ஆசிபா விவகாரத்தை மூடி மறைக்க கீதா கதாபாத்திரம்

     ஆசிபா விவகாரத்தை திசை

    திருப்பும் சூழ்ச்சியில் கற்பனை

              !! பாத்திரமே கீதா !!

     ========================

       27-04-18- வெள்ளி கிழமை
             *********************

            கட்டுரை எண் 1149
                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

கோவில் கருவறையில் வைத்தே எட்டு காவி சிந்தனை உடையவர்கள் சிறுமி ஆசிபாவை கற்பழித்து படுகொலை செய்த விவகாரம்  உலகம் முழுவதும் கடுமையான  கண்டனத்திற்க்கும் ஆர்ப்பறிக்கும்  கொந்தளிப்பிற்க்கும் உள்ளானது

அதை  தொடர்ந்து இந்தியாவை ஆளும் மத்திய அரசாங்கத்திற்க்கு கடுமையான அவமானம் ஏற்பட்டது 

இந்த அவமானங்களுக்கு காரணமான குற்றவாளிகள் யார் என்று தெளிவாக தெரிந்த பின்பும் அவர்களை  கண்டிக்கவும் உடனடியாக  தண்டிக்கவும்  கடமைபட்டுள்ள மத்திய அரசாங்கம்

இவ்விசயத்தில்  மென்மையான போக்கை கடை பிடிப்பதாலும் ஆசிபா விவகாரத்தை பெரிது படுத்தினால் சுற்றுலா வருமானம் பாதிக்கப்படும் என்று குற்றவாளிகளுக்கு ஆதரவு தரும் வகையில்  மத்திய அமைச்சரே பேட்டி கொடுத்ததாலும்

மேலும் மேலும் இந்த விவகாரம் உலகம் முழுதும் வீரியமாக பேசப்பட்டு வருகிறது

இந்நிலையில் இந்த போராட்ட  வீரியத்தை குறைக்கவும் ரோட்டில் இறங்கி போராடும் மக்களின் மனதில் பலவீனத்தை ஏற்படுத்தவும் குறிப்பாக இந்து சமுதாய அன்பர்களின் நியாயமான ஆதரவுகளை திசை திருப்பவும்  சமூகவலைதளங்களில் முஸ்லிம் சமூகத்தை குற்றவாளிகளாக மாற்றவும் உளவியல் ரீதியாக மக்களை திசை திருப்ப பல அவதூறுகள் ஜோடிக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது 

அதில் ஒன்று தான் கீதா எனும் பொய்யான  கதாபாத்திரம்

இஸ்லாமிய மதரசாவில் கீதாவை  அடைத்து வைத்து பாலியல் கொடுமை செய்ததாக பதிவுகளை தொடர்ந்து  போட்டு அதற்க்கு சம்மந்தமே இல்லாத புகைப்படங்களையும்  வீடியோக்களையும்  ஜோடித்து குறிப்பிட்ட சில காவிகளின் கள்ள அய்டிகளில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது

1-இது உண்மை என்று இருக்குமேயானால் ஆசிபா விவகாரத்தை திசை திருப்பி பேசும் பல காவி அமைப்புகளும் சங்பரிவார் இயக்கங்களும் எப்போதோ இதை பெரிய விவகாரமாக்கி ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று இந்தியாவில்  களம் இறங்கி இருப்பார்கள்

2-காவிகளின் கைபிடியில் இருக்கும் தொலைகாட்சிகள் இந்த நிகழ்வையே சிறப்பு செய்தியாக  தலைப்பு செய்தியாக மாற்றி தொடர்ந்து வாசித்து இதை பற்றி பல விவாதங்களையும் நடத்தி முஸ்லிம் சமூகத்தையே இழிவாக்கி இருப்பார்கள்

3- குறிப்பாக தமிழகத்தின் பீஜேபி ஹெச். ராஜா கூட இதை பற்றி இன்று வரை வாய் திறக்கவே இல்லை

4-குறைந்த பட்சம் கண்ட போஸ்டர்கள் கூட இந்தியாவில் எங்கும் முறையாக  இவர்களால் ஒட்டப்படவில்லை

5- தொடர்ந்து பாலியல் வழக்குகளில் சிக்கி அம்பலமாகி வரும் பீஜேபி அமைச்சர்கள் கூட அவர்களின் கேவலத்தை மூடி மறைக்க அல்லது மக்களின் மனதில் இருந்து  அதை  மறக்க செய்ய இந்த  செய்தியை இது வரை  எவருமே கையில் எடுக்கவில்லை

இதற்க்கு மூல காரணம் கீதா எனும் கதாபாத்திரம் ஆசிபா விவகாரத்தை இந்திய அளவில்  பலவீனபடுத்த  ஜோடிக்கப்பட்ட கதாபாத்திரமே

அதனால் தான் இந்த ஜோடனையை பரப்பும் நபர்கள் ஆசிபா விவகாரத்தில் அவரது தந்தை யூசுப் கொடுத்த வாக்கு மூலத்தை போல

கீதாவை நாங்கள் தெருவிலே தேடினோம் ஊரிலே தேடினோம் ஆனால் நாங்கள் முஸ்லிம்களின் தர்ஹாவில் தேடவில்லை மதரசாவில் தேடவில்லை ஆனால் கீதா கற்பழிக்கப்பட்டது மதரசாவில் தான் என்று

கற்பனை கீதாவுக்கு பில்டப் கொடுத்து கீதா எனும் கற்பனை தகவலையும் எடிட் செய்யப்பட்ட  புகைப்படத்தையும் ஜோடித்து  போடுவதை பார்க்கிறோம்

இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் இந்தியாவில் வாழும் இந்து மக்களே இந்த பொய்யை கண்டு கொள்ளவே இல்லை அதை பற்றி பேசுவதும் இல்லை

ஆசிபாவுக்கு குரல் கொடுக்கும் முஸ்லிம்கள் கீதாவுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்று பரப்புவதே முஸ்லிம்கள் அந்த பதிவுகளில் ஆவேசப்பட்டு  நுழைய வேண்டும் என்பதால் தான் என்பதை உணர்ந்து

இது போன்றோர் பதிவுகளில் சென்று அதற்க்கு விளக்கம் கொடுப்பது கற்பனையான  கீதா சம்பவத்தை நாங்களும் உளமாற கண்டிக்கிறோம் என்று சிறுபிள்ளைதனமாக பின்னூட்டம் போடுவதை எல்லாம் முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்

முஸ்லிம்கள் அவைகளில் சென்று விளக்கம் சொல்கின்ற காரணத்தால் தான் நிமிடத்திற்க்கு நிமிடம் அதே பதிவுகளை மாறி மாறி தந்திரமாக போட்டு கொண்டே உள்ளனர்

முஸ்லிம்களின் பின்னூட்டங்களோ மறுப்புகளோ இல்லையானால் தானாகவே அதன் முதுகெழும்புகள் உடைந்து விடும்

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொன்னால் அது மெய்யாகி விடும் என்ற கோயாபல்ஸ் தத்துவத்தை தான் தற்போது காவி சிந்தனை உடைய  இவர்கள் தேர்வு செய்துள்ளனர்

اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا ‌ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا  اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ‏ 

ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்

நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்

        (அல்குர்ஆன் : 3:120)

وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏ 

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான்

சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்

          (அல்குர்ஆன் : 8:30)


           நட்புடன் J . இம்தாதி


Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்