தற்காப்பே இறையச்சம்
தக்வா என்றாலே தற்காப்பது
•••••••••••••••••••••••••••••••••••••••
17-08-18 வெள்ளி கட்டுரை 1176
******************
ஆக்கம் - ஜே.யாஸீன் இம்தாதி
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
وسأل عمر كعبا فقال له: ما التقوى؟ فقال كعب: يا أمير المؤمنين أما سلكت طريقا فيه شوك؟ قال: نعم. قال: فماذا فعلت؟ فقال عمر: أشمر عن ساقي، وانظر إلى مواضع قدمي وأقدم قدما وأؤخر أخرى مخافة أن تصيبني شوكة. فقال كعب: تلك هي التقوى.
முற்கள் புதர்கள் உள்ள பாதையை கடக்கும் போது
நீங்கள் எவ்வாறு கடந்து செல்வீர்கள் என்று உமர்( ரலி) அவர்களிடம் கஅபு (ரலி) அவர்கள் கேட்ட போது
எனது ஆடை கிழிந்து விடாமலும் எனது மேனியில் சகதி படாத நிலையிலும் கவனமாக அந்த பாதையை கடப்பேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறிய போது
இதற்க்கு பெயர் தான் தக்வா என்று கஅபு ( ரலி) அவர்கள் விளக்கம் தந்தார்கள்
ஈமானிய உணர்வோடு உலகில் வாழும் போது அந்த ஈமானை சிதற வைக்கும் ஆசாபாசங்கள் வழிகேடுகள் ஈமானிய உணர்வு உள்ளவனை தாக்க முற்படும்
அவனை முன்னோக்கி பல இடையூறுகள் பல வகைகளில் எதிர் கொள்ளும்
அந்த சூழலில் தனது ஈமானை ( இறை நம்பிக்கையை ) பாதுகாக்கும் விதமாக ஒரு ஈமான்தாரி நடந்து கொள்வான்
என்று விளக்கம் சொன்னார்கள்
ஆக ஈமான் (இறை நம்பிக்கை) என்பது ஒரு முஸ்லிம் தனது முகத்தில் வளர்த்தும் தாடியிலோ அணியும் வெள்ளை ஆடையிலோ உருட்டும் கையின் தஸ்பீஹ் மணியிலோ பேசும் நல்ல வார்த்தையிலோ இல்லை
மாறாக அவனது ஈமானை தீயவைகளில் இருந்து தற்காத்து கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தான் உள்ளது
தக்வா என்றாலே தற்காத்து கொள்வது என்பது தான் சுருக்கமான விளக்கம்
ஸ்பை ( உளவு ) கேமராக்களுக்கு பயந்து தவறுகளில் இருந்து விடுபடுவது இறையச்சம் அல்ல மாறாக இருட்டறையில் தனிமையில் இருந்தாலும் நமது கண் அசைவுகளை கூட இறைவன் கண்காணிப்பான் என்ற உணர்வில் தவறுகளை விட்டு விலகி இருப்பதே தக்வா எனும் இறையச்சமாகும்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment