இயற்கையும் செயற்கையும்
மனித வாழ்வில் பிணைந்துள்ள
இயற்கையும் செயற்கையும்
•••••••••••••••••••••••••••••••••••••••••
14-07-18 ஞாயிறு கட்டுரை 1164
******************
ஆக்கம் - ஜே.யாஸீன் இம்தாதி
*************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இறைவன் படைத்த இயற்கையும் மூலமும் அதன் மூலத்தில் இருந்து மனிதன் கண்டு பிடித்த செயற்கையும் மூலமும் உலகில் மனிதனின் தேவைகள் முழுமையாக நிறைவு பெற வேண்டும் என்ற அமைப்பில் தான் அல்லாஹ் உலகை அமைத்துள்ளான்
இதில் ஒன்றை புறக்கணித்து மற்ற ஒன்றை மாத்திரமே வைத்து கொண்டு மனிதன் தனது தேவைகளை நிறை வேற்றி கொள்ள வேண்டும் என்று வாதிப்பது அறியாமையின் வெளிப்பாடாகும்
இறைவன் படைத்த இயற்கையான பொருள்களின் மூலம் மனிதனின் உடலுக்கு சில கெடுதல்கள் ஏற்படுவதை போலவே
மனிதன் கண்டு பிடிக்கும் நவீன பொருள்களின் மூலமும் சில பாதிப்புகள் மனிதனின் உடலில் ஏற்படவே செய்யும்
அது போன்ற பாதிப்புகளை மாத்திரம் பட்டியலை போட்டு கொண்டு செயற்கை பொருள்களை பயன் படுத்த கூடாது என்று வாதித்தால் அது நடைமுறைக்கு ஒவ்வாத காரியமாகும்
காரணம் அவ்வாறு வாதிக்கும் நபர்கள் கூட மனிதன் கண்டு பிடித்த பல பொருள்களை அவர்களின் தனிப்பட்ட வாழ்விலே தவிர்க்க முடியாமல் பயன் படுத்தி கொண்டு தான் அவர்களுக்கு அவர்களே அன்றாடம் முரண்பட்டு வாதித்து கொண்டுள்ளனர்
தற்காலத்தில் மனிதனின் கைகளில் ஒட்டி கொண்டுள்ள மொபைல் எனும் சாதனம் கூட செயற்கையான முறையில் மனிதன் கண்டு பிடித்த பொருள் தான்
அதன் மூலமும் பல விதமான விளைவுகள் மனிதனின் உடலுக்கு ஏற்படுகிறது என்றும் கூட விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்
அந்த விளைவுகளை காரணம் காட்டி மொபைலை பயன்படுத்தவே கூடாது என்று சொன்னால் அந்த மொபைல் மூலம் மனிதன் அடைந்து வரும் பல விதமான வசதிகளை மனிதன் இழக்க நேரிடும்
தேவைக்கு மொபைலை பயன் படுத்தி கொள்ளுங்கள் தேவை இல்லாது மொபைலோடு எப்போதும் ஒட்டி உறவாடாதீர்கள் என்று கூறுவதும் தான் அறிவுடைமை
அதே போல் தான் மனிதன் உருவாக்கும் செயற்கையான உணவு பொருள்களும் உள்ளது
அனைவரும் இயற்கையான பொருளை தான் உண்ண வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தினால் மனிதனின் ஒட்டு மொத்த தேவைகளை பூர்த்தி செய்ய இயற்கையான பொருள்களுக்கு உலகில் பற்றாகுறை ஏற்படுவதோடு அதன் விலைவாசி தாறுமாறாக ஏறி விடும்
காரணம் பூமி அமைப்பில் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான விளைச்சலை கொண்டதாகும்
இதனால் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ள கோடி கணக்கான மக்கள் வறுமையால் உயிரை இழக்க நேரிடும்
உணவே மருந்து எனவே நவீன மருத்துவத்தை அறவே செய்யாதீர்கள் என்ற வாதமும்
இயற்கையே நம் அன்னை
நம்மை சுற்றிய செயற்கையாவும்
நம் பகைவன் என்ற வாதமும் இவ்வகையை சார்ந்ததே
தீர்வுகளை சொல்லக்கூடியவர்கள் உலக நடைமுறையை கருத்தில் கொண்டு எதையும் ஆராய்ந்து நடைமுறைக்கு சாத்தியமான எளிமையான தகவல்களை முடிவு செய்து கூற வேண்டுமே தவிர அவர்கள் அதுவரை கேள்வி பட்ட நம்பிக்கையை மாத்திரம் முன்னனியில் வைத்து கொண்டு தீர்ப்பு சொன்னால் அதுவும் ஒரு வகை பிடிவாத குணமாகும்
அடிப்படையில் எதை இறைவன் தடை செய்துள்ளானோ அவைகளை முற்றிலும் தவிர்த்து கொண்டு மற்றவைகளில் நமது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை
இறைவன் அனுமதித்துள்ள மனிதனின் உடலுக்கு பாதிப்பு தரும் என்ற நிலையில் உள்ள இயற்கை பொருளானாலும் சரி அல்லது செயற்கை பொருளானாலும் சரி அவைகளை விட்டு விலகி கொள்வது அவரவரின் தனிப்பட்ட உரிமையாகும் இதில் ஹலாம் ஹராம் என்று பொதுவாக தீர்வு சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை
هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்
பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான் அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான் அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்
(அல்குர்ஆன் : 2:29)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment