அரஃபா நோன்பும் ஆறாத மாறாத சர்ச்சையும்
அரஃபா நோன்பும்
ஆறாத மாறாத சர்ச்சையும்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
20-08-18- ஞாயிறு கட்டுரை எண் 1178
***************
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இபாதத்துகளை செய்ய வேண்டிய கால கட்டத்தையும் அதன் பொன்னான நேரத்தையும் நம்மையும் அறியாமல் வீண் தர்க்கங்களிலே செலவழிக்க செய்வதில் தந்திரமானவன் சாத்தான்
பல வருடங்களாக இதில் சாத்தான் வெற்றி பெற்று முன்னனியில் நிற்பதை எவராலும் மறுக்க இயலாது
குறிப்பாக சவுதியின் அரஃபா நாளை முன் வைத்து நோன்பை கடை பிடிக்கும் நபர்களை மார்க்க அறியாத சூனியங்களாக பார்ப்பதும்
இஸ்லாத்தின் எதிரிகளாக சவுதியின் அடிமைகளாக விமர்சிப்பதும் சிலர்களுக்கு அழகிய தஃவா என்று மூளை சலவை செய்யப்பட்டுள்ளது
ஒவ்வொரு சாராரும் அவர்கள் அறிந்த ஆதாரத்தின் அடிப்படையில் தங்களது இபாதத்துகளை அமைத்து செயல் படுவது மார்க்கத்தில் குற்றம் ஏதும் இல்லை
இதில் ஏதோ குடும்ப சொத்தை பறிகொடுத்து விட்டதை போல் மாற்று செயலில் உள்ளவர்களை கண்டித்து அறிக்கை போட்டு திரிவது அவசியம் அற்றது
அது போக சவுதியை கடுமையாக விமர்சிக்கும் நபர்களும் பிறை விசயத்தில் பல கட்டங்களில் பல விதமான அவதாரம் தான் எடுத்துள்ளனர்
இதை பல வருடம் கண்டு வரும் எவரும் மறுக்க இயலாது
தத்தம் பகுதியில் காணப்படும் பிறையை வைத்து அந்தந்த பகுதியில் நோன்பை கடை பிடியுங்கள் என்று அவர்கள் பிரச்சாரத்தை துவங்கிய போது அவர்களே மாவட்டத்துக்கு மாவட்டம் மாறு பட்டும் பிளவு பட்டும் இருந்தனர்
அந்த காலத்தில் தமிழக அளவில் ஒன்றிணைந்து நோன்பு நோற்றவர்களை கூட ஏதோ இஸ்லாத்தின் எதிரிகளாக தங்களது பிரச்சாரங்களிலே சித்தரித்தனர்
அதன் பிறகு படி படியாக அவர்களே தமிழக அளவில் ஒன்றிணைந்து பிறை விசயத்தில் நோன்புகளை கடை பிடித்தனர்
அதுவரை தத்தம் பகுதியே பிறையின் எல்லை என்று செயல் பட்டவர்களுக்கு தமிழகமே நமது எல்லை என்ற நிலையை அறிவித்த போது அதை பற்றி அறவே கேள்வி கேட்காது ஜீரணித்து கொண்டனர்
நாளடைவில் இது இந்திய அளவிலும் அண்டை நாடுகள் அளவிலும் பரிணாமம் பெறும் என்றே அவர்களின் மாறுபட்ட செய்கைகள் இப்போதும் நம்மை சிந்திக்க வைக்கிறது
அவர்கள் ஒரு காரியத்தை செய்யாத போது அதை செய்யாதவர்களை மென்மையாக பார்ப்பது
அவர்கள் அக்காரியத்தை செய்ய வேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்து விட்டால் உடனே அந்த காரியத்தை செய்யாதவர்களை கடினமாக பார்ப்பது என்பது அவர்களின் வாடிக்கையாகி விட்டது இவ்வாறு தொடர்ந்து உளவியல் ரீதியான சமூக வெறுப்புக்கு ஆளாகி விட்டனர்
எனவே விமர்சனங்களை ஒதுக்கி வைத்து விட்டு அவரவர்களுக்கு சரி என்று படும் நிலைபாட்டையே பின்ற்றுங்கள்
காரணம் நீங்கள் செய்யும் செயலுக்கு இவர்களும் கூலி கொடுக்க போவது இல்லை
இவர்கள் செய்யும் செயலுக்கு நீங்களும் கூலி கொடுக்கப்போவது இல்லை
بَلِ اتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْۤا اَهْوَآءَهُمْ بِغَيْرِ عِلْمٍ فَمَنْ يَّهْدِىْ مَنْ اَضَلَّ اللّٰهُ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ
எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்?
மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர்
(அல்குர்ஆன் : 30:29)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment