முதுமையும் இறைவனின் பேரருளே

         முதுமையும் இறைவன் தந்த

                         பேரருள்

••••••••••••••••••••••••••••••••••••••••

30-07-18 திங்கள் கட்டுரை 1170
                ******************

    ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி
                  *************
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியானாலும் உலக  சர்வ அதிகாரத்தின் உரிமையாளனாக இருந்தாலும்

அவைகளை வைத்து அவன் ஆசை படும் காரியங்களை எல்லாம் அடைய முடியாது என்பதற்க்கு இறைவன் ஏற்படுத்திய இயற்கை அமைப்பே  முதுமை

அறிவியல் துணை கொண்டு ஆயிரம் புதுமையை மனிதன் கண்டு பிடித்தாலும் அவனது முதுமையை மேலோட்டமாக மறைத்து சில நாட்கள் வாலிபன் போல் நாடகம் ஆட முடியுமே தவிர முதுமையின் பலவீனங்களை எவராலும் வெல்ல முடியாது

வாலிப பருவத்தில் ஆசை படுபவைகளை எல்லாம் அடையும் வசதிகளை பெற்றவனும் கூட முதுமையில் அந்த ஆசைகளை நிறைவேற்ற இயலாத பலவீனமான உடல் நிலைமைக்கே தள்ளப்படுவான்

ஒரு விதத்தில் பார்த்தால் பாவங்களில் இருந்து மனிதன் விடுபடுவதற்க்கு  முதுமை கூட இறைவன் வழங்கியுள்ள பேரருளே ஆகும்

அதனால் தான் முதுமையின் அடையாளமான வெள்ளை நிற முடிகளை கூட கருநிறமாக மாற்றும் சாயங்களை அடிக்க கூடாது என்று இஸ்லாம் தடை செய்கிறது

அறிவியலில் ஆயிரம் தடைகளை தாண்டி மனிதன் பயணித்தாலும் இயற்கை என்ற இறைவனின் அமைப்பில்

ஒட்டு மொத்த உலகமும் சேர்ந்தாலும் ஒரே ஒரு அடியை கூட மனிதனால் தாண்டவே முடியாது என்பதற்க்கு அவனது  முதுமையே முதன்மையான சான்று


4988 أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ اللَّهِ الْحَلَبِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ وَهُوَ ابْنُ عَمْرٍو عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَفَعَهُ أَنَّهُ قَالَ قَوْمٌ يَخْضِبُونَ بِهَذَا السَّوَادِ آخِرَ الزَّمَانِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ رواه النسائي

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

புறாவின் கழுத்தில் உள்ள (தூய கருப்பு நிறத்)தைப் போன்ற கருப்புச் சாயத்தைப் பூசிக்கொள்ளும் ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றும். அவர்கள் சொர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : நஸாயீ

3925 و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ رواه مسلم

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூ குஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார்

அவரது தலை முடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்

கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்

நூல் : முஸ்லிம்

وَمَنْ نُّعَمِّرْهُ نُـنَكِّسْهُ فِى الْخَـلْقِ‌ اَفَلَا يَعْقِلُوْنَ‏ 

மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்

அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா  ?

(அல்குர்ஆன் : 36:68)

          நட்புடன்   J .  இம்தாதி

    

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்