சஹாபாக்களை மதிப்பது எப்படி

   சஹாபாக்களை மதிப்பது

           என்றால்  என்ன ?

    ♦♦♦♦♦♦♦♦♦♦

                    27-10--18
கட்டுரை எண்1193 சனி கிழமை                        
         !!J . Yaseen iMthadhi !!
                **************
                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ             
         ★★★★★★★★★★★

ஒரு மனிதனை மதித்தல் என்றால் என்ன ?

அவ மதித்தல் என்றால் என்ன ?

இதற்கான சரியான பொருளை தவ்ஹீத்வாதிகளே அறிந்து கொள்ளாத காரணத்தால் தான் சஹாபாக்களை அவமதிக்காதீர் என்று நாம் சொல்லும் போது

நாங்கள் எங்கே சஹாபாக்களை அவமதிக்கிறோம் ?

நாங்களும் அவர்களின் தியாக வரலாறுகளை சொல்லி கொண்டு தானே உள்ளோம் என்று தங்களது அறியாமைக்கு அவர்களே சுய  விளக்கம் சொல்லி கொண்டு  திரிகின்றனர்

மனிதன் என்ற முறையில் அனைவரும் சமம் என்றாலும் அவரவர்களுக்கு இருக்கும் கண்ணியத்தை முறையாக தருவதே ஒரு மனிதனை மதிப்பதின் அளவுகோளாகும்

மருத்துவத்திற்க்கு படித்த ஒரு மனிதனை அந்த பார்வையில் பார்ப்பது தான் அவரை மதித்தல் ஆகும்

அறிவியல் துறையை படித்த ஒரு மனிதனை அந்த பார்வையில் பார்ப்பது தான் அவரை மதித்தல் ஆகும்

என் பார்வையில் இவ்விரு சாராரும் மனிதன் தான் எனவே இவ்விரு சாராரும் என்னை போல் உள்ளவர்கள் தான் எனக்கு இருக்கும் பகுத்தறிவு தான் இவர்களுக்கும் உள்ளது  என்று அந்த துறையில் தேர்ச்சி பெறாத ஒருவன் வாதிட்டால் அவன் அறியாமையில் பேசுகிறான் அல்லது அறிவு  ஆணவத்தில் பேசுகிறான் என்பது தான் எதார்த்தமான  பொருள்

சஹாபாக்கள் மனிதன் என்ற முறையில் நம்மை போன்று இருந்தாலும் அவர்களுக்கு என்று இந்த சமூகத்தில் தனி அந்தஸ்த்தை நபியவர்கள்  வழங்கியே உள்ளார்கள்

அதனால் தான் அன்சாரி சஹாபாக்களை நேசிப்பதையும் ஈமானோடு தொடர்பு படுத்தி அதையும்  சுன்னத் என்றார்கள்

உஹது மலை அளவு நாம் தர்ம பொருளை வழங்கினாலும் சஹாபாக்கள் செய்த ஒரு கைப்பிடி அளவு தான தர்மத்தின் நன்மையை கூட மறுமையில்  உங்களால் பெறவே முடியாது என்றும் சொன்னார்கள்

இப்போது ஒரு முஸ்லிம் குறுக்கிட்டு அது என்ன தர்ம பொருளின் நன்மையில் கூடவா வேறுபாடு  ?

குறைந்தளவு தர்மம் செய்பவர்களுக்கு கூடுதல் நன்மையும் அதிக அளவு தர்மம் செய்பவர்களுக்கு குறைந்த அளவு நன்மையும் தருவதற்க்கு அல்லாஹ் என்ன அநீதக்காரனா ?
என்று வாதிட்டால் அவன் அவனுடைய  பகுத்தறிவால் பேசுகின்றானே தவிர
சஹாபாக்களை எந்த முறையில் மதிக்க வேண்டும் என்று நபியவர்கள் கற்று தந்தார்களோ அந்தளவு அவன் மதிக்கவில்லை என்றே பொருள் ஆகும்

திருக்குர்ஆனுக்கு அறிவியல் கரை கண்ட ஒரு மனிதன் சொல்லும் விளக்கத்தை விட அந்த வசனத்தை நபிகளாரிடம் நேரடியாக கேட்டறிந்த சஹாபாக்கள் சொல்லும் கருத்துக்கே முக்கியதுவம் அளிப்பது தான் சஹாபாக்களை மதித்தல் என்பது

அப்படியானால் இன்றைய விஞ்ஞான கண்டு பிடிப்புகளை அப்போதே சஹாபாக்கள் மந்திரத்தால் அறிந்து விட்டார்களா ? என்று எதிர் கேள்வி கேட்டால் அவன் குருட்டுத்தனமாக வாதம் செய்கிறான் என்று பொருள்

காரணம் அறிவியல் சார்ந்த விசயங்களுக்கு இது தான் விளக்கம் என்று எந்த சஹாபாக்களும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் சொல்லி கொண்டு திரியவில்லை

வாழ்கையில் தவறுகளை செய்த சஹாபாக்கள் அந்த தவறுகளை நினைத்து எந்தளவு வருந்தி உள்ளனர் என்று சிந்தித்தால் அவன் சஹாபாக்களை மதித்தவன் ஆவான்

சஹாபாக்களே தவறு செய்து இருக்கும் போது நாம் தவறு செய்யாமல் இருக்க முடியுமா ? என்று ஒருவன் தான் செய்த தவறுக்கு சஹாபாக்களின் பழமை வரலாறுகளை  ஆதாரமாக காட்டி தனது தவறை சிந்திக்க உணர மறுத்தால் அல்லது மூடி மறைக்க முற்பட்டால்  அவன் சஹாபாக்களை அவமதிப்பவன் என்று தான் பொருள்

இந்த அடிப்படை சாரத்தை புரியாது ஒருவன் பல வருடம் அழைப்பு பணி செய்தாலும் அவன் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தான் பொருள்

சஹாபாக்களை மதிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை

அவர்களை எந்த முறையில் மதிக்க வேண்டும் என்ற நெறிமுறையில் ஏற்பட்ட கோளாறுகளே இதை விளக்கி சொல்லும் நிலையை சந்தித்து உள்ளது

اِنَّ اَوْلَى النَّاسِ بِاِبْرٰهِيْمَ لَـلَّذِيْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِىُّ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ وَاللّٰهُ وَلِىُّ الْمُؤْمِنِيْنَ‏ 

நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள்அவரைப் பின்பற்றியோரும்

இந்த நபியும் (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார் மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்

         (அல்குர்ஆன் : 3:68)

قال رسول الله - صلى الله عليه وسلم

  أَنزلوا النَّاس منازلهم 

رواه أبو داود 

மனிதர்களை அவர்களின் தகுதிகளுக்கு ஏற்ற நிலையில் மதிக்குமாறு நபி ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள்

   நூல்  சுனன் அபூதாவூத் 4842

        நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்