இல்லங்களில் நுழைவோரே நாகரீகம் பேணுங்கள்

   இல்லங்களில் நுழைவோரே
          நாகரீகம் பேணுங்கள்

           ♦♦♦♦♦♦♦
          கட்டுரை எண் 1226

     24-01-19 வியாழன் கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                          بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

ஒரு மனிதன் அவனது இல்லத்தில் இருக்கும் போது பல நிலையிலும் இருப்பான்

1உறங்கி கொண்டிருப்பான்
2 ரகசியம் பேசி கொண்டிருப்பான்
3 மேலாடை இல்லாதும் இருப்பான்
4 அலங்கோலமாக இருப்பான்
5 இல்லறத்தில் இருப்பான்
6 கழிவறையில் இருப்பான்
7 மன உளைச்சலில் இருப்பான்

இவைகளை கருத்தில் கொண்டு தான் பிறர் இல்லங்களில் நுழையும் மனிதன் அனுமதி கோராமல் அந்த அனுமதிக்கு இல்லாத்தாரின் பதில் கேளாமல் எவ்வகையில் நுழைவதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது

இல்லத்தில் இருக்கும் மனிதன் வெளியாட்களின்  அழைப்பை கேட்டும் பதில் தராத பட்சத்தில் அந்த இல்லத்தின்  திரைசீலையை விலக்கி பார்ப்பது ஜன்னல் ஓரங்களில் எட்டி பார்ப்பது  பின்வாசல் வழியாக சென்று பார்ப்பது போன்ற எல்லா காரியங்களையும் இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது

21 நூற்றாண்டில் வாழும் மனிதர்களில் அநேகருக்கு இந்த பண்பாடுகளும் அதற்கான காரணங்களும் இன்னும் சரியாக  புரியவில்லை

நட்பை காரணம் காட்டி முன் அனுமதி பெறாமல் அவ்வீட்டாரின்  பெண்கள் புழங்கும் வீட்டின் அடுப்படி வரை செல்வது சகஜமாக உள்ளது

குறிப்பாக அண்டை வீட்டில் வாழும்  பெண்கள் இவ்விசயத்தில் நாகரீகம் பேணுவது இல்லை

ஒரு மனிதனின் அந்தரங்கத்தை காணும் நிலை ஏற்பட்டு விட்டால்  அவனது தன்மானம்  எந்தளவுக்கு கூனி குருகிவிடும்  என்பதை கூட  சிந்திப்பது இல்லை

இதன் விளைவு தான் கள்ள தொடர்புகளும் நம்பிக்கை துரோகங்களும் வம்பு சண்டைகளும் குடும்ப பிளவுகளும் சர்வ சாதாரணமாக உள்ளது

இதன் உச்ச கட்டம் தான் அந்தரங்கத்தில் மனிதன் செய்யும் தனிமை காரியங்களை  கண்கூடாகவும் வீடியோ வடிவங்களாகவும் பார்க்கும் இழிநிலை சாதாரணமாக இக்காலத்தில்  ஏற்பட்டுள்ளது

அதனால் தான் இவ்விசயத்தில் பலவிதமான போதனைகளை கண்டனங்களை திருமறை குர்ஆனும் ஹதீஸ்களும் பறை சாற்றுகிறது

பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொல்லி தர வேண்டிய இஸ்லாமிய  அடிப்படை பாடங்களில் இதுவும் மிகவும் முக்கியமானது

ஒரு தந்தை தனது மகளை கூட மகள் கோலத்தில் தான் பார்க்க வேண்டும்

ஒரு அண்ணண் தனது தங்கையை கூட தங்கை கோலத்தில் தான் பார்க்க வேண்டும்

ஒரு மகன் தனது தாயை கூட தாய்மை கோலத்தில் தான் பார்க்க வேண்டும்

அதனால் தான் இச்சட்டத்தை கூட அந்நியர்களுக்கு போதிப்பதோடு ஒரே குடும்பத்தில் வாழும் ரத்த உறவுகளுக்கும்  இஸ்லாம் வலியுருத்துகிறது

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اِذَا دَخَلَ الْبَصَرُ فَلاَ اِذْنَ

வீட்டுக்குள் பார்வை சென்றுவிட்டால் அனுமதி கேட்பதில் அர்த்தம் இல்லை அனுமதி கேட்பதில் எந்தப் பலனும் இல்லை என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

             நூல்  அபூதாவுத்

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ 

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள்
(அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்

நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)

       (அல்குர்ஆன் : 24:27)

فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْ‌ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا‌ هُوَ اَزْكٰى لَـكُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ‏ 

அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்

அன்றியும் திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்

மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்

       (அல்குர்ஆன் : 24:28)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِيَسْتَـاْذِنْكُمُ الَّذِيْنَ مَلَكَتْ اَيْمَانُكُمْ وَالَّذِيْنَ لَمْ يَـبْلُغُوا الْحُـلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍ‌ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِيْنَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيْرَةِ وَمِنْ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ‌  ثَلٰثُ عَوْرٰتٍ لَّـكُمْ‌  لَـيْسَ عَلَيْكُمْ وَ لَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ‌  طَوّٰفُوْنَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلٰى بَعْضٍ‌  كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ‌  وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏ 

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்

ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும்

நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் ளுஹர்நேரத்திலும்

இஷாத் தொழுகைக்குப் பின்னரும்

ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும்

இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை

இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வர வேண்டியவர்கள் என்பதினால்

இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்

மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன் ஞானம் மிக்கவன்

      (அல்குர்ஆன் : 24:58)

          நட்புடன்  J . இம்தாதி



Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்