இறைவன் வில்லனும் அல்ல அறிவிலியும் அல்ல
இறைவன் மனித சமூகத்தின்
வில்லனும் அல்ல அறிவிலியும் அல்ல
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
19-08-18- ஞாயிறு கட்டுரை எண் 1177
***************
!!J . Yaseen iMthadhi !!
**************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இறைவன் வழங்கும் அருள் மழையால் அழிவுகள் ஏற்படுவது இல்லை
மாறாக அம்மழையை சேமிக்கும் நாட்டின் அனைகளை விஸ்தீரணம் செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் அரசாங்கம்
அதற்க்கு முயற்சி செய்யாமல் மழையால் அனைகள் நிறைந்த பின்பு நாட்டின் அனைகள் மழை நீரின் அழுத்தத்தால் உடைந்து விடுமோ என்ற அச்சத்தில்
அதுவரை பிற தேசங்களுக்கும் ஒரு சொட்டு நீரை தரமாட்டோம் என்று சேமித்து வைத்த நீரையும் சேர்த்து மழைநீரோடு திறந்து விடுவது தான் பல அழிவுகளுக்கு மூல காரணம்
அதனால் தான் அனைகளின் ஓரங்களில் வாழும் அப்பாவிகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் வீட்டை இழக்கிறார்கள் உயிரை இழக்கிறார்கள்
அரசியல்வாதிகள் இயற்கையின் மீதும் இறைவனின் மீதும் பழி போட்டு தப்பிக்க ஏக இறைவன் மனித சமுதாயத்தின் வில்லன் அல்ல
மனித சமுதாயத்திற்க்காக அவன் படைத்த பாக்கியங்களை பயன்படாமல் சீரழிக்க அவன் அறிவிலியும் அல்ல
மாறாக அவன் நம்மை பெற்ற தாயை விட 70 மடங்கு கருணை உள்ளவன்
இது போன்ற சூழல்களில் அரசாங்க குற்றவாளிகள் நாட்டு மக்களோடு இணைந்து கொண்டு அஞ்சலி அறிக்கை போடுவதும் அனுதாப நீலிக்கண்ணீர் வடிப்பதும் உதவிகளை கேட்டு புலம்புவதும் வாடிக்கையாகி போனது
இலவசங்களோ சலுகைகளோ நாட்டு மக்களுக்கு தேவை இல்லை
காரணம் ஆட்சி கட்டிலில் ஏற அரசியல்வாதிகள் தரும் இலவச அறிக்கைகள் தான் விலைவாசியை கூட்டி கொண்டே செல்கிறது
அனைகளை சீரமைத்து புதிய அனைகளை எழுப்பி ஆறு குளங்களை தூர் வாரி வான் வழிகின்ற பொழிகின்ற பாக்கியம் நிறைந்த அருள் மழை நீரை சேமிக்க உத்தரவாதம் வழங்கும் அரசியல்வாதிக்கே ஓட்டு போடுவோம் என்று நாட்டு மக்கள் முடிவெடுக்காத வரை
நம் நிலை மாறாது மாற்றங்களும் துளிராது
அவர் வாழ்க இவர் வாழ்க தானைத்தலைவர் இதய தெய்வம் என்ற அறிவீன கோஷங்களை இனிமேலாவது குப்பை தொட்டிக்கு சொந்தமாக்கி விட்டு
நாம் வாழ கோஷம் எழுப்புவோம் அதுவே அறிவார்த்தமான முடிவாகும்
الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْـتُمْ تَعْلَمُوْنَ
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்
(இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்
(அல்குர்ஆன் : 2:22)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment