பெருநாள் விடுமுறை

  பெருநாள் பொது விடுமுறையில்

          அரசாங்கம் அநியாயம்

                     செய்கிறதா   ?
×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷×
     !!========================!!

       15 -06-18- சனி கிழமை
             *********************
            கட்டுரை எண் 1155
                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

இந்தியா மதசார்பற்ற நாடு

இந்த நாட்டில் பல மதத்தவர்கள் கொண்டாடும் மதரீதியான   பண்டிகைகளுக்கும் மற்றும் கொள்கை ரீதியான  திருநாட்களுக்கும்  அரசாங்கத்தின் சார்பாக பொது விடுமுறை நடைமுறையில் உள்ளது

எந்த மத பண்டிகையாக இருந்தாலும் அந்த பண்டிகையை முன்னிட்டு விடப்படும்  விடுமுறைகள் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவானதே

இச்சூழலில் மாறுபட்ட சில நாட்களில் வேறுபட்டு பெருநாட்களை கொண்டாடும் முஸ்லிம்கள்

அவர்கள் கொண்டாடும் பெருநாள் தினத்தில்  அரசாங்கம் குழந்தைகள் பயிலும்  பாடசாலைகளுக்கு ஏன் விடுமுறை விடவில்லை என்று கடிந்து பதிவிடும் சிலரையும் கண்டிக்கும் பலரையும் சமூகவலை தளங்களில் பரவலாக காண முடிகிறது

முஸ்லிம்களின் தரப்பில் தான் இந்த குற்றச்சாட்டு  நியாயம் போல் தென்படுமே  தவிர பொதுமக்களின் பார்வையில் அரசாங்க பார்வையில் இதில் நியாயம் இல்லை

காரணம்  பெருநாள் தினம் எது என்று முஸ்லிம்களே பல கருத்தில் இருக்கும் போது மாறி மாறி பெருநாட்களை முடிவு செய்யும் போது

ஒவ்வொரு சாராருக்கும் ஒவ்வொரு மாவட்டமாக அரசாங்கம்  பொது விடுமுறை விடுதல் என்பது  நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத அநியாயமான  வழிமுறையாகும்

தீபாவளி கிருஸ்துமஸ்  போன்ற பிற மத பண்டிகைகள் தமிழகம் முழுவதும் ஒரே நாள் இருப்பதை போல் முஸ்லிம்கள் கொண்டாடும்  ரம்ஜான் பக்ரீத் பெருநாட்களும்  தமிழகத்தில் ஒரே நாள் இருக்க வேண்டும்

அவ்வாறு இருந்த வரை இது போல் குற்றச்சாட்டுகள் எழுந்தது இல்லை

மகிழ்சியை உருவாக்கும் பெருநாள் தினத்தை தீர்மானிப்பதில் குறைகளை முஸ்லிம்களிடம்  வைத்து கொண்டு அரசாங்கத்தை குறை கூறுவது அறிவீனமான செயலாகும்

அரசாங்கத்தின் சார்பாக முஸ்லிம் பண்டிகைகளுக்கு அறவே பொது விடுமுறை இல்லாத சூழலில் தான் முஸ்லிம்கள் தங்களது  அதிருப்திகளை அரசாங்கத்திற்க்கு  தெரிவிக்க இயலும்

ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தின் சார்பாக முஸ்லிம் பண்டிகைகளுக்கும்  பொதுவான ஒரு  விடுமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதை மறந்து வாதிக்க கூடாது

அரசாங்கம் பொதுவிடுமுறை விடும் நாளில் முஸ்லிம்கள் கருத்து வேறுபாடு கொண்டால் அவர்கள் வேண்டுமானால் தங்களது பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் விஷேச விடுமுறைகளை தனியாக எடுத்து கொள்ளலாம்

அவ்வாறு தனிப்பட்ட விடுமுறை கேட்கும் போது யாரும் அதற்க்கு தடை போடுவது இல்லை

அரசாங்கத்தை எதிர்த்து தெரிவிக்கும் நமது குற்றச்சாட்டுகளில் நியாயத்தை சிந்திப்பதை முஸ்லிம்கள் மறந்து விட கூடாது 

          நட்புடன்  J .இம்தாதி


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்