அழகும் அலங்காரமும்
அழகும் அலங்காரமும்
ஓர் பார்வை
!!========================!!
24 -06-18- ஞாயிறு கிழமை
*********************
கட்டுரை எண் 1158
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இறைவன் படைத்திருக்கும் எதார்த்த அமைப்பை சீர்படுத்துவதும் அதை ஒழுங்கு படுத்துவதும் அழகு என்று சொல்லப்படும்
சீர்படுத்திய அழகை மேலும் மெருகூட்ட உதிரி அழகு சாதனங்களை அழகுடன் இணைத்து காட்டுவதக்கு பெயர் அலங்காரம் ஆகும்
அழகு என்பதற்க்கு அதன் நீடிப்பு நாட்கள் நீளமானது வயதின் மூப்பு மட்டுமே அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க செய்யும்
ஆனால் அலங்காரம் என்பதற்க்கு அதன் நீடிப்பு நேரம் குறைவானது திடீரென்று மறைந்து போக கூடியது
பல்லாயிரம் செலவு செய்து முகத்தின் அழகை மெருகூட்டி அரை மணி நேரம் மழையில் நனைந்தாலோ அல்லது உடல் வியர்வையில் இணைந்தாலோ அலங்காரம் மிக விரைவில் அதன் ஈர்ப்பு தன்மையை இழந்து விடும்
உலகில் அழகை ரசிப்பவன் ஏமாறுவதில்லை
மாறாக அலங்காரத்தை ரசிப்பவனும் அதை எதார்த்தம் என்று நினைப்பவனும் தான் ஏமாறுகிறான் ஏமாற்றப்படுகிறான்
உலக நடைமுறையில் அலங்காரத்தை கண்டு ஏமாறுபவனாக அல்லது ஏமாற்றுபடுபவனாக ஆண் இருப்பான்
அலங்காரத்திற்க்கு அடிமை பட்டவளாக பெண் இருப்பாள்
ஆரோக்யமான உணவு வகைகளுக்கு செலவு செய்வதை விட அலங்கார பொருட்களுக்கு செலவு செய்யும் பெண்களே மிகவும் அதிகம்
கிளி போல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் தெருவில் செல்லும் பெண்களின் மீது ஆடவர்களின் கவனம் மாறுவதற்க்கு அந்த பெண்கள் செய்துள்ள அலங்காரமே மூல காரணமாக அமைந்துள்ளது
உலக அழகியை ஒரு ஆண் திருமணம் செய்திருந்தாலும் அல்லது ஆண் அழகனை ஒரு பெண் திருமணம் செய்திருந்தாலும் சில வருடங்களுக்கு பின் தம்பதியர்களின் மனங்கள் தடுமாற்றம் அடைவதற்க்கு அழகு என்றால் என்ன ? அலங்காரம் என்றால் என்ன ? என்ற வேறுபாட்டை நடை முறை ரீதியாக அறிந்து கொள்ளாது இருப்பதே அடிப்படை காரணமாகும்
அழகையும் அலங்காரத்தையும் அங்கீகரிக்கும் இஸ்லாம் அழகை பேணி கொள்ளுமாறும் அலங்காரத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறும் தெளிவாக கட்டளை பிறப்பித்துள்ளது
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள் அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது
இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்
அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு
(அல்குர்ஆன் : 3:14)
இப்படிக்கு J .இம்தாதி
Comments
Post a Comment