இந்தியாவை உருவாக்கியவர்கள்
வரலாறுகளை அறியாது
சுதந்திரத்தை மெச்சாதீர்
•••••••••••••••••••••••••••••••••••••••
15-08-18 செவ்வாய் கட்டுரை 1175
******************
ஆக்கம் - ஜே.யாஸீன் இம்தாதி
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இந்தியா வெள்ளையனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை நினைவு கூறும் பலர்களுக்கு
இந்தியா எனும் பிரமாண்ட நாடு யாரால் உருவானது ? எப்படி உருவானது ? என்ற ஞானம் கூட அநேகமானவர்களுக்கு அறவே இல்லை
முகலாய மன்னர்களின் வருகை இல்லை என்றால் இந்தியா என்பதே தமிழகத்தை விட சிறியதாக தான் இப்போதும் இருந்து வரும்
காரணம் சேரநாடு சோழநாடு பாண்டியநாடு என்றெல்லாம் பல நாடுகளாக நாம் வாழும் தமிழகம் தான் பல கூறுகளாக பிளவு பட்டு பல நாடுகளாக பல காலமாக இருந்தது
தமிழகம் எனும் ஒரு மாநிலமே பல நாடுகளாக இருந்தது என்றால் ஒட்டு மொத்த இந்தியாவும் எத்தனை ஆயிரம் நாடுகளாக காட்சி தந்திருக்கும்
அந்த நாடுகளை எல்லாம் ஒன்றிணைத்து பிரமாண்டமான இந்தியாவை உருவாக்கியது யார் ? காந்தியா அல்லது நேருவா ?
காந்தியும் நேருவும் பிறப்பதற்க்கு முன்பாகவே பிரமாண்ட இந்தியாவை உருவாக்கியவர்கள் முகலாய மன்னர்கள்
படை எடுத்து முகலாயர்கள் வருகை தந்தாலும் அவர்களின் வருகையின் பின்பு தான் இந்தியா எனும் சொல்லே அழகு பெற்றது
முகலாய மன்னர்கள் உருவாக்கிய இந்தியாவில் பாகிஸ்தான் இருந்தது
சுதந்திர இந்தியாவில் தான் பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து வேறு நாடாக ஆனது
முகலாய மன்னர்கள் உருவாக்கிய இந்தியாவில் உஸ்பெகிஸ்தான் தஜிகிஸ்தான் போன்ற பல இடங்கள் இருந்தது
சுதந்திர இந்தியாவில் தான் அவைகள் நம் இந்தியாவில் இருந்தே மூடர்களால் காணாது போனது
இதில் பாராட்டுக்கு உரியவர்கள் முகலாய மன்னர்களா ? அல்லது சுதந்திர இந்தியாவில் இந்திய திரு நாட்டை துண்டாடிய துரோகிகளா
உருவாக்கியவர்களின் சரித்திரம் தெரியாமல் சுதந்திரத்திற்க்கு மிட்டாய் கொடுத்து கொண்டு திரிவது சிறுபிள்ளைகளின் செயல்முறை
வரலாற்றை புரிவோம் தியாகிகளை போற்றுவோம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment