லைலதுல் கத்ரை தேடும் நேரம் எது

   லைலதுல் கத்ரை தேடும் நேரம்

    !!========================!!

       06-06-18- புதன்  கிழமை
             *********************

            கட்டுரை எண் 1154
                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

ஆயிரம் மாதங்களை விட மேலான ஓர் இரவின்

        (லைலதுல்கத்ரு இரவின்) 

நன்மைகளை அடைய முயற்சி செய்ய வேண்டிய துவக்க நேரம் எது ? அதன்  இறுதி நேரம் எது  ?

இதை முஸ்லிம்களில் அநேகமானோர் இன்றும் கூட சரியாக புரிந்து கொள்ளவில்லை

ஒவ்வொரு ஊர் பள்ளியிலும் இரவு தொழுகை ( தராவீஹ் தொழுகை)  எந்த நேரத்தில் துவக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறதோ அந்த நேரம் முதலே லைலதுல் கத்ரு இரவின் புனித நேரம்  துவங்குவதாக கருதுகின்றனர்

அதனால் தான் அந்நேரம் மாத்திரம் முஸ்லிம்கள் இபாதத்துகளில் ஈடுபடும் காட்சியை பார்க்கிறோம்

இரவு 9-00 மணிக்கு ஒரு ஜமாத்தில் இரவு தொழுகை துவங்கினால் அந்நேரமே லைலதுல் கத்ரு எனும் புனித நேரம்  துவங்குவதாக அங்குள்ள மக்களின் செயல்பாடு அமைந்துள்ளது

இரவு 11 மணிக்கு ஒரு ஜமாத்தில் இரவு தொழுகை துவங்கினால் அந்நேரமே லைலதுல் கத்ரு எனும் புனித நேரம்  துவங்குவதாக அங்குள்ள மக்களின் செயல்பாடு அமைந்துள்ளது

இந்த செயல்கள் யாவும்  புனிதமான இரவின் ஆயிரம் மடங்கு நன்மைகளை இழக்க நேரிடும் வழிமுறையாகும்

மாலை 6-00 மணிமுதல் அதிகாலை 6-00 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஒருவர் அறிவித்தால்

அந்த பரிசை பெற முயற்சிப்போர் மாலை 6-00 மணி துவங்கியது  முதல் அதிகாலை 6-00 மணி  நிறைவடையும் வரை அதற்காக காத்திருந்து முயற்சிக்க  வேண்டுமே தவிர

இரவு 9-00 மணிமுதல் அல்லது இரவு 11-00 மணிமுதல் அந்த ஒரு இலட்ச ரூபாயை அடைய முயற்சி செய்ய மாட்டார்

காரணம் அறிவிக்கப்பட்ட பரிசு தொகை இரவு 7-00 மணிக்கும் கூட திடீரென்று அறிவிக்கப்பட்டு  கொடுக்கப்பட்டு விடலாம்

இதே போல் தான் லைலதுல் கத்ரு எனும் இரவின் புனிதத்தை அடைய முயற்சிக்கும் வழிமுறையாகும்

இஸ்லாமிய மரபில் இரவு துவங்கும் மஃரிப்  பாங்கு சொல்லப்படும் நேரம் முதல் பஜ்ரு தொழுகைக்காக சொல்லப்படும் பாங்கு சொல்லப்படும் நேரம் வரையே லைலதுல் கத்ரு எனும் புனிதமான நேரம் இறைவனால் மூடலாக அமைக்கப்பட்டு உள்ளது

இந்த முழு நேரங்களிலும் லைலதுல் கத்ரு எனும் புனித இரவின் நன்மைகளை அடைய நமது முயற்சிகள் அமைய வேண்டுமே தவிர

அதில் சில மணி நேரங்களை வேண்டுமென்றே புறம் தள்ளிவிட்டு  நாம் நினைக்கும் நேரம் லைலதுல் கத்ரின் நன்மைகளை அடைய முயற்சிக்க கூடாது

வருடத்தில் ஒரே ஒரு முறை மாத்திரம் இறைவனால் வழங்கப்படும் ஆயிரம் மடங்கு நன்மைகளை நமது அறியாமையால்  இழந்து விட கூடாது

இரவு தொழுகை எந்த நேரத்தில் தொழ வைக்கப்படும் என்று ஜமாத்தினர்கள்  அறிவித்தாலும் நமது முயற்சிகள் அன்றையே மஃரிப் முதலே அமைய வேண்டும் 

இதில் ஒரு சிலர்கள் சஹ்ரு சாப்பிடும் அதிகாலை  4-00 மணி வரை  கடுமையாக முயற்சி செய்து விட்டு அதன் பிறகு உடனடியாக பஜ்ரு கூட தொழாமல் படுக்க செல்லும் சூழலையும் பார்க்கிறோம்

இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய செயல்முறையாகும்

சுன்னத்துகளை நபிவழியில் நிறைவேற்றி மறுமை நன்மைகளை முழுமையாக பெறுவோம் இன்ஷா அல்லாஹ்

لَيْلَةُ الْقَدْرِ  ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ‏ 

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்

(அல்குர்ஆன் : 97:3)

تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ‏ 

அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்

(அல்குர்ஆன் : 97:4)

سَلٰمٌ   ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ‏ 

சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்

(அல்குர்ஆன் : 97:5)

           நட்புடன் J . இம்தாதி


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்