ரஜினிகாந்த் கவனத்திற்க்கு

     திரு ரஜினிகாந்த்  அவர்களின்

                 !! பார்வைக்கு !!

  ரசிகர்களால் பலவீனமாகும் ஆதரவு

       ♦♦♦♦♦♦♦♦♦♦

                   J . இம்தாதி
                *****************
            29-04-18- ஞாயிறு
                 ***************

கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவிப்பு செய்ததில் இருந்தே அவருடைய ரசிகர்கள் அவருடைய கட்சிக்கு ஆள் இணைக்கும் வேலையை சமூகவலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்

அவர்களுடைய முயற்சியில்  வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இறைவனின் நாட்டத்திலும் அவர்களின் அணுகுமுறையிலும் தான் உள்ளது

பொதுவாக அரசியலில் களமிறங்கும் நபர்கள் கடுமையான விமர்சனங்களுக்கும் பல சமுதாய எதிர் கேள்விகளுக்கும்  உள்ளாக்கப்படுவது சகஜம் தான்

அது போன்றோரின் விமர்சனங்களை  ஏற்று அதற்க்கு ஏற்ற வகையில் மறுப்புக்களோ அல்லது நியாயங்களையோ ரஜினி மன்றத்தை சார்ந்தவர்களும் அவர் கட்சி சார்ந்த நபர்களும் தான் அறிவுப்பூர்வமாக மக்களுக்கு சொல்லி தர பயிற்சி தரப்பட வேண்டும்

அல்லது அது போன்றோரின் விமர்சனங்ளை கண்டு கொள்ளாது இருந்து விட வேண்டும்

இந்த பண்புகள் இருந்தால் தான் எவருடைய கட்சியும் பொறுப்பாளர்களும் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்

ஆனால் ரஜினி சார்பாக பேசும் நபர்களில் 90÷ ரசிகர்களுக்கு  இந்த அழகிய பண்பாடு அறவே இல்லை என்பதை அவர்களின் நடைமுறையும் செயல்முறையும் அன்றாடம்  விளக்கி கொண்டுள்ளது

எதிர் கேள்விகளை நியாயமாக கேட்டால் கூட அவ்வாறு கேட்கும் நபர்களை கெட்ட வார்த்தைகளில் கூச்ச உணர்வே இல்லாமல்  அர்ச்சனை செய்வதும் எதிராளிகளை கேவலமாக விமர்சிப்பதும் மத ரீதியாக  வேறுபடுத்தி தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று  அவமானப்படுத்துவதும் ரஜினிக்கு ஆள் சேர்க்கும் ரசிகர்களிடம் சர்வ சாதாரணமாக காண முடிகிறது

இது போன்று கட்டுப்பாடு இல்லாத நாகரீகம் தெரியாத நபர்களை ரசிகர் மன்றத்திலும் கட்சியிலும்  உறுப்பினர்களாக வைத்திருக்கும் திரு .ரஜினிகாந்த்  இவர்களின் தவறான அணுகுறையால் மக்கள் மனதில் இருந்து விரைவில் தூக்கி எறியப்படுவார் என்பதை
திரு. ரஜினிகாந்தும் அவருடைய கட்சி பொருப்பாளர்களும் அவசியம் உணர வேண்டும்

காரணம் ரஜினி ரசிகர் மன்றதுக்கு நீங்கள் ஆள் சேர்த்தவில்லை மாறாக அரசியல் அமைப்பை உருவாக்குவதற்க்கு தான் நீங்கள் ஆள் சேர்த்துகிறீர்கள் என்பதை  மறவாதீர்கள்

இந்திய அரசியல் என்பது மதம் இனம் மொழி கடந்த அரசியல் அமைப்பாகும்

அப்படி பட்ட நாட்டில் ஒட்டு மொத்த  மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒருவரால் அரசியலில் நீண்ட காலம் பிரகாசிக்க முடியுமே தவிர

சினிமா பெயர் புகழ் இருப்பதால் மாத்திரம் வெற்றி வாய்ப்பை பெற்று விடலாம் என்று திரு ரஜினியும் அவருடைய ரசிகர்களும்  கருதினால் கற்பனை திரைப்படத்தில் தான் அது முடியும் என்பதை இனி வரும் காலத்தில் நீங்கள் உணருவீர்கள்

             நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்