தான் குற்றவாளி வட்டிக்கு அதே பணத்தை கை நீட்டி வாங்குபவன் வட்டியை தனியாக அடைக்கும்  கடனாளி அவன் வட்டிக்கு துணை போகும் குற்றவாளி அல்ல  என்று சொன்னால்

வட்டியை தடை செய்யும் ஹதீசில் வட்டிக்கு சாட்சி கையெழுத்து போடுபவனையும் குற்றத்தில் சமமாக்கி நபி (ஸல் ) அவர்கள் கண்டிக்கும் அவசியமே இல்லை

காரணம் வட்டிக்கு  சாட்சி கையொப்பம் போடுபவன் வட்டியை எந்த வகையிலும் அவன் அனுபவிக்க போவது இல்லை

தவறான பத்வாக்களை கொடுத்து விட்டு அந்த வட்டிக்கு  நிர்பந்தம் என்று முட்டு கொடுப்பது மார்க்க அறிவீனமாகும்

நிர்பந்தத்தில் ஒரு மனிதன் மார்க்கம் தடுத்துள்ள காரியத்தை செய்தால் அந்த தவறை இறைவன் நாடினால் மன்னிப்பான்

அதே நேரம் நிர்பந்தம் என்று சொல்லிவிட்டு வாகனங்களை வாங்குவதற்க்கு லோன் வாங்குவதும்
வீடுகளை கட்டுவதற்க்கு லோன் வாங்குவதும் நிர்பந்தம் அல்ல

நிர்பந்தம் என்று சொன்னால் ஒரு மனிதன் அன்றாடம் உண்ணும் உணவுக்கு வழி இல்லாது இருப்பதும்
அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற சூழலை சந்திப்பதும் தான் இஸ்லாம் கூறும் நிர்பந்தம் ஆகும் இதை
பீ. ஜெனுல் ஆப்தீனும் பல முறை பேசியே உள்ளார்

லோன் மூலம் அதாவது வட்டி  மூலம் கடன் பெற்று தொழில் செய்யும் நபரோடு ஹலால் முறையில் சம்பாதித்த தனது  பணத்தை பங்கீடாக போட்டு  கூட்டு முறையில் வியாபாரம் செய்வது கூடுமா ? என்பது தான் அறிஞர் பீ . ஜெனுல் ஆப்தீனிடம்  கேட்கப்பட்ட கேள்வி

இதற்க்கு அளிக்க வேண்டிய பதில்

1 ஹலாலான முறையில் சம்பாரிக்கும் நீங்கள் ஹராமான முறையில் பெறப்பட்ட பொருளை வைத்து வணிகம் செய்யும் நபரோடு நீங்கள் ஏன் கூட்டு சேர வேண்டும்  ?  அதன் அவசியம் உங்களுக்கு என்ன ?

2 உங்கள் முதலீடு ஹலாலாக இருக்கும் பட்சத்தில் அதற்க்கு ஏற்று  வரும் வருவாயை நீங்கள் ஏன் ஹராமாக பார்க்க வேண்டும்  ?

என்று தான்  பதில் கூறி இருக்க வேண்டும்

அதை தவிர்த்து விட்டு வட்டிக்கு லோன் வாங்கி வணிகம் செய்யும் நபரின் பொருளாதாரத்தை  கடன் என்று பத்வா கொடுப்பதும் அதனால் அவரோடு பங்காளராக ஆகலாம் என்று பத்வா கொடுப்பதும்  மார்க்க நெறி தாண்டிய பத்வா ஆகும்

இது போன்ற விசயங்களில்
பீ . ஜைனுல் ஆப்தீன் இனிமேல்  பேணுதலை கடை பிடிப்பது அவசியமாகும்

                 ************

     வட்டியின் சாயலை கூட
      கண்டிக்கும் நபிமொழி
                        ****

عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ شَفَعَ لٍاَخِيْهِ شَفَاعَةً فَاَهْدَي لَهُ هَدِيَّةً عَلَيْهَا فَقَبِلَهَا فَقَدْ اَتَي بَابًا عَظِيْمًا مِنْ اَبْوَابِ الرِّبَا

எவர், தன் முஸ்லிம் சகோதரருக்கு ஏதேனும் காரியத்திற்காக) பரிந்துரைத்து, பிறகு அவர் பரிந்து பேசியவருக்கு (பரிந்து பேசியதற்குப் பகரமாக) ஏதேனும் ஒரு பொருளை அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டால்

அவர் வட்டியின் வாசல்களுள் பெரியதொரு ஒன்றில் வாசலுக்குள் நுழைந்துவிட்டார்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

           நூல் அபூதாவூத்
                   ********

  கடனில் தான் வட்டியே வரும்
                     *******

3254. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
வட்டி என்பதே கடனில்தான்
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

          ஸஹீஹ் முஸ்லிம்
                      ********
வட்டியை அனுபவிக்காத நபரும்
           பாவத்தில் சமமே
                     ******
    
3258. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
வட்டி வாங்குபவரையும்
வட்டி கொடுப்பவரையும் அதற்குக் கணக்கு எழுதுபவரையும்
அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள்

மேலும் இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்" என்று கூறினார்கள்

         ஸஹீஹ் முஸ்லிம்
                   *********

         நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்