பெருநாள் பிளவும் தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பும்
பெருநாள் பிளவும்
தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பும்
×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷×
!!========================!!
17 -06-18- ஞாயிறு கிழமை
*********************
கட்டுரை எண் 1157
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
பிறை தகவல் மக்களுக்கு அறிவிக்க சாத்தியம் இல்லாத நேரத்தில் நம்மை வந்தடைந்தால் அதை கூறி பெருநாளை பிற்படுத்துவதை கூட மார்க்க அடிப்படையில் ஓரளவு ஜீரணிக்கலாம்
அதே நேரம் பொது மக்களே பிறை தகவலை எதிர் பார்த்து ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கும் போது அவசியமற்ற காரணங்களை கூறி மக்களை திசை திருப்புவது மார்க்க வரம்பு மீறலாகும்
கடந்த(2018) நோன்பு பெருநாள் தின பிறையை பார்த்ததாக தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கு சாட்சி கூறியவர்கள் நடு இரவு மக்கள் உறங்கும் நடு இரவு 3-00 மணிக்கு தகவல் கூறவில்லை
மாறாக அதற்க்கும் சில மணி நேரங்கள் முன்பே தகவலை ஆர்வத்தோடு கூறியுள்ளனர்
அதை நடை முறை படுத்த மக்களை ஆர்வப்படுத்துவதை தவிர்த்து விட்டு சென்னை அதிமுக டவுன்காஜி இன்று பெருநாள் இல்லை என்று அறிவிப்பு செய்து விட்டதை போன்று தவ்ஹீத் ஜமாத்தும் அறிவிப்பு தந்தது நியாயம் இல்லை
சந்தேகத்திற்க்கு உரிய இரவுகளில் அநேகமான மக்கள் நடு இரவு வரை கூட விழித்திருந்து தகவலை எதிர் பார்த்து கொண்டிருப்பதை அனைவருமே அறிந்து வைத்துள்ளோம்
பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறை பார்த்து நோன்பு விடுங்கள் என்ற ஹதீசை வைத்து பல ஆண்டுகளாக பெருநாள் விவகாரங்களை வாதிப்போர் அந்த அறிவிப்பை ஏற்று கொள்வதற்க்கு என்று குறிப்பிட்ட சில நேரத்தை அவர்களே சுயமாக வகுத்து கொண்டது எப்படி நியாயமானது ?
ஹதீஸ்களில் மாலை நேரத்தில் ஒரு வாகன கூட்டம் பிறை பார்த்த தகவலை நபிகளாரிடம் சொன்ன போது
நபிகளாரும் நபித்தோழர்களும் அவர்கள் கடை பிடித்து வந்த நோன்பை விட்டு விட்டார்கள் என்ற ஹதீஸ் இதற்க்கு எப்படி பொருந்தும் ?
பிறை பார்த்ததாக நபி (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறிய வணிக கூட்டத்தார்கள் நபியவர்கள் நோன்பு நோற்ற நிலையில் மாலையை அடைந்திருக்கும் போது தான் பிறை கண்ட தகவலை நபிகளாரிடம் சாட்சியாக சொன்னார்கள் எனவே அவர்களுக்கு காலை நேரம் தொழ வேண்டிய பெருநாள் தொழுகைக்கு வாய்ப்பே இல்லை
அதனால் தடை செய்யப்பட்ட நாளில் நோன்பு நோற்க கூடாது என்ற அடிப்படையில் வைத்திருந்த நோன்பை விட்டு விட்டார்கள் மேலும் பெருநாள் தொழுகையை மறுநாள் தொழுதார்கள்
தூத்துக்குடி மற்றும் குமரிமாவட்டத்தில் இருந்து பிறை பார்த்த தகவல் தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எந்நேரம் கிடைத்தது? மக்கள் எல்லாம் நோன்பு நோற்ற நிலையில் இருக்கும் போது கிடைத்தது ? அல்லது மக்கள் எல்லாம் நோன்பு நோற்க சஹ்ரே செய்யாத நேரத்தில் கிடைத்ததா ?
நபியவர்கள் நோற்றிருந்த நோன்பை பிறை தகவலை அறிந்த உடன் கைவிட்டார்கள் பிறர்களையும் விட்டு விடுமாறு உத்தரவு போட்டார்கள்
ஆனால் இவர்களோ பொது மக்கள் சந்தேகத்திற்க்குரிய இரவில் சஹ்ரு வைக்கும் நேரத்தை அடையாத சூழலில் பிடிக்காத நோன்பை நோற்காதீர்கள் என்று எதற்க்கு அவசியமில்லாத அறிவிப்பை செய்ய வேண்டும் ?
நோன்பை விட்டு விடுங்கள் என்ற தவ்ஹீத் ஜமாத்தின் தகவல் எந்தளவுக்கு மக்களை சென்றடைந்ததோ அதை விட விரைவாக பிறை கண்ட தகவலை உடனடியாக அதே நேரம் அறிவித்து சமூக வலை தளங்களில் போட்டிருந்தால் உடனடியாக பொது மக்கள் பெருநாள் தொழுகைக்கு தயாராக இருந்திருப்பார்கள்
நபிவழியில் பெருநாள் தொழுகைக்கான திடலுக்கு நாங்கள் இந்நேரத்தில் எப்படி ஏற்பாடு செய்வது என்ற வாதமும் பொருத்தமற்றது ?
காரணம் பெருநாள் இன்றோ நாளையோ என்ற சந்தேகத்திற்க்கு உரிய ஒரு நாளில் முஸ்லிம் ஜமாத்துகளோ அல்லது இயக்கங்களோ பெருநாள் தொழுகைக்கான முன் ஏற்பாடுகளை முற் கூட்டியே செய்திருக்க வேண்டுமே தவிர
அறிவிப்பு வந்தால் பார்த்து கொள்ளலாம் என்று அசட்டையாக இருப்பது மார்க்கத்தின் மீது உள்ள ஆர்வக்குறைவாகும்
நபிமொழிகளும் குர்ஆன் வசனங்களும் தெளிவாக தான் உள்ளது
அதை செயல் படுத்த வேண்டிய நாம் தான் கவனம் பேணாது வாழ்கிறோம்
இது போன்ற நிலை நீடித்தால் தமிழகத்தில் ஒரே பெருநாள் இரு பெருநாள்களாக மட்டும் அல்ல
ஒரு வார காலமும் கூட பெருநாள் தினமாக வர வாய்ப்பு உண்டு
இனிமேலாவது மார்க்க வரம்புகளை மீறாது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு மகிழ்வான நாட்களில் ஒன்றிணைவோம் இன்ஷா அல்லாஹ்
وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤٮِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا
இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்
(அல்குர்ஆன் : 17:19)
اَ لَّذِيْنَ ضَلَّ سَعْيُهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُوْنَ اَنَّهُمْ يُحْسِنُوْنَ صُنْعًا
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் ( நஷ்டவாளிகள்)
(அல்குர்ஆன் : 18:104)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment