குர்ஆனை தலாக் செய்தவரா
குர்ஆனை தலாக் செய்த
நபரா நீங்கள்
••••••••••••••••••••••••••••••••••••••••
14-07-18 வியாழன் கட்டுரை 1165
******************
ஆக்கம் - ஜே.யாஸீன் இம்தாதி
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
வாரத்திற்க்கு திருக்குர்ஆனில் ஒரே ஒரு வசனத்தை மனனம் செய்ய முயற்சி செய்திருந்தால் கூட
40 வருடம் வாழும் ஒரு முஸ்லிம் அவனது 20 வருடத்தில் 960 வசனங்களை மிகவும் எளிமையாக மனனம் செய்திருக்க முடியும்
ஆனால் நாற்பதாவது வயதில் கூட அதிகபட்சமாக திருக்குர்ஆனின் 6666 வசனங்களில் நூறு வசனங்களை கூட மனனம் செய்யாத பரம்பரை முஸ்லிம்களே நம் சமூகத்தில் மிகவும் அதிகம்
அந்தளவுக்கு இறைவேதமான திருக்குர்ஆனை தலாக் செய்தவர்கள் தான் திருக்குர்ஆனை பற்றிய அருமை பெருமைகளை பிறர்களிடம் பேசி கொண்டுள்ளனர்
எந்த தொழுகையாக இருந்தாலும் அந்த தொழுகையில் சூரா இக்லாஸ் சூரா பலக் சூரா நாஸ் போன்ற சிறிய சூராக்களை தான் டிரேட் மார்க்காக படித்து வருகின்றனர்
இதில் வேதனையான விசயம் இதை மனனம் செய்ததும் கூட சுய ஆர்வத்தால் நிச்சயம் இருக்காது
மாறாக அவர்களின் சிறு பிராயத்தில் மற்றவர்களின் உந்துதலாலும் பள்ளிவாசல் மக்தப் பாடசாலையில் அஜ்ரத் வாய்ப்பாடு போன்று சொல்லி கொடுத்ததாலும் தான் இதை கூட மனனம் செய்திருப்பார்கள்
சினிமா பாடல்களை அதன் வசனங்களை நிரப்பியே ஈமானிய உள்ளத்தை குப்பைமேடாக மாற்றி இருக்கும் முஸ்லிம்கள்
இனிமேலாவது அந்த குப்பைகளை இதயத்தில் இருந்து அகற்றி விட்டு இறைவேதமான திருக்குர்ஆன் வசனங்களை கொண்டு பாழடைந்த உள்ளத்தை பெயிண்ட் அடிப்பதற்க்கு முயற்சிப்பார்களா ?
சமூகவலைதளத்தில் இஸ்லாம் தொடர்பான ஆயிரம் பதிவுகளை படிப்பதை விட பரப்புவதை விட ஒரே ஒரு திருக்குர்ஆன் வசனத்தை தனது உள்ளத்தில் குடி கொள்ள முயற்சித்தால் இதுவே அவர்களின் மறுமை வாழ்வை மேன்மை படுத்தும்
இது தொடர்பாக தனிமையில் ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து பாருங்கள்
நிச்சயம் உங்களை நீங்களே வெறுப்பீர்கள்
உங்கள் மனசாட்சியே உங்களை தண்டிக்கும்
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: اَلصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهْوَةَ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ: فَيُشَفَّعَانِ لَهُ
நோன்பும் குர்ஆனும் கியாமத் நாளில் அடியானுக்காகப் பரிந்து பேசும்
இறைவனே! உணவு, மன இச்சைகள் போன்றவற்றை விட்டும் நான் இவரைத் தடுத்திருந்தேன் இவருடைய காரியத்தில் என் பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக!' என்று நோன்பு கூறும்
இரவில் தூங்குவதை விட்டும் இவரை நான் தடுத்திருந்தேன்
(இவர் இரவில் நபில் தொழுகைகளில் என்னை ஓதி வந்தார்) இவருடைய காரியத்தில் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!' என்று குர்ஆன் சொல்லும்
இவ்வாறே அவ்விரண்டும் இவருக்காகப் பரிந்து பேசும்'என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் முஸ்னத் அஹ்மத்
நட்புடன் J.இம்தாதி
Comments
Post a Comment