ஆசிபா விவகாரம் வீரியம்
ஆர்பரிக்கும் ஆசிபா விவகாரம்
ஆட்சியின் கால்களை முறிப்பது
நிச்சயம் இது சத்தியம்
========================
26-04-18- புதன் கிழமை
*********************
கட்டுரை எண் 1148
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
★★★★★★★★★★★
இந்தியாவில் படுகொலைகளும் கற்பழிப்புகளும் குழந்தைகளை வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்து வீசப்படுவதும் அன்றாடம் பார்த்து பழகி போன ஒரு விவகாரமே
காஷ்மீரில் ஆசிபா எனும் எட்டு வயது சிறுமியை கற்பழித்து படுகொலை செய்த விவகாரம் உலகம் முழுவதும் கண்டிக்கப்பட்டு வரும் சூழலில் கூட அதற்க்கு பின்னும் இது போல் பல சம்பவங்கள் நடந்து கொண்டு தான் உள்ளது
ஆனால் ஆசிபா விவகாரத்தை மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவும் ஏன் உலகம் முழுவதும் கண்டிப்பது ஏன் ?
1- ஆசிபா எனும் எட்டு வயது சிறுமியை கற்பழித்து படுகொலை செய்த காமுகர்கள் அந்த காரியத்தை செய்தது வெறும் சபலத்தினால் மட்டும் அல்ல
மாறாக அந்த கொடூரத்தை நடத்தி விட்டு அதை பார்க்கும் முஸ்லிம் சிறுமிகளுக்கு கூட எங்களை கண்டால் பயம் வர வேண்டும் என்று அந்த காரியத்தை செய்த அரக்கர்களே காமுகர்களே தங்களது இந்துத்துவ இன மதவெறியை பகிரங்கமாக வெளிப்படுத்தியது ஒரு காரணம்
2- பிள்ளையை காணவில்லை என்று பதறி போன ஆசிபாவின் பெற்றோர்களும் குடும்பத்தார்களும் கத்துவா எனும் அவர்கள் பகுதியில் உள்ள மாவட்ட காவல் நிலையத்தில் தீபக் என்ற போலீசிடம் கம்ளேண்ட் கொடுக்கும் போது அதை பரிதவிப்போடும் காவல்துறை கடமை உணர்ச்சியோடும் பெற்றோரின் புகாரை பெற்று கொண்டு நடவடிக்கை எடுக்க கடமைபட்ட காவல் துறை அதிகாரி எட்டு வயது சிறுமி என்பதை கூட கருத்தில் கொள்ளாது உன் மகள் எந்த ஆடவனோடு ஓடிப்போயிருப்பாளா என்று விசாரித்தீர்களா ? என்று முட்டாள்தனமாக கேட்டதும்
3- புகார் செய்யப்பட்ட காவல்நிலையத்தில் வேலை செய்யும் நபர்களில் ஒருரான தீபக் காஜுரியா என்ற காமுகனும் மேலும் காவல் துறையில் வேலை செய்யும் நான்கு அதிகாரிகள் அந்த சிறுமியை கற்பழித்திருப்பதும்
4-இந்து மத ஆன்மீகத்தை போதிப்பதாக கூறும் கோயில் பூசாரி சான்ஜி ராம் என்ற 65 வயது பொருப்பாளரே இந்த கற்பழிப்புக்கு காரணமாக இருந்ததும்
5-கேவலமான கொடூரமான இந்த அநியாயத்தை அரங்கேற்றுவதற்க்கு ஒரு வாரம் முழுவதும் அப்பகுதியில் உள்ள புனிதமான கோயில் கருவறையை பயன்படுத்தியதும்
6- குற்றவாளிகள் அனைவரும் பீஜேபி மற்றும் ஹிந்துத்துவ அமைப்புகளில் அங்கம் வகிப்பதும்
7-இந்த குற்றவாளிகளை வழக்கி இருந்து தப்பிக்க வைக்க பீஜேபி அரசாங்கமே மறைமுகமாக முயற்சி செய்திருப்பதும்
8- இந்தியாவே இந்த விசயத்தில் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வரும் சூழலில் மத்திய அமைச்சர்களில் ஒருவரான அருண்ஜெட்லி என்பவர்
இந்த சிறுமியின் கொடூர கொலையை பெரிது படுத்தினால் இந்தியாவின் சுற்றுலா வருமானம் பாதிக்கப்படும் என்று ஈவு இரக்கம் இல்லாது காமுக குற்றவாளிகளுக்கு பரிந்து பேசி அறிக்கை தந்ததும்
இன்னும் இது போல் பல தேவையற்ற முட்டுக்கட்டைகளும் அவதூறுகளும் ஆசிபா விவகாரத்தில் பொய்யாக பரப்பப்பட்ட காரணத்தினால் தான் ஏனைய படுகொலைகளை விட இந்த படுகொலை இன்றளவும் கண்டிக்கப்பட்டு வருகிறது
இந்துமகா சபையை சார்ந்த ஒருவரே இந்த படுகொலை அரபு நாட்டில் தரப்படும் குற்றவியல் தண்டனைகளை போலே கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியது என்று பேட்டி கொடுத்திருக்கும் தருவாயில் தமிழகத்தின் பீஜேபி ஹெச். ராஜா என்பவர் கதவே இல்லாத கோவிலில் எப்படி அடைத்து வைத்து சிறுமியை கற்பழிக்க முடியும் என்று இந்த வழக்கின் காமுக குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார்
இந்நிலையில் ஆசிபா கடத்தப்பட்டு அடைக்கப்பட்டு கொடூரமாக கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கோவிலையும் அந்த கோவில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் இருப்பதையும் அந்த கோவிலில் பூட்டப்படும் கதவுகள் இருப்பதையும் அந்த கோவிலை சுற்றி அதிகமான காவிக்கொடிகள் பறப்பதையும் BBC போன்ற ஊடகங்களே பகிரங்கப்படுத்தி விட்டது
மேலும் இஸ்லாமிய அமைப்புகளும் நேரடியாக காஷ்மீர் கத்துவா மாநிலம் சென்று பிள்ளையை இழந்து போன பெற்றோர்களை சந்தித்தும் அந்த கோவிலை வீடியோக்கள் எடுத்தும் ஊடகங்கள் மூலம் உண்மையை பரவலாக வெளிப்படுத்தி உள்ளனர்
மதசார்பின்மை எனும் அரசியல் சாசனம் கொண்ட இந்தியாவை ஆளும் பீஜேபி அரசாங்கம் இவ்விசயத்தில் பொய்யான காரணங்களை மீண்டும் மீண்டும் கக்கி கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் தொங்கவிட வேண்டும்
இல்லாவிட்டால் ஆசிபா விவகாரம் தான் பீஜேபி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முதல் ஆயுதமாக இந்திய குடிமக்களால் மாற்றப்படும் என்பதை மறந்து விட வேண்டாம்
ஆட்சி என்பது நாட்டு மக்களை காப்பாற்றுவதற்க்கு தானே தவிர மதவெறியர்கள் துணிவாக வன்முறையில் ஈடுபடவும் காமுக கழிசடைகள் குழந்தைகளை கோவிலில் வைத்தே கற்பழித்து தூக்கி வீசிவிட்டு நிம்மதியாக நடக்க பாதுகாப்பு தருவதற்காகவும் இல்லை
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment