தள்ளாடும் பகுத்தறிவும் நபிகளாரின் பகுத்தறிவும்
தள்ளாடும் பகுத்தறிவும்
நபிகளாரின் பகுத்தறிவும்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
27-08-18- திங்கள் கட்டுரை எண் 1179
***************
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
மனிதருள் மாணிக்கம் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள்
யார் இவர் ? என்ற கேள்விக்கு இஸ்லாமிய உலகில் தெளிவான அறிவுப்பூர்வமான பதில் உண்டு
ஆனால் இவர் எப்படி இருப்பார் ?
இவரது உயரம் என்ன ?
இவரது நிறம் எப்படி இருக்கும் ?
இவரது முகத்தின் தோற்றம் எப்படி இருக்கும் ?
என்று உலகில் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை நேரடியாக பார்த்த மக்களுக்கு பிறகு எவருக்குமே இன்று வரை தெரியாது
உலகில் ஒரே ஒரு புகைப்படத்தில் கூட இடம் பெறாதவர் நபிகள் நாயகம்
முகமே தெரியாத ஒருவரின் கொள்கையும் அவர் கூறிய இறை கோட்பாடுகளும் இன்று வரை பல கோடி மக்களால் உயிரிலும் மேலாக மதிக்கப்படுகிறது
ஏன் வாழ்வியலில் நடை முறையில் அவரது வாயில் உதிர்ந்த சொற்களுக்கு எழில் மிகு உருவமும் அன்றாடம் கொடுக்கப்படுகிறது
செத்ததற்க்கு பின்னாலும் தன்னை மக்கள் மறந்து விட கூடாது என்பதற்காக உயிரோடு வாழும் போதே தன் மரணத்திற்க்கு பின்னால் தன்னை அடக்கம் செய்ய வேண்டிய பிரபல்யமான இடம் எது என்றும்
அவ்வாறு அடக்கம் செய்யப்படும் இடத்தில் கோடான கோடி ரூபாய்களில் கட்டிடம் எழுப்பி அதன் மீது மணிமண்டபங்களை உருவாக்கி வருடா வருடம் தனக்கு நினைவு நாள் கொண்டாடுங்கள் என்று கட்டளை போடும் தலைவர்களுக்கு மத்தியில்
தன் மரணத்திற்க்கு பின்னால் கூட தனது மண்ணறையை எழுப்புவதும் தன்னை வரம்பு மீறி துதிப்பதும் தன்னை புகழ்வதற்காக பிறர்களை கொச்சை படுத்துவது மாபெறும் பாவம் என்றும் அதுவே இறைவனுக்கு செய்யும் முக்கியமான துரோகம் என்றும் அவர் உயிரோடு இருக்கும் போதே அழுத்தமான கட்டளையை போட்டு அவர் மரணித்து பதினான்கு நூற்றாண்டுகள் கழிந்த பின்பும்
!! பகுத்தறிவுக்கே பகலவனாக !!
இன்று வரை கோடான கோடி மக்களின் இதயங்களில் நிலையான நீங்காத இடத்தை பிடித்தவர் மாசில்லா மாநபி நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள்
தனது காலை கழுவி குடிக்கும் ஆன்மீக அறிவீன மக்களை கண்டு ஆனந்தம் அடையும் போலியான ஆன்மீக குருமார்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில்
தனது ஆட்சியில் கீழ் நிலையில் இருக்க கூடிய ஒரு சாதாரண குடிமகனும் கூட தனது வருகையை கண்டு மரியாதைக்காக எழக்கூடாது என்றும்
அவ்வாறு எழுவதை நான் மனித இனத்தின் சுயமரியாதைக்கு இழுக்காக கருதுகிறேன் என்றும் பகுத்தறிவுக்கு மதிப்பளிக்கும் மாசற்ற கொள்கையை சொல்லி அதிலேயே நிலையாக நின்றவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
சாமி சிலைகளுக்கு மாலை போட்டால் கற்களால் செதுக்கப்பட்ட சிலைகளா அவைகளை விளங்க இயலுமா ?
என்று பகுத்தறிவு பேசி விட்டு தாங்கள் மதிக்கின்ற தலைவர்களின் சிலைகளுக்கு வருடம் தோறும் மாலை போடுவதும் அந்த சிலைகளுக்கு முன்னால் தலை சாய்த்து முட்டி போட்டு நின்று கைகூப்பி வணங்குவதும் தான் இன்றைய பகுத்தறிவு ( ? ) பகலவர்களின் அவல நிலையாக மாறி விட்டது
இதற்க்கு மூல காரணம் பகுத்தறிவு என்று பேசி விட்டு பகுத்துணராத கொள்கையை பகுத்தறிவு கொள்கையாக தூக்கி பிடித்தது தான் இவர்களின் இழி நிலைக்கே அடிப்படை ஆகும்
தன் தாயை விட தந்தையரை விட உற்றார் உறவினர்களை விட
ஏன் தன் உயிரை விட மேலாக
இதயத்தில் சுமக்கும் நபிகளாரை வாழ்வில் ஒரே ஒரு முறை கூட எங்கள்
இதய தெய்வம் என்றும்
உடல் மண்ணுக்கு உயிர் எங்கள் நபிகளாருக்கு என்று
வார்த்தை அளவில் ஒரு முஸ்லிமும் கூட கூறி இருக்கவே மாட்டான்
அவ்வாறு கூற வேண்டும் என்று கற்பனையில் கூட கருதி இருக்க மாட்டான்
இப்போது சிந்தியுங்கள்
யார் சொன்ன கொள்கை பகுத்தறிவு
===================
சமாதிகளில் கட்டடம் கட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்
(முஸ்லிம் 1765, திர்மிதீ 972)
கட்டப்பட்ட சமாதிகளை இடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்
(முஸ்லிம் 1763, 1764, திர்மிதீ 970)
என் அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்
(அஹ்மத் 7054)
என்னை வரம்பு மீறி புகழாதீர்கள் என்று நபியவர்கள் கூறினார்கள்
புகாரி 3277
************
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment