கருணாநிதி

        கலைஞர் கருணாநிதியும்

        இறை நம்பிக்கையாளனின்

                     நம்பிக்கையும்

குறை கூறியே குற்றவாளியாக

            மாறும் மனிதர்கள்

    ••••••••••••••••••••••••••••••••••••••••

27-07-18 வெள்ளி  கட்டுரை 1169
                ******************

    ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி
                  *************
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

திமுக கலைஞர் கருணாநிதிக்கு என்ன ஆனது

அப்படியா   இப்படியா  ?

தமிழகமே சோகத்தில் சிக்கியுள்ளது

அறிஞர் அண்ணா சமாதிக்கு அருகில் தான் கருணாநிதிக்கு  சமாதி தோண்டப்படுகிறது

இனி நம் மாநிலத்தை யார் காப்பாற்றுவது  ?

அவரை வாழ்த வயதில்லை எனவே நான் வணங்குகிறேன் என்றெல்லாம் சுயமரியாதை இழந்து

அவசியமில்லாத பதிவுகளை இறை நம்பிக்கை உள்ள முஸ்லிம்களும் கூட இறைவனின் விதியை வெறுப்பதை போலே  தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

முதுமை வரும் போது அல்லது இறை நாட்டம் துளிரும் போது யாவரும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும் என்பதே குர்ஆனிய போதனை

மாமனிதர் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின் இழப்பையே சாதாரணமாக எடுத்து கொண்டு ஈமான் எனும் இறை நம்பிக்கையை அதிகமாக்கி கொண்ட பரம்பரையை சார்ந்தவர்கள் நாம்

உலகையே கட்டி போட்டு ஆண்டாலும் மண்ணறையில் தனிமையில் போயே தீர வேண்டும் என்பது தான் ஜீவனுள்ள அனைத்துக்கும் பிரபஞ்சத்தில்  இறைவன் ஏற்படுத்திய விதி

அது போன்ற சூழ்நிலையை சந்திக்கும் சக்ராத் ஹாலில் ( மரண தருவாயில்)  உள்ளோருக்கு அவர்களின்  இறுதி கட்டத்திலாவது ஈமான் எனும் இறை நம்பிக்கையை தருவாயாக இறைவா  என்று விரும்பினால்  அந்தரங்கத்தில் பிராத்தணை செய்யலாமே தவிர

அதற்காக புலம்புவது ஏங்குவது  வார்த்தைகளால் உளருவது இவை யாவும் இறை நம்பிக்கையற்ற நபர்களின்  வேலையாகும்

அது போக நம்மை சுற்றி எத்தனையோ உறவுகள் அண்டை வீட்டார்கள் ஏழ்மையின் காரணமாக மருத்துவம் கூட பார்க்க வழியில்லாது இன்றும்    சிரமப்பட்டு கொண்டு தான்  உள்ளனர்

அவர்களை பற்றி அறவே கவலையே படாத நாம் கருணாநிதியை பற்றி  பேசி கொண்டிருப்பது அரசியல் கட்சி  மீதும் தனி நபர் மீதும் கொண்ட குருட்டுத்தனமான பக்தியாகும்

யாரை பற்றி அதிசயமாக தற்போது  பேசுகிறார்ளோ எழுதுகிறார்களோ

அவரே நீண்ட காலம் நடை பிணமாக தான் உள்ளார்

அவர் போன்ற ஒரு நிலையை ஒரு எழ்மையானவன் சந்தித்தால் இறைவா எனக்கு மரணத்தை தா என்றே கேட்டு விடுவான்

கருணாநிதி அவர்கள்  உயர்ரகமான பல கட்ட மருத்துவ சிகிச்சையில் தான் ஒவ்வொரு விநாடியும் உள்ளார்

அவரை சுற்றி அதிகாரம் பலமும் பண பலமும்

மக்கள் கூட்டமும் நிறைந்தே உள்ளது

அவர்கள் அவரை எந்நேரமும் கவனித்து கொண்டும்  பார்த்து கொண்டும்  உள்ளனர்

ஒரு வகையில் இதுவும் விளம்பரதாரர்கள் செய்யும் வழி முறையே ஆகும்

மரணம் வருவதற்க்கு முன்பே உயிர் வாங்க வரும் மலகுல் மவ்தை வரவேற்க்கும் விதமாகத்தான் பலரது செய்கைகள் அமைந்துள்ளது

இனிமேலாவது  இறை நம்பிக்கை உள்ள முஸ்லிமாக நம்மை மாற்றி கொள்வோம்

اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ‌ 
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே

(அல்குர்ஆன் : 4:78)

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ‏

உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக

            (அல்குர்ஆன் : 15:99)

قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ‌ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ 

“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும் பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள்

அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான் (என்று) (நபியே!) நீர் கூறுவீராக

           (அல்குர்ஆன் : 62:8)

            நட்புடன் J .  இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்