பீஜே விவகாரம்

        அறிஞர் பீஜே விவகாரமாக

          வரம்பு மீறி தூற்றுவோரும்

   எல்லை தாண்டி போற்றுவோரும்

         பெற வேண்டிய படிப்பினை

  ============================

       13-05-18- ஞாயிறு கிழமை
             *********************      
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

பல வருட உழைப்பாலும் தியாகத்தாலும் சமூக சேவைகளாலும் புகழின் உச்சத்தை அடைந்த பீஜே என்ற ஒரு அறிஞர் இன்று  அகலபாதாளத்தில் வீழ்ந்து போனது

பெண் என்ற ஒரு அர்ப்பமான பலவீனத்தால் என்பது தற்போது அவர் சிரமபட்டு வளர்த்தி உருவாக்கிய தவ்ஹீத் ஜமாத்தின் அதிரடியான  அழகிய  நடவடிக்கை மூலமே வெளிப்பட்டதை நினைத்து பெருமை படுவதா ? அல்லது சிறுமை படுவதா ? என்ற மனக்குழப்பத்தில் பலர்கள் இன்று உள்ளனர்

இதில் நமது நிலைபாடுகளை எப்படி அமைத்து  கொள்வது என்பதை அறிவதற்க்கு  முன்

அடிப்படையாக அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரே விசயம் என்னவென்றால்

அந்நிய பெண்ணோடு எவ்வகையில் ஒருவர் தொடர்பு வைத்திருந்தாலும் அது கடந்த காலமாக இருந்தாலும் நிகழ்காலமாக இருந்தாலும்  அந்த பெண்ணிண் மூலமே பல அவமானங்களை சந்திக்க நேரிடும் என்ற முன்னெச்சரிக்கையை தான் அறிஞர் பீஜேவின் சம்பவம்  தெளிவு படுத்துகிறது

சமூகத்தில் பெரிய புள்ளியாக பீஜே எனும் அறிஞர்  இருப்பதால் அவருடைய தனிப்பட்ட வாழ்கை பலர்களால் தோண்டி தோண்டி துருவப்பட்டு  எடுக்கப்பட்டு அதன் பின்  வெளியாக்கப்பட்டது என்பது தான் உண்மை

இதே போல் ஒவ்வொரு மனிதனின் அந்தரங்கத்தை தோண்டி கொண்டிருந்தால் எவரையும் குற்றவாளியாக மாற்ற முடியும் என்ற சூழல் தான்  உள்ளது என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்கும் ஒவ்வொரு ஆடவனும் பெண்ணும் அனுபவ ரீதியாக  மறுக்க இயலாது

எனவே  தவறுகளை செய்ய கூடாது என்ற எண்ணங்களை இந்த சம்பவத்தின் மூலம் அழுத்தமாக ஒவ்வொருவரும்  வளர்த்தி கொள்வதோடு

அந்த தவறுகளில் வீழ்வதற்கான காரணங்களையும் தனிமைகளையும் அதற்க்கு ஏற்ற  சூழல்களையும்  எப்போதும் எந்நேரமும் தவிர்த்தே வாழ பழகி கொள்ள வேண்டும் என்பது தான் இதன் மூலம் அனைவரும்  பெற வேண்டிய அடிப்படை படிப்பினை ஆகும்

     ********************************
         படிப்பினை பகுதி   இரண்டு
                   **************

ஒரு மனிதரின் தியாகத்தையும் அவரது  திறமையையும்  கண்டு அவர் மீது நன்மதிப்பும் மரியாதையும் வைப்பது  மனிதனின் இயல்பு இதில் பொறாமை கொள்வது தேவையற்றது

அதே நேரம் அவ்வாறு ஒரு மனிதர் மீது நேசம் வைப்போர் அதற்க்கு இஸ்லாம் கற்று தரும்  மார்க்க ரீதியான  எல்லையை புரிந்து அந்த எல்லைக்குள் தனது பாசத்தை நேசத்தை வெளிப்படுத்த வேண்டும்

அவ்வாறு எல்லையை மீறி  ஒருவர் மீது பிறர்கள் சுமத்தும்  குற்றச்சாட்டுகளுக்கு ஞானமே இல்லாமல் முட்டு கொடுப்பதும் வக்காலத்து வாங்குவதும்  அவ்வாறு குற்றம் சாட்டுபவர்களை சகட்டு மேனிக்கு இழிவு படுத்துவதும் நோவினை படுத்துவதும் மார்க்கம் தடை செய்துள்ள தீய குணமாகும்

இந்த தீய குணத்தை தவிர்க்காத போது நாம் நம்பிக்கை வைத்த நபர்களின் மீது  சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் சில வேளை நிரூபணமானால் அதை எதிர் கொள்ள முடியாமல்  கடுமையான மன உளைச்சல்களை சந்திக்க நேரிடும் என்பதற்க்கு அறிஞர் பீஜேவின் தற்போதைய  விவகாரம் சரியான படிப்பினையாகும்

               ********************
       படிப்பினை பாகம் மூன்று
                      **********
எந்த ஒரு கொள்கையும் அதன் அடிப்படை ஆதாரங்களை வைத்து தான் சத்தியமா அசத்தியமா என்று முடிவு செய்ய வேண்டுமே தவிர

ஒரு கொள்கையை பல காலம் சொல்பவர் சில தவறுகளில் சிக்கி விட்டார் என்பதற்காக அவர் கூறிய கொள்கை எல்லாம் வழிகேடுகள் என்று புரிந்து கொள்ள கூடாது  காரணம் மார்க்கம் இறைவனுக்கு சொந்தமானது

அதை எடுத்து சொல்வோர் எல்லாம் இறைவனால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு அவர்களின் தனிப்பட்ட தவறுகளில் இருந்து தூய்மை படுத்தப்பட்டவர்கள் என்பதற்க்கு குர்ஆன் ஹதீசில் எவ்விதமான சான்றும் இல்லை அவ்வாறு நபிமார்களை தவிர வேறு எவராலும் இருக்கவும் இயலாது

அறிஞர் பீஜே விவகாரத்தில் பல கொள்கை சகோதரர்கள் இதனால் மனம் உடைந்து விரக்திக்கு செல்வதோ

அல்லது இந்த சம்பவத்தை வைத்து கொண்டே  பிறர்களை தூற்றி கொண்டு திரிவதோ இஸ்லாம் கற்று தரும் பண்பாடு அல்ல

           ***********************
       படிப்பினை பாகம் நான்கு
             ******************

அறிஞர் பீஜே அவர்கள்  மனிதன் என்ற முறையில் இந்த விசயத்தில்  தற்போது தனது நிலையை தலைமையிடம் ஒப்பு கொண்டதாக அறிக்கை தவ்ஹீத்ஜமாத்தால் வெளியிடப்பட்டு இருந்தாலும்

இந்த ஆடியோ விவகாரம் யாருடன் நடந்தது ?

எப்போது நடந்தது ?

எந்தளவு நடந்தது ?

எந்த வருடம் நடந்தது  ?

அதன் பின் அதற்காக அறிஞர் பீஜே  இறைவனிடம் தவ்பா செய்தாரா இல்லையா?

இறைவன் அந்த தவ்பாவை ஏற்று கொண்டானா இல்லையா ?

என்பதெல்லாம் இதை பற்றி காரசாரமாக பேசும் எவருக்கும் தெரியாது

எனவே இவ்விசயத்தில் தேவையற்று சர்ச்சைகளை செய்து கொண்டிருப்பது அவைகளை பதிவுகளாக  போட்டு அதில் இடம் பெறும் கீழ்த்தரமான வசைபாடல்களை ரசிப்பது போன்ற எந்த காரியத்திலும் நம்மை நாம் ஈடுபடுத்தி கொள்ள கூடாது

காரணம் இவைகளை பற்றி பேசுவதாலோ எழுதுவதாலோ அல்லது இதை உலகம் முழுவதும்  பரப்புவதாலோ எந்த விதமான நன்மையும் மறுமையில் நமக்கு இதன் மூலம் கிடைக்க போவது இல்லை

எதிரிகளாக இருந்தாலும் பிறர்களின் மானம் காப்பதும் அவர்களின்  மறுமை வாழ்கைக்கு துஆ செய்வதும்  ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமைய என்பதை மறந்து விட வேண்டாம் 

            ***********************
        படிப்பினை பாகம் ஐந்து
                    ************

சமூகத்தில் பிறர்களின் தவறை இஸ்லாமிய உணர்வோடு  சுட்டி காட்டும் நபர்கள் ஒரு சாரார் உள்ளனர்

பிறர்களின் தவறுகளையே ஆய்வு செய்து அவைகளை அறிக்கையாக போட்டு வாழ்நாள் முழுவதும்  நரமாமிச விரும்பிகளாக வாழ்ந்து பாவிகளாகவும்  நரகவாதிகளாகவும் மடிந்து போகும்  இரண்டாம்  சாராரும் உள்ளனர்

சமூகவலைதளங்களில் அங்கம் வகிப்போர் இதில் இரண்டாம் வகையினர்களே மிகவும் அதிகம்

இறைவன் ஒருவர் செய்த பாவத்தை மன்னித்தாலும் அந்த பாவத்தை கூட மன்னிக்க வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்து அந்த மனிதனை நரகத்தில் போடு என்று இறைவனிடமே முறையீடு வைக்கும் அளவுக்கு நரமாமிச விரும்பிகளாக இவர்கள் இருப்பார்கள்

இத்தகையவர்களை எதன் மூலமும் எந்த நியாயங்களின் மூலமும் எவராலும் திருப்தி படுத்த இயலாது 

பாவிகளுக்கு படிப்பினை சொன்னால் கூட அதில் பயன் உண்டு

ஆனால் இது போல் மூதேவிகளுக்கு படிப்பினை என்பது மருந்துக்கும் கூட உதவாது

எனவே இது போன்றவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நமது மறுமை வாழ்க்கைக்கு உவந்த காரியமாகும்

عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَمَّا عُرِجَ بِيْ مَرَرْتُ بِقَوْمٍ، لَهُمْ اَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمِشُوْنَ وُجُوْهَهُمْ وَصُدُوْرَهُمْ، فَقُلْتُ: مَنْ هؤُلاَءِ يَا جِبْرِيْلُ؟ قَالَ: هؤُلاَءِ الَّذِيْنَ يَأْكُلُوْنَ لُحُوْمَ النَّاسِ وَيَقَعُوْنَ فِيْ اَعْرَاضِهِمْ

நான் வானுலகப் பயணம் சென்றிருந்த போது ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றேன்

அவர்களின் நகங்கள் செம்புகளால் ஆனதாக இருந்தன, அவற்றால் தமது முகங்கள், மார்புகளைக் கீறியவர்களாகக் காயப்படுத்திக் கொண்டு இருந்தனர்

நான் ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம்

இவர்கள் யார்?' எனக் கேட்டேன், இவர்கள் மனிதர்களுடைய மாமிசங்களைச் சாப்பிட்டு மனிதர்களைப் பற்றி புறம் பேசி அவர்களுடைய மானத்தை பறித்தவர்கள்  என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) சொன்னார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

             நூல்  அபூதாவூத்


      இப்படிக்கு  -இறையடியான்

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்