திமுக ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக ஸ்டாலின் வேண்டுகோள்
••••••••••••••••••••••••••••••••••••••••
21-07-18 சனி கிழமை கட்டுரை 1166
******************
ஆக்கம் - ஜே.யாஸீன் இம்தாதி
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் தண்டனை தேவை என்று திமுக செயலர் ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோள் தினமலர் செய்தி தாளில் 21-07-18 சனிக்கிழமை அன்று வெளியாகி உள்ளது
ஆட்சி அதிகாரம் இருக்கும் நேரத்தில் சட்டங்களை உருவாக்காமல் அதிகாரமே இல்லாத நேரத்தில் இது போல் அறிக்கைகளை தந்து மக்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பது அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை
ஆனாலும் ஸ்டாலின் அவர்களின் கூற்று நூறு சதவிகிதம் உண்மையே
ஆறு முறை சிறைவாசம் அனுபவித்து ஏழாம் முறையும் குற்றவாளிகள் தைரியத்தோடு சிறைக்கு செல்லும் அவல நிலையில் தான் நம் இந்திய நாடு உள்ளது
புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வர பரிந்துறை பேசும் அரசியல்வாதிகள்
தற்போது இருப்பில் இருக்கும் இந்திய குற்றவியல் சட்டங்களை தாட்சன்யமின்றி நடைமுறை படுத்தினால் கூட ஓரளவு குற்றங்களை குறைக்க முடியும்
சிறுமிகளின் பாலியல் வன்மத்தை தடுப்பதற்க்கு ஏற்கனவே 2012 ஆண்டு கொண்டு வந்த போக்ஸோ குற்றவியல் சட்டம் ஆசிபா கற்பழிப்பு படுகொலைக்கு பின் திருத்தங்களோடு நவீனமாக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது
அதாவது சிறுமிகளிடம் சில்மிசம் செய்யும் குற்றவாளிக்கு மூன்றே மாதத்தில் விசாரணை முடித்து குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்பது தான் போக்ஸோ சட்டம்
ஆசிபா கற்பழிப்பு படுகொலை குற்றவாளிகள் யார் என்று தெளிவாக தெரிந்த பின்பும் அந்த காமகொடூரர்களில் ஒரே ஒருவனையாவது ஆட்சியாளர்கள் தூக்கில் தொங்க விட்டார்களா ?
அல்லது ஆசிபா படுகொலை நடந்து மூன்று மாதம் ஆகவில்லை என்று இவர்கள் மக்கள் காதில் பூவை சுற்றுகிறார்களா ?
சிறுமி ஆசிபா படுகொலைக்கு பின் இந்தியாவில் பல சிறுமிகள் பாலியலுக்கு உள்ளாகி உள்ளனர்
ஒரு வகையில் போக்ஸோ சட்டம் கொண்டு வந்தவர்கள் தான் இந்த குற்றங்கள் பெருகுவதற்கே மூல காரணம் என்பதை குடிமக்கள் மறந்து விட கூடாது
குற்ற வாசல்களை திறந்து வைத்து விட்டு குற்றாவாளிகளுக்கு தூபம் போட்டு அவர்களை தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்கும் நம் நாட்டு அரசியல்வாதிகளை மக்கள் காரி உமிழ்ந்து தூக்கி எறியாத வரை இந்தியா குற்றவாளிகளின் கூடாரம் என்ற அவப்பெயரை சுமந்தே ஆக வேண்டும்
وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِۙ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّۙ وَالْجُرُوْحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
அவர்களுக்கு நாம் அதில் உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்
எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்
எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே
(அல்குர்ஆன் : 5:45)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment