பிறை ஆர்வம்

    பிறையை பற்றியே சிந்திக்காத

                முஸ்லிம் சமூகம்

  ×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷×
     !!========================!!

       15-05-18- செவ்வாய் கிழமை
             *********************
            கட்டுரை எண் 1154

                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

ரமலான் பிறை உங்கள் ஊரில் தென்பட்டதா ? உங்களுக்கு வேறு எங்கிருந்தாவது தகவல் வந்ததா என்று ஒவ்வொருவரும் அவர் அறிந்த நபர்களிடம் தொலைபேசி மூலம் விசாரிப்பதை தான் பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்ற ஹதீசுக்கு விளக்கம் புரிந்து வைத்துள்ளார்களே தவிர

பிறையை கண்ணால் பார்ப்பதற்க்கு கூட்டு முயற்சியிலோ அல்லது தனிப்பட்ட நிலையிலோ முயற்சி செய்வதே இல்லை என்பது தான் உண்மையாகும்

பள்ளிவாசல்  ஜமாத்துகளில் கூட இதற்க்கு முயற்சி எடுக்கும் ஒரு குழுவை இதுவரை அநேக இடங்களில் உருவாக்கப்படவில்லை

இந்நிலையில் பிற பக்கம் இருந்து தகவல் பெற்று பிறை செய்தியை  யாராவது சொன்னால் அவர்களை குறுக்கு விசாரணை செய்து தேவையற்று வாதம் செய்வதை மட்டுமே திறமையாக புரிந்து வைத்துள்ளனர்

அது போக பிறை பார்க்க முயற்சி செய்யும் சில நபர்களும் அவர்கள் நின்ற இடத்தில் இருந்து கொண்டு நான்கு திசை தலையை திருப்பி பார்ப்போர்களாக உள்ளார்களே தவிர

பிறையை எந்த திசையில் பார்ப்பது

எந்த நேரம் பார்ப்பது

என்ற ஞானத்தை கூட இன்று வரை முஸ்லிம்கள் அறிவதற்க்கு முயற்சி செய்வது இல்லை

இது போன்ற கவனமற்ற சூழ்நிலை நீடிப்பதால் தான் ரமலான் பிறக்கும் போதே பிறை தொடர்பான சர்ச்சைகளோடு பிறப்பதை பரவலாக காண முடிகின்றது

இந்நிலை மாற வேண்டும் மாற்றப்பட வேண்டும்

                    *****************

முதல் பிறை கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்றால் அதற்க்கு சில நிபந்தனைகள் அறிவியல் பூர்வமாக உள்ளது

சூரியன் மறையும்போது, சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் கோணம் 12 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும்

சூரியன் மறையும்போது, பார்ப்பவரின்தொடு வானத்திலிருந்து சந்திரன் 10டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும்

மேலுள்ள கணித வரையறைகளை எளிமையான முறையில் கீழ்கண்டவாறு கூறலாம்

சூரியன் மறைந்து குறைந்தது 45-60 நிமிடங்களுக்குப் பின் சந்திரன் மறைய வேண்டும்

இதல்லாது பொதுவான நிபந்தனைகளான தெளிவான வானம், நல்ல கண்பார்வை மற்றும் காற்றின் பண்புகள் எப்போதும் பொருந்தும்.

இந்தக் காரணிகளைப் பொதுவான ஒரு கணித வரையறைக்குள் கொண்டு வர முடியாது என்றாலும் இவை பிறை தெரிவதற்கான மிக முக்கியமான காரணிகள்

மேலுள்ள கணித காரணிகள் சரியாக அமையப்பெற்றாலும் இந்தக் காரணிகள் சரி இல்லையெனில் பிறை கண்ணுக்குத் தெரியாது அனுபவமில்லாதவர்கள்  மெல்லிய மேகத்தைப் கூட பிறையென எண்ணக்கூடும்

முதல் பிறையை பார்க்க ஆசைப்படுபவர்கள் முதலில் அந்த மாதத்தில் உங்களது பகுதியில் அதற்கான வாய்ப்பு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். இதற்கான வசதிகள் பல இணையதளங்களில் செய்யப்பட்டுள்ளன. http://moonsighting.com/ http://www.icoproject.org/accut.html?l=en

இதற்கான வசதிகள் பல இணையதளங்களில் செய்யப்பட்டுள்ளன

http://moonsighting.com/ http://www.icoproject.org/accut.html?l=en

போன்றவை முஸ்லிம் விஞ்ஞான நிபுணர்களால் நடத்தப்படுபவை உங்கள் பகுதியில் அதற்கான வாய்ப்பு இருப்பின் உங்கள் ஊரின் அன்றைக்கான சூரிய மறைவு மற்றும் சந்திர மறைவிற்கான நேரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்

இவற்றை நீங்கள் timeanddate.com இணைய தளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்

பின்னர் உங்கள் பகுதில் மேற்கில் தொடுவானம் தெரியும் பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

அது மேற்கு கடற்கரை ஆயின் சிறந்தது

அன்றைய தினம் சந்திரன் வடமேற்கில் மறைகிறதா அல்லது தென்மேற்கில் மறைகிறதா என்பதையும் நீங்கள் தெரிந்து கொண்டால்  பிறையை தேடுவது எளிதாகும்.

يَسْـــٴَــلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ‌ قُلْ هِىَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ 


(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்

அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன

            (அல்குர்ஆன் : 2:189)



     எதிர்பார்ப்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்