நோய்கள்

                  நோய்கள்

   ♦♦♦♦♦♦♦♦♦♦

                    31-01--19
           கட்டுரை எண்1230               
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

ஒரு மனிதனின் நோய்க்கு மருத்துவம் செய்வதின் மூலம் தங்களது வாழ்கைக்கு தேவையான  வருமானம் ஈட்டுபவர்களே மருத்துவர்கள்

நோயின் தாக்கத்திற்க்கு ஏற்று கண்டிப்பையும் மருந்துகளையும் அறிவுரைகளையும் மனிதாபிமானத்தோடு வழங்குபவர்களே நேர்மையான மருத்துவர்கள்

மருத்துவர் தரும் மருந்துகள் நோயாளிக்கு  ஏற்படுத்தும் நிம்மதியை விட மருத்துவர் நோயாளியிடம் பழகும்  அழகிய அணுகுமுறையும் வார்த்தைகளும் தான் நோயாளியின் மனதை அதிகமாக தேர்ச்சி படுத்தும்

அதே நேரம் மருத்துவ துறையில் ஒருவர் பல  சாதனை பட்டங்களை வாங்கியதால் அவர் கை வைத்தாலே நோய்கள் முற்றிலும் குணமாகும் என்பது நோயாளிகளின்  நம்பிக்கை தானே தவிர

இறைவனின் நாட்டம் இன்றி எந்த நோய்களும் குணமாகாது என்பதே இஸ்லாம் கூறும் இறை நம்பிக்கை

ஒரு மனிதனின் இறை நம்பிக்கை எந்தளவுக்கு வலு நிறைந்து காணப்படுகிறதோ அந்தளவுக்கு அவனது நோய்கள் உளவியல் ரீதியாக பலவீனப்படும்

காரணம் உடலியல் நோய்களை  உளவியல் நோய்களே வீரியப்படுத்துகிறது

அந்த உளவியலை இறை நம்பிக்கை கொண்டு செவ்வை படுத்தினால் உடலியல் நோய்கள் எதுவானாலும் அதன் மூலம்  மனபாரத்தை ஏற்படுத்துவதில் இருந்து நிச்சயம் விரண்டோடும்

يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ  وَهُدًى وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ‏ 
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; )

மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது

       (அல்குர்ஆன் : 10:57)

        நட்புடன் J . இம்தாதி 

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்