தொலைகாட்சி பாலியல் நிகழ்சி

  தொலைகாட்சிகள் ஒளிபரப்பும்

         கேடுகெட்ட பாலியல்

               !! நிகழ்சிகள் !!

♦♦♦♦♦♦♦♦♦♦♦

                       20-10--18

கட்டுரை எண்1191 சனி கிழமை 
                      
           !!J . Yaseen iMthadhi !!
                   **************

                 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ  
          
         ★★★★★★★★★★★

பல் முளைத்த குழந்தை முதல் பல் இழந்த முதியவன் வரை

எப்படி சாப்பிடுவது எந்த வழியில் சாப்பிடுவது ?

எப்படி அருந்துவது எந்த வழியில் அருந்துவது

எப்படி மலம் ஜலம் கழிப்பது எந்த வழியில் அவைகளை கழிப்பது

என்றெல்லாம் கேட்டு அறிவதும் இல்லை அவைகளை எல்லாம் அன்றாடம்  நிறை வேற்ற தவறுவதும் இல்லை

காரணம் இறைவனின் இயற்கை அமைப்புகள் நேரத்திற்க்கும் காலத்திற்க்கும் பருவத்திற்க்கும் இயல்புக்கும்  உருவத்திற்க்கும் ஏற்றார் போல் நாம் விரும்பியும் விரும்பாமலும் முறையாக செயல் படும் விதத்தில் தான் இறைவன் கட்டமைத்து உள்ளான்

காரணம் இறைவன் ஈடில்லாத ஞானமுடையவன்

இயல்புக்கு மாற்றமான இயற்கைக்கு மாற்றமான ஒன்றை மனிதனின் மனம் விரும்புகின்ற போதும்
அதற்க்கு அடிமை படுகின்ற போதும் தான் மனிதன் அறிவிலியாக மூடனாக மாறுகின்றான்

அவ்வகையில் பாலியல் பற்றிய பாடங்களை சொல்லி கொடுத்து புரிய வைக்கும் விதத்தில் எந்த உயிரையும் மனிதனையும் இறைவன் படைக்கவில்லை 

பைத்தியகாரனாக இருந்தாலும் பிச்சைக்காரனாக இருந்தாலும் இந்த உணர்வுகள் அதன் செயல் முறைகள் இயல்பாகவே  உடலியல் அமைப்பில் துல்லியமாக  அமைந்தே இருக்கும்

இதை மூடி மறைத்து தமிழ்  தொலைகாட்சிகளில் இரவு நேரங்களில்

சமையல் மந்திரம்

தேன் நிலவு

போன்ற பெயர்களில் மருத்துவத்தின் பெயரில் ஒழுக்க கேடான பேச்சுக்களை அருவருக்கதக்க செய்கைகளோடு கீழ்த்தரமான  நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து கோடிகளை ஈட்டி வருகின்றனர்

எது போன்ற காட்சிகள் குடும்ப வாழ்வின் இனிமையை நாசமாக்குகிறதோ அவைகளை தம்பதியர்கள் கூட்டாக இணைந்து  காணுவதும் கூட சரியே என்று பேசும் அறிவிலிகளாக பாலியல் மருத்துவர்கள் உள்ளனர்

இதில் கேடுகெட்ட தன்மை என்னவென்றால் பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லும் பாலியல் வியாபாரி மருத்துவரோடு சில பெண்களும் அங்கம் பெற்று அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தான் அருவருக்க தக்க காரியமாகும்

தொலை பேசி மூலம் பாலியல் சந்தேகம் கேட்போரிடம் துவக்கமாக அந்த பெண்கள் ஆபாசமாக பேசுவதும் தங்களுடைய மேனியை முன்னுதாரணமாக்கி பேசுவதும் அவர்கள் தங்களை வேஷிகளாக சித்தரிக்கும் நிகழ்ச்சியாகவே உள்ளது

பெண்ணை காட்சி பொருளாக காட்டினால் விளம்பரமும் கிடைக்கும் வருமானமும் பெருகும் என்ற கீழ்த்தரமான எண்ணங்களோடு பாலியல் மருத்துவர்கள் நடத்தும் கேடுகெட்ட  நிகழ்ச்சியே இவைகளாகும்

கூத்தாடிகளின் பேட்டிகளையும் சினிமாக்களையும் மூலதனமாக்கியே கோடி கோடியாக சம்பாரிக்கும் ஈனத்தனமான தமிழ்  தொலைகாட்சிகள் இவைகளை விளம்பரதாரர் நிகழ்ச்சி என்று பரப்புவது அவர்களும் ஒழுக்க கேடர்களே என்பதை தெளிவாக காட்டுகின்றது

இது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு மக்கள் தங்களுடைய எதிர்ப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்தி காட்ட வேண்டும்

اِنّ اللهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَاْلاِحْسَانِ وَاِيْتَائئِ ذِي الْقُرْبي وَيَنْهي عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ ج يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْن

நிச்சயமாக அல்லாஹ், நீதி செலுத்துமாறும் நன்மை செய்யுமாறும் உறவினருக்குக் கொடு(த்து ஆதரி)க்குமாறும் கட்டளையிடுகிறான்

மேலும் மானக்கேடானவை, வெறுக்கப்பட்டவை, அழிச்சாட்டியம் ஆகியவற்றைவிட்டும் (உங்களை) விலக்குகிறான்

நீங்கள் நினைவில் நிறுத்துவதற்காக
(இதனை) உங்களுக்கு அவன் உபதேசிக்கிறான்

      சூரா  நஹ்லு வசனம் 90

        நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்