குறை கூறியே குற்றவாளியாகும் மக்கள்

   குறை கூறியே குற்றவாளியாக

            மாறும் மனிதர்கள்

    ••••••••••••••••••••••••••••••••••••••••

23-07-18 திங்கள்  கட்டுரை 1168
                ******************

    ஆக்கம்  - ஜே.யாஸீன் இம்தாதி
                  *************
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

எந்த ஒன்றின் பக்கம் மனிதன் தனது கவனத்தை திருப்ப முயற்சியை மேற் கொள்கிறோனோ அந்த காரியம் மார்க்கம் கண்டிக்கும் காரியமாக  பிறர்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் காரியமாக சமூகத்தை பிளக்கும் காரியமாக இருக்கும் பட்சத்தில் சாத்தானும் அந்த காரியத்தை மனிதனுக்கு அழகானதாகவே சத்தரித்து  அதை பற்றி சிந்திப்பதையே குறிக்கோளாக லட்சியமாக  மாற்றி விடுவான்

சமூகவலைளத்தில் பிறர்களை தூற்றுவதையே அல்லது பிறர்களை போற்றுவதையே பலர்கள் வாடிக்கையாக செய்து வருவதற்க்கு இது தான் மூல காரணம்

சத்தியத்தை சொல்கிறோம் எனும் பெயரில் தான் இது போல் பலர்கள் தங்களது மறுமை வாழ்வை நாசமாக்கி கொள்வதோடு அவர்களை சுற்றியுள்ள இதர மக்களின் எண்ணங்களையும் திசை திருப்பி அவர்களின் பொன்னான நேரத்தையும் வீணடித்து  வருகின்றனர்

சமூகத்தில் நிலவும் பல தவறுகளை தவறு செய்யும் நபர்களை  மக்கள் எல்லாம் ஆதரவு தெரிவித்து வருவதை போலவும் இவர்கள் மாத்திரமே அசத்தியத்தை எதிர்க்கும் தன்மை உடையவர்கள் போலவும் தங்களுக்கு தாங்களே ஒரு பிரம்மையை உருவாக்கி கொள்கின்றனர்

அதனால் தான் இது போன்றோர் போடும் நூறு பதிவுகளில் தொண்ணூற்றி எட்டு பதிவுகளும் பிறர்களை பற்றிய விமர்சனங்களின் அழுக்குகளே நிறைந்து  காணப்படுகிறது 

இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட காரியத்தை ஒருவர் ஒரு முறை செய்தால் அந்த தவறை ஓராயிரம் முறை எடுத்து கூறி பல பாவங்களை செய்யும் மாபெறும் குற்றவாளிகளே இவர்கள் தான்

இவர்களுக்கும் அதே போன்ற ஒரு சூழ்நிலையை இழிவை சாத்தான் ஏற்படத்தாத வரை இவர்களும்  வருந்தப்போவது இல்லை இதில் இருந்து விடுபடப் போவதும் இல்லை நஊது பில்லாஹ்

                 ***************

وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ‏ 

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்

           (அல்குர்ஆன் : 104:1)

          நட்புடன் J .  இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்