நபிகளாரை நேசிப்பது சொல்லிலா செயலிலலா
நபிகளாரை நேசிக்கும் அடையாளம்
சொல்லில் அல்ல செயலில் மட்டுமே
••••••••••••••••••••••••••••••••••••••••
22-07-18 ஞாயிறு கட்டுரை 1167
******************
ஆக்கம் - ஜே.யாஸீன் இம்தாதி
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
யாரை விடவும் நபிகளாரை நேசிப்பதாக தங்களை அடையாளம் காட்டி கொள்ளும் முஸ்லிம்களின் உள்ளத்தில்
நபிகளார் மீது வைத்த பிரியம் உண்மையில் நிறைந்திருந்தாலும் அவர்களின் வெளிரங்கமான செயல்பாட்டில் நபிகளாரை நேசிக்காத சமுதாயமாக காட்டி கொண்டிருப்பது தான் எதார்த்த உண்மை
என் தந்தையை விட எவரும் உயர்ந்தவர் இல்லை என்று வாயில் வெளிப்படுத்தி கொண்டு தந்தையின் ஒரு உத்தரவை கூட செயல் படுத்தாத பிள்ளைகள் தந்தையை உண்மையில் மதித்தவர்கள் அல்ல
நபிகளாரின் உத்தரவுகள் என்ன என்பதை கூட அறிய முயற்சி செய்யாத நபர்களே நபிகளாரை நேசிப்பதாக கூறி கொண்டுள்ளது
நபிகளாரின் உத்தரவுக்காக தாடி வைத்த முஸ்லிம் இளைஞர்களை விட நடிகனின் நவீன பேஷனுக்காக மாடல் தாடிகளை தலை முடிகளை வைத்து சுற்றும் இளைய சமூகமே மிகவும் அதிகம்
எளிமையே நபிகளாரின் தனிச்சிறப்பு என்று அறிந்து வைத்து கொண்டு திருமணத்தில் ஆடம்பரத்தை மட்டுமே விரும்பும் முஸ்லிம்களே அதிகம்
பிச்சைக்காரனை கூட கை ஏந்தாதவனாக மாற்றுகின்ற நபிகளாரின் ஜகாத் எனும் தர்ம உத்தரவை அறிந்துள்ள முஸ்லிம் சமூகம்
சீதனம் எனும் பெயரில் பெண்ணிண் தகப்பனை பல இடங்களில் பிச்சை எடுக்கும் சூழ்நிலையில் தள்ளும் பொருளியல் அடிமைகளே முஸ்லிம்களில் அதிகம்
இச்சைகளை அடக்கி நோன்பு நேரத்தில் நாவில் ஊறும் எச்சிலை கூட விழுங்காத கட்டுப்பாடுகளை நடை முறையில் ஒரு புறம் வைத்து கொண்டு காம இச்சைகளுக்கு ஈமானை பறி கொடுக்கும் உடலியல் அடிமைகளே ஏராளம்
இது போன்ற மனோபாவம் உடையோரே நம்மில் தாராளம்
நபிகளாரை நேசிப்பது நாவில் வெளிப்படும் சொல்லில் அல்ல
மாறாக அவர் காட்டி தந்த வழிமுறைகளை அறிந்து அதன் வழியில் நடை போடுவதே நபிகளாரை நேசிப்பதின் மெய்யான அடையாளம்
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
(நபியே!) நீர் கூறும்
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின் பற்றுங்கள்
அல்லாஹ் உங்களை நேசிப்பான்
உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்
மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 3:31)
Comments
Post a Comment