விபச்சார சாட்சியம்
இஸ்லாமிய விபச்சார
தண்டனை சாட்சியம் சாத்தியம்
இல்லையா ?
♦♦♦♦♦♦♦♦♦♦
கட்டுரை எண் 1220
24 -11-18 திங்கள் கிழமை
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍوَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ
விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்
மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்
இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்
(அல்குர்ஆன் : 24:2)
وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ
அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்
பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்
(அல்குர்ஆன் : 24:4)
------------------------------------
விபச்சாரத்துக்கு திருக்குர்ஆன் மூலம் இறைவன் கூறிய நான்கு சாட்சிகளை கொண்டு வருவதற்க்கும்
ஒரு மனிதனின் விபச்சார குற்றத்தை நிரூபணம் செய்வதற்க்கும் குர்ஆனின் சாட்சி சட்டங்கள் வழங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்காலம் வரை சாத்தியம் இல்லை
விபச்சாரம் செய்பவன் நான்கு சாட்சிகளை வைத்து கொண்ட நிலையில் ( ? ) விபச்சாரம் செய்வானா ?
என்று பீ . ஜைனுல் ஆப்தீன் ( உலவி ) உட்பட சிலர்கள் குர்ஆனின் கட்டளைகளில் தேவையற்று சர்ச்சை செய்து வருவதை பார்க்கிறோம்
விபச்சாரம் செய்பவன் நான்கு சாட்சிகளை வைத்து கொண்டு விபச்சாரம் செய்வான் என்று திருக்குர்ஆன் சொல்லவில்லை
மாறாக விபச்சாரம் செய்த ஒருவனை இஸ்லாம் கூறும் விதத்தில் கசையடியோ
அல்லது மரண தண்டனையோ கொடுப்பதாக இருந்தால் தான் குற்றம் சுமத்துவோர் நான்கு சாட்சிகளை கொண்டு வர வேண்டும் என்று திருக்குர்ஆன் சொல்கிறது
இதில் தர்க்கம் செய்வதற்க்கு ஒன்றும் இல்லை
தண்டனையை நிறைவேற்றுவதாக இருந்தால் நான்கு சாட்சிகள் வேண்டும் என்பது தான் குர்ஆன் கட்டளை
ஒரு வேளை விபச்சாரம் செய்த ஒருவனின் குற்றத்தை நிரூபிக்க இரண்டு சாட்சியோ அல்லது மூன்று சாட்சியோ மட்டும் இருந்தால் அதை மாத்திரம் வைத்து கொண்டு விபச்சார குற்றச்சாட்டு சொல்லப்படும் ஒருவரை தண்டித்து விடாதீர்கள் என்று தான் இஸ்லாம் சொல்கிறது
காரணம் மனிதனின் உயிர் புனிதமானது
அத்தகைய உயிரை பலி வாங்குவதற்க்கு யாரும் சர்வ சாதாரணமாகவோ அல்லது திட்டமிட்டோ முன் வந்து விட கூடாது என்பது தான் இறைவனின் நோக்கம்
அதே நேரம் நான்கு சாட்சி சாத்தியமா ? என்பது அவசியமற்ற வாதம்
தற்காலத்தில் ஒரு மனிதனின் அந்தரங்க தவறை கண்டறிய அவன் ஒரு அந்நிய பெண்ணோடு தங்கி இருக்கும் அறைகளில் ரகசிய கேமராக்களை வைத்து கண் காணித்தால் திருக்குர்ஆன் கூறும் நான்கு சாட்சிகள் அல்ல மாறாக அவன் செய்யும் விபச்சாரத்தை நான்கு ஆயிரம் சாட்சிகள் கூட லைவில் காண இயலும்
அதாவது விபச்சாரம் தொடர்பான நான்கு சாட்சிகள் என்பது இக்காலத்தில் நவீன சாதனங்களை கொண்டு தந்திரமாக நிரூபிப்பது சாத்தியமே என்பதை சிந்திப்போர் மறுக்க இயலாது
மறுக்க முடியாத இது போன்ற ஆவனங்களை ஒரே ஒரு சாட்சியாளன் காட்டினால் கூட அதை வைத்து தண்டிப்பதை குற்றம் என்று வாதிட முடியாது
காரணம் மனிதனுக்கு உபயோகப்படும் சாதனங்களை கண்டு பிடிப்புகளை இஸ்லாமும் அங்கீகரிக்கவே செய்கிறது என்பதை இவ்விசயத்தில் குதர்க்கமாக வாதிப்போரும் அறிந்தே உள்ளனர்
திருக்குர்ஆன் வழங்கப்பட்ட காலம் முதல் 24 :2,3,4 ,மற்றும் விபச்சார தண்டனை தொடர்பான திருகுர்ஆன் வசனங்களை இஸ்லாமிய அரசுகள் எவ்வாறு புரிந்து
அதை நடைமுறை படுத்தி தண்டனை வழங்கி வருகின்றனர் என்பதையும் கேட்டறிந்து பேச வேண்டும்
வெற்று தர்கங்கள் சமூகத்தில் குழப்பத்தை தான் ஏற்படுத்தும்
மேலும் விபச்சாரத்துக்கு சாட்சி சொல்பவர்கள் நேரடியாக விபச்சாரத்தின் முழு காட்சிகளை கண்டு தான் சாட்சி சொல்ல வேண்டும் என்று திருக்குர்ஆனிலும் ஹதீசிலும் விளக்கம் சொல்லப்படவில்லை
அப்படியானால் விபச்சார குற்றச்சாட்டு சொல்லும் நபரின் சாட்சி என்பதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் ?
எந்த சூழ்நிலைகள் ஒரு மனிதன் விபச்சாரம் செய்திருப்பான் என்று வாதிப்பதற்க்கு ஏற்ற நிலையில் உள்ளதோ மறுக்க இயலாத சூழலிலும் உள்ளதோ அவைகளை ஆதாரங்களாக வைப்பது தான் விபச்சார குற்றச்சாட்டை சொல்லும் நபரின் கடமையாகும்
உதாரணமாக கணவனை அறியாது மனைவியோ
அல்லது மனைவியை அறியாது கணவனோ
அல்லது அந்நியர்களாக இருக்கும் இருவரோ
யாரும் இவர்களை அடையாளம் அறிந்து கொள்ளாத இடங்களில் தனிமையில் இருந்தாலோ அல்லது தங்கும் விடுதிகளில் தனிமையில் இருந்தாலோ
அது ஒன்றே இவர்கள் விபச்சார குற்றச்சாட்டுக்கு பொருத்தமான நபர்கள் என்பதை நிரூபிக்க போதுமானதாகும்
காரணம் இது போன்ற தனிமைகளை அந்நியர்களான இருவர் குடும்ப விவகாரங்களை அல்லது சமுதாய விவகாரங்களை பேச தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை
இந்த சந்திப்பில் அவர்கள் இருவரும் விபச்சார குற்றத்தை செய்யாது இருந்தாலும்
அல்லது விபச்சாரத்திற்க்கு நெருக்கமான காரியங்களை செய்தே இருந்தாலும் அதை பற்றி ஆட்சியாளர்களும் குற்றம் சாட்டுவோர்களும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை
காரணம் இவ்விசயத்தில் அறிவுக்கு எட்டிய புற தோற்றங்களை வைத்து தான் மனிதர்களால் முடிவு செய்ய முடியுமே தவிர
குற்றம் சாட்டப்பட்டவர்களின் உள்ளத்தை பிளந்து அல்லது அவர்களின் ஒழுக்கமற்ற விபச்சார செய்கைகளை கண்டு யாராலும் உண்மையை ஏந்நேரமும் கண்டறிய முடியாது
அதனால் தான் அந்நிய ஆண் பெண் இருவரும் தனித்திருக்க வேண்டாம் என்றும்
அவ்வாறு தனித்து இருந்தால் மூன்றாவதாக சைத்தான் இருப்பான் என்றும் இஸ்லாம் சொல்கிறது
என்பதை சிந்திக்க மறுக்க கூடாது
இதில் விபச்சார குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாங்கள் விபச்சாரம் செய்யவில்லை என்று வேண்டுமானால் மன முரண்டாக அல்லது தண்டனைக்கு பயந்து மறுக்க முடியுமே தவிர
தனிமையில் நாங்கள் இருக்கவில்லை என்பதை மறுக்க இயலாது
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment