அதிரடி தேவை பெருநாள் குழு

  அதிரடி தேவை பெருநாள் குழு

                 உருவாக்கமே

  
   ×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷×
     !!========================!!

       16 -06-18- சனி கிழமை
             *********************
            கட்டுரை எண் 1156
                   -------------------

   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

ஊரே உறங்கும் போது எங்களுக்கு பெருநாள் என்று நடு இரவில் கண் விழித்து கொண்டு பிறை  பித்து பிடித்து  அலைகிறது  ஒரு கூட்டம்

ஊரே கண் விழித்தாலும் நாங்கள் உங்களோடு இணைந்து  கண்  விழிக்க மாட்டோம் என்று கொள்கை கொள்கை பித்து புடித்து  அலைகிறது  மறு  கூட்டம்

ஒரு வாகனத்தை பலர்கள் ஓட்ட பயிற்சி பெற்று இருந்தாலும் அந்த வாகனத்தை ஒரே  ஒரு ஓட்டுனர்  தான் சீராக இயக்க இயலும்

அப்போது தான் எந்த வாகனமும் முறையாக பாதுகாப்பாக பயணிக்கும் அதில் பயணம் செய்வோரும் தங்கள் நோக்கத்தை சுலபமாக சிரமமின்றி  அடைய இயலும்

தற்போதைய தமிழக பெருநாள் பிளவு விவகாரம் அனைத்தும் அந்த பெருநாள் எனும் வாகன ஓட்டுனர்  எங்களை சார்ந்த ஒருவராக தான் இருக்க வேண்டும் என்பது தான் பெருநாள் பிளவுகளின் மூல காரணமாக உள்ளது

இதில் எந்த அமைப்பும் அல்லது ஜமாத்தும் உறுதியாக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டிய வாகனம் மட்டும் சீராக ஆரோக்யமாக  பயணிக்காது என்பது மட்டும் உண்மை

இதனால் தான் பல காலமாக நம் தமிழகத்தில் பெருநாள் பிளவுகள் சீராகவில்லை

இதற்கான சுலபமான தீர்வு தான் என்ன ?

எப்படி இந்த விவகாரத்திற்க்கு சுலபமான தீர்வை எட்ட இயலும்  ? என்பதே ஆதங்கப்படுவோரின் ஒட்டு மொத்த எதிர் பார்ப்பாகும்

தமிழக அளவில் செயல்படும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களும்  மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள்  இமாம்களும் தங்களது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி தள்ளி விட்டு

                பெருநாள் குழு

என்ற ஒரு அணியின் கீழ் ஒட்டு மொத்தமாக  இணைய முயற்சிக்க வேண்டும்

அந்த அணியின் பல விதமான  கலந்தாலோசனைக்கு பின் அதில் பங்கு பெற்றோரின் பெரும்பான்மை கருத்தோரின் இறுதி முடிவுகள் மட்டுமே ஊடகங்களில் பெருநாள் அறிவிப்பாக வெளியிட  வேண்டும்

அந்த அறிவிப்பின் அடிப்படையில் மட்டுமே தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பெருநாள் மற்றும் நோன்பு விசயங்களில் செயல் பட முன் வர  வேண்டும்

இந்த நிலை ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே ஒரே குடும்பத்தில் பல பெருநாட்கள் விரக்தியோடு  கொண்டாடும் சூழ்நிலை ஏற்படாது

மக்கள் தீர்மானிக்கும் நாளே ஹஜ்ஜுப்  பெருநாள்

மக்கள் தீர்மானிக்கும் நாளே நோன்பு பெருநாள்

என்ற நபிமொழிக்கு சரியான செயல் வடிவமே இது தான்

மக்களின் மகிழ்ச்சிக்கு இறைவனால் ஏற்படுத்தப்பட்டதே பெருநாள் தினம்

அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாளை தமிழகத்தின் ஒட்டு மொத்த சமூக தலைவர்களும் ஒன்றிணைந்து ஒரு நாளை தீர்மானிப்பது குற்றம் ஏதும் இல்லை

ஒரு வேளை பெருநாள் குழு தீர்மானிக்கும் இறுதி முடிவு தவறாக போனாலும் அதற்காக பொது மக்கள் அலட்டி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

காரணம் இறைவனிடம் கேள்வி கணக்குகளுக்கு உள்ளாவோர் பெருநாள் குழு அணியினர்கள் தானே தவிர பொது மக்களாகிய நாம் அல்ல

நினைத்தவர்கள் எல்லாம் மாறுபட்ட கருத்துக்களையும் அதற்க்கு ஏற்ற தீர்மானத்தையும்  உருவாக்க பெருநாள் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் தனிப்பட்ட திருமண விவகாரம் இல்லை

மாறாக அது அனைத்து சமூக மக்களின் பார்வைபடும் உன்னதமான நாளாகும்

إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ عُثْمَانَ بْنِ مُحَمَّدٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الصَّوْمُ يَوْمَ تَصُومُونَ، وَالفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ، وَالأَضْحَى يَوْمَ تُضَحُّونَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும்

நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும்

ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ - எண் -697

وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌‏

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்

நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்

(அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்

உங்கள் பலம் குன்றிவிடும்

(துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்

           (அல்குர்ஆன் : 8:46)

            நட்புடன் J . இம்தாதி





Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்