நரமாமிச விரும்பிகளாகும் முஸ்லிம்களும்
நரமாமிச விரும்பிகளாகும்
முஸ்லிம்கள்
_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^
கட்டுரை எண் 1128
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
BISMILLAHIR RAHMANIR RAHEEM
★★★★★★★★★★★
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ وَاتَّقُوا اللّٰهَ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்
ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்
(பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள் அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்
உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்
இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்
நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன் மிக்க கிருபை செய்பவன்
(அல்குர்ஆன் : 49:12)
நகைகடைகளில் பாதுகாப்பாக
இருக்க கூடிய தங்க கட்டிகள் சந்தை கடைகளுக்கு வருமேயானால் தங்க கட்டிகள் விலைவாய்ந்த பொருளாக இருந்தாலும் அதன் மதிப்பு மக்கள் மன்றத்தில் குறைந்து விடும்
அது போலவே ஒரு மனிதனின் அந்தரங்க விவகாரங்கள் ஊடகங்களிலும் சமூக
வலைதளங்களிலும் பரப்பப்படும் என்றால் அவரது கண்ணியமும் அதை பரப்புவோரின் கண்ணியமும் மக்கள் மன்றத்தில் தரைமட்டம் ஆகி விடும்
இந்த விவகாரத்தில் மறுமையை உறுதியாக நம்பும் முஸ்லிம்களில் பலர்களும் மார்க்க அறிஞர்களும் வீழ்ந்து கிடப்பதை பரவலாகவே தமிழகத்தில் தற்காலத்தில் காண முடிகின்றது
இதில் வேதனையான விசயம் என்னவென்றால் ஒரு மனிதனின் அந்தரங்கமான ரகசியத்தை காத்து கண்ணியம் பேணும் போதும் குர்ஆன் ஹதீஸ் சான்றுகளை மேற்கோள் காட்டி தனது நிலைபாட்டை நியாயப்படுத்துவதும்
அதே போல் அந்த மனிதனின் ரகசியத்தை வெளிப்படுத்தி அநாகரீகமாக நடக்கும் போதும் குர்ஆன் ஹதீஸ் சான்றுகளை மேற்கோள் காட்டி தனது தவறான நிலைபாட்டை நியாயப்படுத்துவதும்
இன்று முஸ்லிம்களிடம் ஊறிப்போய் விட்ட செயலாக மாறி விட்டது
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் நான் விபச்சாரம் புரிந்து விட்டேன் என்று அவரே முன் வந்து நபியவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தும் கூட
அந்த வாக்குமூலத்தை அவரது நிலையில் இருந்து சிந்தித்து அதை கண்டும் காணாதது போல் நடந்து கொண்ட நபிகளாரின் கண்ணியமான மாண்பு எங்கே
அந்த நபிகளாரை பின்பற்றுவதாக கூறும் நமது அநாகரீகமான செயல்பாடுகள் எங்கே ?
தண்டனை கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் இஸ்லாமிய ஆட்சி அதிகாரத்தை பெற்றவர்கள் தேடி எடுக்க வேண்டிய சாட்சிகளை எல்லாம்
இன்று பிறர்களை நிந்திக்கும் இழி குணம் உடையவர்கள் ஒரு மனிதனை இழிவு படுத்துவதற்க்கு அவருக்கு எதிரான ஆதாரங்களை தேடி அலையும் அவலங்களை பரவலாக கண்டு வருகிறோம்
நாம் சேகரிக்கும் நன்மைகளை விட சேமித்துள்ள தீமைகளே உச்ச கட்டம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள முற்பட வேண்டும்
ஒருவரின் அந்தரங்க ரகசியங்களை அவரது கண்ணியம் கருதி மூடி மறைத்து நடக்கும் பண்பாளர்களை போற்றும் இஸ்லாம்
ஒருவரின் தவறுகளை தேவை இல்லாது தோண்டி துருவுவதையும் அதை பரப்புவதையும் கடுமையாக கண்டிக்கின்றது என்பதை மட்டும் ஏட்டளவு பாடமாக மட்டுமே இன்று அநேகமானவர்களால் அறிந்து வைக்கப்பட்டுள்ளது
மதுபானத்தையும் பன்றி இறைச்சியையும் வெறுத்து நடக்கும் முஸ்லிம்கள் அந்த மதுபானம் மற்றும் பன்றி இறைச்சி ஏற்படுத்தும் விளைவுகளை விட பல மடங்கு மோசமான விளைவுகளை சமுதாயத்தில் எற்படுத்தி வரும் பித்னா எனும் குழப்பங்களில் ஆர்வத்தோடு ஈடுபடுவதை பெறுமையாகவும் திறமையாகவும் கருதி வருகின்றனர்
ஹராமான மதுபானமும் பன்றி இறைச்சியும் நமது நல்லறங்களை மறுமையில் முற்றிலும் நாசமாக்கி விடாது
மாறாக புறமும் குறையும் அவதூறுகள் போன்ற நரமாமிச பாவங்கள் நமது நன்மைகளை மிக வேகமாக அழிப்பதோடு நிறந்தரமான நரகில் கொண்டு போய் சேர்த்து விடும் என்பதை ஒரு வாரத்தில் ஐந்து நிமிடம் கூட சிந்திப்பது இல்லை
யாரைப்பற்றியான குறைகளை வெளிப்படுவதை நாம் ரசிக்கிறோமோ அவரது இடத்தில் நாமோ அல்லது நமது மனைவியோ அல்லது நமது பிள்ளைகளோ அல்லது நமது இதர குடும்பமோ இருந்தால் அப்போது நம் மனம் எந்தளவு மன உளைச்சல்களை சந்திக்கும் என்பதை உளப்பூர்வமாக உணராத எவராலும் இந்த நரமாமிச பாவங்களில் இருந்து ஒரு போதும் நிச்சயம் மீளவே முடியாது
=================
عَنْ اَبِيْ بَرْزَةَ اْلاَسْلَمِيِّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: يَا مَعْشَرَ مَنْ آمَنَ بِلِسَانِهِ وَلَمْ يَدْخُلِ اْلاِيْمَانُ قَلْبَهُ: لاَ تَغْتَابُوا الْمُسْلِمِيْنَ وَلاَ تَتَّبِعُوْا عَوْرَاتِهِمْ، فَاِنَّهُ مَنِ اتَّبَعَ عَوْرَاتِهِمْ يَتَّبِعِ اللهُ عَوْرَتَهُ، وَمَنْ يَتَّبِعِ اللهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِيْ بَيْتِهِ
நாவால் மட்டும் முஸ்லிமானவர்களே!
உள்ளங்களில் ஈமான் நுழையாத மக்களே!
நீங்கள் முஸ்லிம்களை புறம் பேசாதீர்கள்
அவர்களுடைய குறைகளைத் தேடித் திரியாதீர்கள்
ஏனேனில், எவர் அவர்களுடைய குறைகளைத் தேடித்திரிகிறாரோ, அல்லாஹுதஆலா அவருடைய குறைகளை பின் தொடர்கிறான்
அல்லாஹுதஆலா எவருடைய குறைகளைப் பின்தொடர ஆரம்பித்து விடுவானோ அவனை வீட்டில் இருக்க வைத்தே கேவலப்படுத்துவான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபர்ஸா அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் அபூதாவுத்
***********************
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: وَاَرْبَي الرِّبَا اِسْتِطاَلَةُ الرَّجُلِ فِيْ عِرْضِ اَخِيْهِ
மிகத் தீய வட்டி தன் முஸ்லிம் சகோதரரை மானபங்கப்படுத்துவது (அவரது கண்ணியத்தை குறைப்பது, அது எந்த வழியில் செய்தாலும் சரியே
உதாரணமாகப் புறம் பேசுவதன் மூலமோ கேவலமாகக் கருதுவதன் மூலமோ, இழிவுபடுத்துவதன் மூலமோ இருந்தாலும் சரியே)
என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் பராஇப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் தப்ரானி
*****************************
عَنْ اَبِيْ سَعْدٍ ؓ وَجَابِرِ بْنِ عَبْدِ اللهِ ؓ قَالاَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْغِيْبَةُ اَشَدُّ مِنَ الزِّنَا قَالُوْا: يَا رَسُوْلَ اللهِﷺ وَكَيْفَ الْغِيْبَةُ اَشَدُّ مِنَ الزِّنَا؟ قَالَ: اِنَّ الرَّجُلَ لَيَزْنِيْ فَيَتُوْبُ فَيَتُوْبُ اللهُ عَلَيْهِ، وَاِنَّ صَاحِبَ الْغِيْبَةِ لاَ يُغْفَرُ لَهُ حَتَّي يَغْفِرَهَا لَهُ صَاحِبُهُ
புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக் கொடியது'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ்
புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக் கொடியதாக எவ்வாறு ஆகும்? என ஸஹாபாக்கள் (ரலி) கேட்டனர்
ஒருவன் விபச்சாரம் செய்துவிட்டுத் தவ்பா செய்தால் அல்லாஹுதஆலா அவனது தவ்பாவை ஒப்புக்கொள்வான்
ஆனால், எவரைப் பற்றிப் புறம் பேசப்பட்டதோ அவர் மன்னிக்காதவரை அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து புறம் பேசியவனுக்கு மன்னிப்புக் கிடையாது என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஃத் மற்றும் ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் பைஹகீ
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment