தவ்ஹீத் பெயரில் குப்பைகள்
தவ்ஹீத் எனும் போர்வையில்
குப்பை கூளங்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
24-03-18- சனிக்கிழமை
*********************
கட்டுரை எண் 1130
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
BISMILLAHIR RAHMANIR RAHEEM
★★★★★★★★★★★
தமிழகத்தில் முஸ்லிம்கள் கூத்தாடிகளுக்கு பின்னால் ரசிகர்களாக அலைந்து திரிந்த காலம் மாறி
தற்போது மார்க்கத்தின் பெயரால் இயக்கத்திற்காகவும் அதை சார்ந்த தலைவர்களுக்காகவும் கூத்தாடிகளின் ரசிகர்களை விட கேடுகெட்ட நிலையில் வக்காலத்து வாங்கியும் எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகங்களில் அலைந்து திரியும் ஒரு பெரும் கூட்டமே பல வேடங்களில் இன்று குர்ஆன் ஹதீஸ் பேசிக்கொண்டு அலைகிறது
ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று நகைச்சுவையாக கேள்வி பட்டிருப்போம்
ஆனால் வாட்சப் குரூப் போட்டு அவைகளில் விடிய விடிய தனி மனிதர்களின் மானத்தை கூறுபோட்டு விளையாடும் பித்னா வாதிகளாகவே இவர்கள் மாறி விட்டனர்
ஒரு சாராரை அல்லது பிற இயக்கங்களை விமர்சித்து நீலிக் கண்ணீர் வடிக்கும் எவர்களையும் நம்பாதீர்கள்
காரணம் கடந்த காலங்களில் அவர்களோடு இணைந்து இவர்களும் பிறர்களை மார்க்கத்தின் பெயரால் நிந்தித்தவர்கள் தான் அதில் பல அர்ப்பமான அகமகிழ்வை சந்தித்தவர்கள் தான்
இதே போன்ற நிலை தான் உங்களுக்கும் நாளை மாற கூடும்
சாமிசிலைகளை மாற்றி பெரியார் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தும் கடவுள் மறுப்பு அறிவீனர்களை விட
பல மடங்கு வழிகேடுகளின் பக்கம் பறந்து செல்லும் நிலையே இது போன்ற நபர்களிடம் கடுமையாக உருவாகி விட்டது
சினிமா போதை இருக்கும் வரை கூத்தாடிகளின் மீது மக்களுக்கு இருக்கும் போதையை நிச்சயம் ஒழிக்க முடியாது
மறுமையில் தனது நிலை என்னவாகும் என்று சிந்திக்கும் மனோ பக்குவத்தை இவர்கள் முறையாகவும் சுயமாகவும் படிக்கும் வரை யாராலும் இவர்களை திருத்தவும் முடியாது
பாவிகளிடம் பின்னூட்டங்களில் பேசி நீங்கள் சேமித்து வரும் உங்கள் சிறு நன்மைகளையும் நாசமாக்கி மறுமையில் திவாலாகி விடாதீர்கள்
எழுத்துக்களில் தான் பலர்களிடம் ஹதீஸ்கள் நிரம்பி வழிகிறது
ஆனால் அதன் மூலம் அவர்களின் பித்னாக்களே எரிமலை போல் பொங்கி வெடிக்கிறது
எதை பேசினாலும் அல்லது எவரை பற்றி பேசினாலும் இதனால் மறுமையில் நமக்கு என்ன நன்மை என்று மட்டும் யோசியுங்கள்
அல்லது இதை பேசாது போனால் மறுமையில் நமக்கு என்ன தண்டனை கிடைத்து விட போகிறது என்று மட்டும் சிந்தியுங்கள்
அப்போது தான் உங்கள் நாவையும் உங்கள் கைகளையும் நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள்
இல்லாவிட்டால் நரகத்தின் இடத்தை இப்போதே நீங்கள் ரிசர்வேசன் செய்து விடுவீர்கள்
எந்த போதையும் அதை பருகும் போது இனிமையாகவே தோன்றும்
அதன் பாதிப்புகளை அனுபவிக்கும் போது தான் அதை பற்றியே யோசித்து மன உளைச்சல்களுக்கு ஆளாவோம்
ஆபாச காட்சிகளை பார்க்காதீர்கள் என்று உலக மாந்தர்களுக்கு துண்டு நோட்டீஸ் பிளக்ஸ் போன்றவைகளை கொண்டு உபதேச அறிக்கை போட்டு விட்டு
தனது நாவுகளாலும் எழுத்துக்களாலும் பிறர்களின் அந்தரங்க ஆபாசங்களை பேசுவதையே சத்திய குரலாக விளங்கி உள்ளனர்
ஒரு காலத்தில் சத்தியத்தை நிலை நாட்டிட நான் தயார் என்று அறிஞர்களிடமே சவால் விட்டு பேசிய இளைஞர்கள்
இன்றைக்கு அவன் விபச்சாரம் செய்தான் இவள் விபச்சாரம் செய்தாள் என்று நான் நிரூபிக்க தயார் நீங்கள் இந்த சவாலுக்கு தயாரா என்று தரம் கெட்ட ஊதாரிகளை போல் அறிக்கை போட்டு இன்பம் காணுகின்றனர்
இதன் பின்னனியில் மார்க்க அறிஞர்களில் பலர்களும் தாயீக்களில் பலர்கள் இருப்பதும் அவர்களின் கண்ணியத்தையே சிதைத்து வருகிறது
தூற்றுவோரின் சொல்லை புறம் குறை அவதூறுகளை பரப்புவோரின் சொல்லை அல்லது அவர்களின் எழுத்தை ரசித்து கேட்போர் இருக்கும் வரை இந்நிலை மாறாது
இது போல் தூற்றுவதையே பிறரை விமர்சிப்பதையே பொழுது போக்காக வைத்திருக்கும் நபர்களை நோக்கியும் அவர்களின் குரூப்களிலும் காரி உமிழுங்கள் அப்போது தான் அவர்களின் நரக வாய்கள் அடைத்து போகும்
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: أَتَدْرُوْنَ مَا الْغِيْبَةُ؟ قَالُوْا: اَللّهُ وَرَسُوْلُهُ اَعْلَمُ، قَالَ: ذِكْرُكَ اَخَاكَ بِمَا يَكْرَهُ قِيْلَ: اَفَرَاَيْتَ اِنْ كَانَ فِيْ اَخِيْ مَا اَقُوْلُ؟ قَالَ: اِنْ كَانَ فِيْهِ مَا تَقُوْلُ، فَقَدِ اغْتَبْتَهُ، وَاِنْ لَمْ يَكُنْ فِيْهِ، فَقَدْ بَهَتَّهُ
புறம் பேசுவது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
என ரஸூலுல்லாஹி அவர்கள் ஸஹாபாக்களிடம் (ரலி) கேட்டார்கள் அல்லாஹ்வும் அவனது ரஸூலுமே மிக அறிவார்கள்' என ஸஹாபாக்கள் (ரலி) அவர்கள் கூறினார்கள்
தனது (முஸ்லிம்) சகோதரர் (இல்லாதபோது) அவரைப் பற்றி அவர் வெறுக்கும் வார்த்தையைப் பேசுவது (இதுவே புறம்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
எனது சகோதரரிடமுள்ள குறையைக் கூறினால் அது புறமாகுமா?என ஒரு ஸஹாபி கேட்க
நீர் கூறுகின்ற குறை அவரிடம் இருந்தால் நீர் புறம் பேசிவிட்டீர் (எதை நீர் கூறுகிறீரோ) அந்தக் குறை அவரிடம் இல்லை யெனில் நீர் அவர் மீது அவதூறு கூறிவிட்டீர்
என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் முஸ்லிம்
நட்புடன் J.இம்தாதி
Comments
Post a Comment