மிஃராஜ் பயணமும் மின்னல் பயணமும்
நபி( ஸல்) அவர்களின்
மிஃராஜ் பயணமே மின்னல் பயணம்
_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^
கட்டுரை எண் 1127
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
سُبْحٰنَ الَّذِىْۤ اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَـرَامِ اِلَى الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ مِنْ اٰيٰتِنَا اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன் அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்
(மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்
நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்
(அல்குர்ஆன் : 17:1)
அறிவியல் சார்ந்து மிஃராஜ் தொர்பாக பல அறிஞர்கள் விளக்கிய கட்டுரைகள் இருந்தாலும்
பாமரர்களும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவு நம் தோரணையில் ஓரளவு நாம் இக்கட்டுரையை முயற்சித்து வடிவமைத்துள்ளோம்
==================
BISMILLAHIR RAHMANIR RAHEEM
★★★★★★★★★★★
பயணத்திற்கான வாகனங்கள் இல்லாத காலத்தில்
அதுவும் அறிவியல் அடிப்படை அறிவை கூட பெறாத பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால்
நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் அவர்கள் வாழ்ந்த மக்கா எனும் நகரில் இருந்து 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பாலஸ்தீன் பகுதியில் அமைந்துள்ள பைதுல் முகத்தஸ் என்ற புனித இடத்திற்க்கு எப்படி நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்க முடியும் ?
அங்கிருந்து ஏழு வானங்களை கடந்து எப்படி விண்வெளிப் பயணம் சென்றிருக்க முடியும் ?
அதே இரவில் இறந்து விட்ட பல நபிமார்களை சந்தித்து கலந்துறையாடல்களை எப்படி நடத்தி இருக்க முடியும் ?
அதே இரவில் நரகம் சொர்க்கம் போன்ற அரிய பல காட்சிகளை குறுகிய நேரத்தில் எப்படி நபி (ஸல்)அவர்கள் அவர்களின் கண்களால் நேரடியாக கண்டிருக்க முடியும் ?
அதே இரவில் ஏக இறைவனை சந்தித்து மார்க்கத்தின் சில கட்டளைகளை எல்லாம் எப்படி துல்லியமாக வாங்கி வந்திருக்க முடியும் ?
இது போன்ற பல சந்தேகங்கள் இஸ்லாத்தை ஏற்று கொள்ளாத நபர்களிடம் மாத்திரம் அல்ல
மாறாக இஸ்லாத்தை நம்பும் பரம்பறை முஸ்லிம்களிடத்தில் கூட நம்மால் பரவலாக காண முடிகின்றது
****************
நபி (ஸல்)அவர்கள் மனிதன் என்ற முறையில் கடந்த பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் இவ்வாறு செய்து காட்டினார்கள் என்று சொன்னால் நிச்சயமாக அதை பகுத்தறிவு உள்ள எவராலும் ஏற்க முடியாது என்பது உண்மை தான் மறுக்க முடியாது
காரணம் சேவிங் செய்யும் மென்மையான பிளேடுகளும் கூட இல்லாத ஒரு காலம் தான்
நபி( ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம்
அதே நேரம் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தை படைத்து பரிபாலித்து வரும் இறைவனின் தூதராகவும் இறைவனின் வல்லமையின் மூலமாகவும் நபி( ஸல்)அவர்கள் இந்த நிகழ்ச்சியை மிஃராஜ் எனும் பயணத்தை நடத்தி காட்டினார்கள் என்று நம்புவது முஸ்லிம் என்ற அடிப்படையில் நம் பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல
மாறாக அவ்வாறு நம்புவதும் பகுத்தறிவு தான்
காரணம் சர்வ வல்லமை நிறைந்தவனே அல்லாஹ் (ஜல்)
என்பதே இஸ்லாமியர்களின் அடிப்படை ஈமானிய நம்பிக்கையாகும்
++++++++++++++++++++++++
அவசரமின்றி நிதானமாக படிப்பீர்
*********************
நூறு கிலோ மீட்டர் தொலை தூரத்தை தங்கு தடையில்லாது சுற்றி வருவதற்க்கு பயிற்சி பெற்ற மூன்று நபர்களை தேர்வு செய்து அந்த மூவருக்கும் மூன்று வகையான வாகனத்தை நாம் தருகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள்
உதாரணமாக ஒருவரின் வாகனம் ஒரு மணி நேரத்திற்க்கு பத்து கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் திறன் உடையது
இரண்டாம் நபரின் வாகனம் ஒரு மணி நேரத்திற்க்கு ஐம்பது கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் திறன் உடைய வாகனம்
மூன்றாம் நபரின் வாகனம் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் திறன் உடைய வாகனம்
1-இதில் தீர்மானிக்கப்பட்ட நூறு கிலோ மீட்டர் தூரத்தை தங்கு தடையின்றி சுற்றி வர பத்து கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய இயலும் வாகனத்தை பெற்றவர்
அந்த பயணத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்ட இடத்திற்க்கு சென்று மீண்டும் இருப்பிடம் திரும்பி வர இருபது மணி நேரங்கள் ஆகும்
2-அதே இடத்தை ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வாகனத்தை பெற்றவர்
அந்த பயணத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்ட இடத்திற்க்கு சென்று மீண்டும் இருப்பிடம் திரும்பி வர நான்கு மணி நேரங்கள் ஆகும்
3- அதே இடத்தை நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வாகனத்தை பெற்றவர் அந்த பயணத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்ட இடத்திற்க்கு சென்று மீண்டும் இருப்பிடம் திரும்பி வர இரண்டு மணி நேரங்கள் மட்டுமே ஆகும்
இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில்
நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் நபர் மீண்டும் குறிப்பிடப்பட்ட இடத்தில் இருந்து பிறப்பிட்ட இடத்திற்க்கு திரும்பி வரும் போது தான்
பத்து கிலோ மீட்டர் வேகத்தில் குறிப்பிட்ட இடத்தை நோக்கி பயணத்தை துவங்கியுள்ள முதலாம் நபர் அப்போது தான் அவர் செல்லும் இடத்தை நோக்கி இருபது கிலோ மீட்டர் மட்டுமே முன்னோக்கி பயணம் செய்திருப்பார்
அதாவது நூறு கிலோ மீட்டர் வேகத்தில் நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடத்தை அடைந்து
அதன் பின் அங்கிருந்து மீண்டும் 80 கிலோ மீட்டர் தாண்டி ஆக மொத்தத்தி 180 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்த பின்பு தான்
பத்து கிலோ மீட்டர் தூரத்தில் பயணம் செய்யும் நபர் அவருடைய பயணத்தில் மொத்தமே இருபது கிலோ மீட்டர் தூரத்தை மட்டுமே எட்டி இருப்பார்
இந்த சூழலில் 180 கிலோ மீட்டர் சுற்றி வந்த நபரை பார்த்து 20 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்தவர் இது எப்படி உனக்கு சாத்தியம் என்று வியந்து கேட்டால் அது அறிவாரத்தமான கேள்வி அல்ல
காரணம் பயணத்தின் வேகம் எந்தளவு விரைவாக இருக்கிறதோ அந்தளவுக்கு பயணிப்போரின் திரும்புதல் மிகவும் விரைவாகவும் பல காட்சிகளை கண்டு வரும் சூழலிலும் நிச்சயம் அமைந்தே இருக்கும்
+++++++++++++++++++++++++
ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் வேகத்தில் முதலிடம் வகிப்பதும் நம்மால் வெல்ல இயலாத ஒன்றுமாய் இருப்பது தான் ஒளி வேகம்
ஒரு விநாடிக்கு மூன்று இலட்சம் கிலோ மீட்டர் தூரத்தை ஒளி வேகம் அடைந்து விடும்
இது தான் அறிவியல் உண்மை ஆகும்
***********************
ஒளி உவமை விளக்கம்
-------------
ஓட்டப்பந்தயத்தில் சிறந்து விளங்கும் ஒரு ஆரோக்யமான மனிதனை நம்மில் இருந்து முப்பது அடி தள்ளி நிறுத்தி வைத்து கொண்டு அங்கிருந்து அவனை வேகமாக ஓட சொல்லிய பின்
அதே நேரம் நின்று கொண்டிருக்கும் நம் கையில் டார்ச் லைட்டை ஓடும் நபரின் திசையை நோக்கி ஆன் செய்து அவர் ஓடும் பாதையை நோக்கி நம் டார்ச் லைட்டின் ஒளியை செலுத்தினால் மறு மைக்ரோ நிமிடமே அந்த மனிதனை விட நாம் அனுப்பும் ஒளியின் தாக்கம் முந்தி சென்று விடும்
இதுவே ஒளி வேகத்தை நீங்கள் புரிந்து கொள்ள நம் சிற்றரிவில் தோன்றிய எளிமையான உதாரணம்
+++++++++++++++++++++++++
நபிகளாரின் மிஃராஜ் பயண
ஒப்பீடு
********************
நபி( ஸல் )அவர்கள் மிஃராஜ் என்ற பயணத்தை செய்தார்கள் என்று சொன்னால் அவர்கள் சுயமாக இறக்கையை தயாரித்து அதை தனது உடலில் மாட்டி பறந்து செல்லவில்லை
1- மாறாக ஒளியால் படைக்கப்பட்ட ஜிப்ரயீல் எனும் வானவரின் மூலமாக தான் நபி (ஸல்)அவர்கள் மிஃராஜ் எனும் பயணம் மேற்கொண்டார்கள்
2- அவர்கள் பயணித்த வாகனத்தின் பெயரே புராக் என்று அரபியில் (ஹதீஸ்களில்) சொல்லப்படுகிறது
புராக் என்ற அரபி பதத்திற்க்கு மின்னல் அதாவது ஒளி என்பது தான் அப்பதத்தின் நேரடியான பொருளாகும்
இப்போது நீங்கள் சிந்தித்து பாருங்கள் ஒரே இரவில் வான் மண்டலத்தின் பல கோடி கிலோ மீட்டர்களை கடந்து மிஃராஜ் என்ற புனித பயணத்தில் வானவர் துணையோடு நான் பயணம் மேற்கொண்டேன் என்று நபி( ஸல்) அவர்கள் குறிப்பிடுவது அறிவியலுக்கு ஒத்து போகும் விசயமா ? அல்லது பகுத்தறிவுக்கும் இன்றைய அறிவியலுக்கும் எதிரான விசயமா?
+++++++++++++++++++++
உடலியல் மாற்றம்
--------
ஆகாயப் பயணம் மேற்கொள்வோரின் விண்வெளி வீரர்களின் இதயமே சாதாரண மனிதனை விட விரிந்து சுருங்கும் போது
அதை விட அதிசயமான காலப்பயணத்தை மேற்கொள்வோரின் இதயம் எந்தளவுக்கு சுக்கு நூறாக வெடிக்கும் நிலை ஏற்படும் என்பதை சிந்தித்து பாருங்கள்
ஆதலால் தான் மிஃராஜ் பயணத்தை மேற்கொள்ளும் முன் நபி( ஸல்) அவர்களின் இதயம் வானவர்களின் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காலப்பயணத்துக்கு ஏற்று மாற்றம் செய்யப்பட்டது என்ற அற்புதமான ஹதீஸ்களும் ஆணித்தரமாக பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பதிவாக்கப்பட்டுள்ளது
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்ற முழு தகவலையும் புராக் எனும் மின்னல் வாகனத்தை பற்றியும் அவர்களின் இதயம் அறுவை சிகிட்சை செய்யப்பட்டதையும் அறிந்து கொள்வதற்க்கு
முஸ்லிம் -259 புகாரி 3207
எண்களை பார்வையிடுங்கள்
இந்த கட்டுரையின் சுருக்கத்தை கருத்தில் கொண்டு நீளமான அந்த ஹதீஸை நாம் இங்கு பதிக்கவில்லை
++++++++++++++++++++++++
சார்பியல் அறிவு
-------------
அறிவியல் சார்ந்த சார்பியல் கோட்பாட்டை ஓரளவுக்கு அறிந்துள்ள கல்வி ஞானம் உடையோர்களுக்கு நமது மிஃராஜ் எனும் இந்த கட்டுரை மிகவும் எளிமையாக புரியும்
சார்பியல் கோட்பாடு என்றால் என்ன என்பதை முற்றிலும் அறிந்து கொள்ள முயற்சி செய்யாதவர்களுக்கு இந்த கட்டுரை புரியாது போனால்
அதற்க்கு J .யாஸீன் (இம்தாதி)எனும் நான் காரணம் அல்ல
சிந்திப்போம் நம் ஈமானை பலப் படுத்துவோம்
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment