பொறுமை ஓர் விளக்கம்

      பொறுமை ஓர் விளக்கம்

    ♦♦♦♦♦♦♦♦♦♦

          கட்டுரை எண் 1221

       30 -11-18 ஞாயிறு கிழமை          
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                          بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

பொறுமையாளர்களோடு இறைவன் இருக்கின்றான் என்ற குர்ஆன் வசனத்தை நம்புகின்ற காரணத்தால் மாத்திரம் ஒரு மனிதன் இறை உதவியை பெற்று கொள்ள இயலாது

மாறாக பொறுமை என்றால் என்ன ?

பொறுமைக்கு இஸ்லாம் கூறும் இலக்கணங்கள் என்ன ?

என்ற நெறிகளை படித்து அவைகளை நடைமுறை படுத்தும் மனிதனே மெய்யான பொறுமையாளன்

பொறுமையை கடை பிடியுங்கள் என்ற வார்த்தைக்குள் உங்கள் வாழ்கையில் ஏற்படும்  இழப்புகளை சிரமங்களை சகித்து கொள்ளுங்கள் என்ற பதமே உள்ளடங்கி இருக்கிறது

சிரமங்கள் தாக்காத நேரத்தில் பொறுமை எனும் பதத்திற்க்கு வேலையே இல்லை என்பதை மனிதர்களின் அநேகர் புரிந்து கொள்ளவில்லை

இறைவன் தரும் பல  உத்திரவாதங்களை மறுமையில் தான் காண முடியும்

ஆனால் பொறுமையை கடை பிடிக்கும் நபர்களுக்கு  இறைவன் தரும்   உத்திரவாதத்தை ஒவ்வொரு மனிதனும் தனது அனுபவத்தில் மாத்திரமே காண இயலும்

அவ்வகையில் இந்த உத்திரவாதத்தை சில நேரங்களில் நாமும் மகிழ்வாய்  அனுபவித்தே உள்ளோம் அவ்வகையில் எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே புகழும் நன்றியும் உரித்தாகட்டும்

அல்ஹம்துலில்லாஹ்

وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏ 

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்

ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக

      (அல்குர்ஆன் : 2:155)

وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏

(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக

நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்

     (அல்குர்ஆன் : 11:115)

الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ‏ 

இவர்கள் தாம் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொண்டு, தம் இறைவன் மீது முற்றிலும் சார்ந்து முழு நம்பிக்கை வைப்பவர்கள்

      (அல்குர்ஆன் : 16:42)

         நட்புடன்  J. இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்