பூனை

        பூனை ஓர் அறிமுகம்

    ♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1219

       22 -11-18 சனி கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                          بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

1- பூனையை வீட்டில் வளர்ப்பதால் அதோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவது 33 சதவிகிதம் குறையும் வாய்ப்பு உள்ளதாக கால்நடை மருத்துவர் ஹான்காங் நாட்டை சார்ந்த  பிரில்ஸ் என்பவர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்

2- பூனைகள் அதிகமாக
சுய சுத்தம் பேணும் இனமாகும் அதனால் தான் அதன் கழிவுகளை மண்ணால் மூடி அதன் பிறகு அதில் இருந்து துர்வாடை வெளியேறுகிறதா ? என்று நுகர்ந்து பார்த்த பின்பே அவ்விடத்தை விட்டு மாறும்

3- பூனைகள் தனது வாழ்நாளில் எழுபது சதவிகிதத்தை தூங்கியே கழிக்கும்

4- பூனைகளுக்கு தேன் கொடுத்தாலும் அதன் இனிப்பு சுவையை அறியும் நரம்புகள் பூனை நாவில் இல்லை

5- தனது உள்ளங்கால் மூலமே பூனைகள் தனது வியர்வையை வெளியேற்றும்

6- கடல் நீரை கூட சுத்திகரிக்கும் தன்மை பூனையின் சிறுநீரகத்தில் அதிகம்  உள்ளது

7-பூனையின் சிறுநீருக்கு இருட்டில் ஒளிரும் தன்மை உண்டு இதனால் அது கால் மிதிபடாமல் இருக்க உதவுகிறது

8- பெண் பூனைகள் வலது புறம் பழக்கம் உள்ளவை  ஆண் பூனைகள் இடது புறம் பழக்கம் உள்ளவை

9- துணையே இல்லாது அதிகம் விளையாடி மகிழ கூடிய தன்மை பூனையின் இயல்பு தன்மை

10- மனிதனின் கைரேகை தனிப்பட்ட அடையாளமாக இருப்பதை போல்
பூனையின் மூக்கு தடங்களே அதன் தனி அடையாளங்கள்

11- பூனையின் ஓசைகள் சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்றார் போல்  பல விதங்களில் வெளிப்படுத்தும்

12- அதிகமான அதிர்வலை ஓசைகளை பூனைகளால் எதிர் கொள்ள இயலும்

13- பூகம்பம் ஏற்படுவதற்க்கு பதினைந்து நிமிடம் முன்பே பூனைகளால் இயற்கை சீற்றத்தை உணர இயலும்

       *************************

இஸ்லாத்தை பொருத்தவரை பூனை வளர்ப்பதை சுன்னத் என்று பல முஸ்லிம்கள் gவிளங்கி வைத்துள்ளனர்
இது சரியான புரிதல் அல்ல

மறுமை நன்மையை நாடி செய்யப்படும் சுன்னத் என்பது வேறு

விரும்பதக்கது என்பது வேறு

பூனையை  வளர்க்க ஒருவர் விரும்பினால் அதற்க்கு இஸ்லாம் தடை போடவில்லை என்பது தான் இஸ்லாமிய பார்வை

இது பூனைக்கு மாத்திரம் அல்ல இஸ்லாம் அனுமதித்துள்ள எல்லா பிராணிகளுக்கும் பொருந்தும்

ஆடு வளர்ப்பதை பரகத் என்று நபியவர்கள் சிறப்பித்து சொல்லி உள்ளனர்

                  *************

3482. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஒரு பூனையை அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள்

அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை

அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை

அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

          ஸஹீஹ் புகாரி
                   ********

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أُمِّ هَانِئٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا اتَّخِذِي غَنَمًا فَإِنَّ فِيهَا بَرَكَةً

உம்முஹானி (ரலி) அவர்களிடம் நீ ஒரு ஆட்டை வளர்த்துக் கொள்! அதில் பரக்கத் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : இப்னுமாஜா

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ أُمِّ هَانِئٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا اتَّخِذِي غَنَمًا فَإِنَّ فِيهَا بَرَكَةً

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டகம் வைத்திருப்போருக்கு பெருமையிருக்கிறது. ஆனால் ஆட்டில்தான் பரக்கத் என்றார்கள்.

        நூல் : இப்னுமாஜா

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்