இஸ்லாமிய குற்றப்பார்வை

        இஸ்லாமிய பார்வையில்

                குற்றப்பார்வை
.
    ========================

       28-04-18- சனி  கிழமை
             *********************

            கட்டுரை எண் 1150
                   -------------------

   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

குற்றங்கள் குறைய வேண்டுமானால் துணிந்து  குற்றம் செய்வோர் அஞ்ச வேண்டுமானால் முறையாக விசாரிக்கப்பட்டு அதன் பின் உடனடியாக குற்றவாளிகள்  தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற பார்வை தான் இஸ்லாமிய கோட்பாடு

அந்த வகையில் தான் காஷ்மீர் மாநிலத்தில் எட்டு வயது சிறுமி ஆஷிபா கோவில் கருவறையில் வைத்து அக்கோவில் பூசாரி உட்பட சில கயவர்களால்  கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து முஸ்லிம்கள்  குரல் கொடுத்து கொண்டுள்ளனரே தவிர பாதிக்கப்பட்டவர்  முஸ்லிம் சிறுமி என்பதற்காக முஸ்லிம்களில் எவரும் குரல் கொடுக்கவில்லை

இதே நிலை இந்து சகோதரி கீதாவுக்கு ஏற்பட்டாலும் சீதாவுக்கு ஏற்பட்டாலும் கிருஸ்தவ சகோதரி நான்சிக்கு  ஏற்பட்டாலும் எவருக்கு ஏற்பட்டாலும் முஸ்லிம்கள் குரல் கொடுக்கவே செய்வார்கள்

இதில் பாகுபாடு பார்ப்பவன் முஸ்லிம் இல்லை என்பது மட்டும் அல்ல மாறாக அவன் மனிதநேயம் உள்ள பிறவியே அல்ல என்பது தான் உண்மை

இதை புரிந்து கொள்ளாமல் சமூக வலைதளங்களில் முஸ்லிம் அல்லாத பலர்கள்

அப்படியானால் இந்துக்களை கொலை செய்த இந்த முஸ்லிமை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?

இந்து பெண்ணை கெடுத்த இந்த முஸ்லிமை எதிர்த்து நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை

என்று உலகளவில் முஸ்லிம் குற்றவாளிகளால் யாரெல்லாம் பாதிப்புக்கு உள்ளானார்களோ அது போன்ற பழைய புதிய செய்திகளையும் அது தொடர்பான வீடியோக்களையும் தேடி கண்டு பிடித்து  அவைகளை ஆதாரமாக போட்டு மக்கள் மனதில் வெறுப்புணர்வை தூண்டும் நிலையை தற்போது பரவலாக காண முடிகின்றது

இதில் வேதனையான விசயம் என்னவென்றால் எவைகளை பரப்புகிறார்களோ அந்த குற்ற தகவல்கள்

எங்கு நடந்தது  ?

எப்போது நடந்தது ?

அவர்கள் கண்டிக்கப்பட்டார்களா ?

அல்லது தப்பி விட்டார்களா ?

உண்மையில் இது முஸ்லிம்கள் தான் செய்தார்களா ?

அல்லது முஸ்லிம் பெயரில் சமூக விரோதிகள் ஜோடித்து பரப்புகிறார்களா  ?

என்றெல்லாம் பதிவுகளை போடுபவர்களும் சிந்திப்பது இல்லை

அதை சேர் செய்பவர்களும் யோசிப்பது இல்லை

இதில் வேதனையான தகவல் என்னவென்றால் வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பரப்பப்படும் எந்த குற்றவாளிகளையும் முஸ்லிம்கள் ஆதரித்து பதிவுகளும் போடுவது இல்லை

மேடைகளில் அது போன்ற குற்றவாளிகளை ஆதரித்து பேசியதும் இல்லை

யாரோ செய்த குற்றத்தை மூடி மறைத்து குற்றவாளிகளை தப்பிக்க வைத்தால் அந்த குற்றவாளிகளால்  நல்லோர்கள் அனைவருமே  பாதிக்கப்படுவார்கள்  என்ற விசயத்தை  முஸ்லிம்கள் தெளிவாக  உணர்ந்து தான் வைத்துள்ளனர்

அதனால் தான் இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் முஸ்லிம் குற்றவாளிகளும் அரசாங்கத்தால் பொது இடத்தில் மக்கள் பார்வையில் தண்டிக்கப் படுகிறார்கள் என்பதை நடுநிலையோடு முஸ்லிம் அல்லாதவர்கள்  சிந்தித்து பாருங்கள்

இதை தயவு கூர்ந்து நடுநிலையாக சிந்திக்கும் மக்கள் பிற மக்களுக்கு எத்தி வைக்குமாறு முஸ்லிம் சமூகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்

              ++++++++++++++++
       நபிகளாரின் நேர்மையான
           குற்றவியல் பார்வை
               *****************

3475. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா எனும் பெண் ) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள்

அவள் விஷயமாக (அவருடைய வர்க்கமான குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர்

அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் (நபிகளாரிடம்) யார் (பரிந்துறை) பேசுவார்கள்? என்று தமக்குள் பேசிக் கொண்டனர்

அவர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதருடைய (நபிகளாருடைய) செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தவிர

இதற்கு யாருக்குத் துணிவு வரும்?' என்று கூறினர்

(உஸாமா(ரலி) அவர்களிடம் நபியிடம்  பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள

அவ்வாறே) உஸாமா(ரலி)அவர்கள்  நபி(ஸல்) அவர்களிடம் (திருடிய அப்பெண்ணுக்கு தண்டனையை தளர்த்த  ) பேசினார்கள்

அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்' என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு

பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள்

பிறகு (அவ்வுரையில்) உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்

அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான்

அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ( அதாவது நபியவர்களின் மகள் )ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன் என்று கூறினார்கள்.
      
          நூல் -ஸஹீஹ் புகாரி

            நட்புடன்  J .இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்