எது கொள்கை உறுதி
சாடுவதும் தூற்றுவதும்
கொள்கை உறுதிக்கு சான்றா
•••••••••••••••••••••••••••••••••••••••
13-08-18 திங்கள் கட்டுரை 1174
******************
ஆக்கம் - ஜே.யாஸீன் இம்தாதி
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
மனிதனின் புரியும் ஆற்றலும் விளக்கி சொல்லும் ஆற்றலும் நபருக்கு நபர் மாறுபட்டவை
அவரவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எது சரி என்று விளங்குகிறதோ அதை தான் நடை முறை படுத்துவார்கள்
அவ்வாறு தான் முஸ்லிம்கள் செயல் பட வேண்டும் என்பதும் இஸ்லாமிய மார்க்கம் கற்று தரும் போதனையே
இதில் ஒரு சாரார் மறு சாராரை குறை கூறுவதையே மார்க்க பணியாக கருதுவதும் மாற்று கருத்துள்ள பிறர்களை இஸ்லாத்தின் பரம எதிரிகளை போல் சித்தரிப்பதும் விமர்சிப்பது மார்க்க நெறிமுறைக்கு எதிரான செயலாகும்
எதிர் தரப்பு வாதங்களை நாம் அறிந்த ஆதாரங்களின் அடிப்படைகளை மேற்கோள் காட்டி மார்க்க உணர்வுடன் விளக்கி சொன்னால் போதுமானது
நீ வைத்த நோன்புகள் எல்லாம் செல்லாது நீ கொண்டாடும் பெருநாட்கள் எல்லாம் தவறானது நீங்கள் எல்லாம் இஸ்லாத்தை அழிக்க துடிக்கும் பாவிகள் யூதர்களின் கைக்கூலிகள் என்றெல்லாம் செய்யப்படும் விமர்சனங்களால் இது வரை எவ்விதமான சமூக மாற்றமும் ஏற்படவில்லை
அப்துல்லாஹ்வை பார்த்து அப்புச்சாமிகள் காஃபிர் என்று சொன்னால் அதை ஜீரணிக்காத அப்துல்காதர்கள்
அதே அப்துல்லாஹ்வை முஸ்ரிக் என்றும் காஃபிர் என்றும் அப்துல்காதர்கள் சொன்னால் அதற்க்கு பரிந்து பேசுவதும் பெருமை அடைவதும் தான் கொள்கை உறுதியா
இவ்வுலகில் யாரும் யாருடைய செயல்களுக்கும் நல்ல அமல்களுக்கும் எடை போட்டு இறைவன் மறுமையில் வழங்க இருக்கும் கூலிகளை கொடுக்கப்போவது இல்லை
لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம்
(அல்குர்ஆன் : 109:6)
( உங்கள் கொள்கை உங்களுக்கு எங்கள் கொள்கை எங்களுக்கு ) என்ற திருமறை குர்ஆன் போதனை மாற்றார்களுக்கு மாத்திரம் உரியது அல்ல
மாறாக அதுவும் முஸ்லிம்களை கட்டுப்படுத்தும் என்பதை நினைவில் வையுங்கள்
கனிவும் மென்மையும் பேணாத அறிவுரைகள் ஏட்டளவில் தான் இடம் பிடிக்கும்
அது மனிதர்களின் உள்ளங்களில் தடம் பதிக்காது
முஸ்லிம்களை காஃபிர் என்று புறம் தள்ளி உபதேசம் செய்வதை விட இஸ்லாத்தை ஏற்று கொண்ட முஸ்லிம்களாகிய நாம் இவ்வாறு செய்யலாமா ? என்ற ஏக்க வார்த்தைகளோடு அழைப்பு பணியை செய்து பாருங்கள் அது உங்கள் எதிரிகளின் சிந்தனையை கூட செதுக்க துவங்கும்
அதன் மூலம் அவனது வழிகேடுகளை அதுவே முடக்க துவங்கும்
கடுமையாக பிறர்களை சாடுவது தான் கொள்கை உறுதி என்பதற்க்கு சரியான அளவு கோள் என்று சொன்னால் நம்மை விட பல மடங்கு இஸ்லாத்தின் நேரடி எதிரிகளும் காவிகளும் நபிகளாரின் காலத்தில் வாழ்ந்து மடிந்த அபுஜஹ்ல் உத்பா ஷைபா போன்றோர் தான் உண்மையான கொள்கை உறுதியாளர்கள்
காரணம் அவர்களின் கொள்கை மீது அவர்களுக்கு இருந்த ஈமானிய உணர்வு கூட தற்காலத்தில் நம்மிடம் இல்லை என்பது தான் உண்மை
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment