சிந்தனையே சீரிய வழிகளின் ஆயுதம்

    சிந்தனையே சீரிய வழிகாட்டும்

    
   <<<<<<•••••••••••••••••••••>>>>>>
            கட்டுரை எண் 1196
                    24-02-18
    ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி

            ^^________________^^
     Bismillahir Rahmanir Raheem
              ******************

கட்டிடத்தின் முட்டத்தில் ஓடும் மின்விசிறியை கீழ் இருந்து பார்க்கும் நபருக்கு தலைக்கு மேல் சுழலும்  அந்த மின்விசிறி அதன் இடது புறத்தில் சுற்றுவதாக கண்கள் விடை சொல்லும்

அதே நேரம் அவரது கைவிரலில் ஒன்றை வலது புறமாக  சுற்ற சொன்னால் அவர் கை விரலை அவர் காணும்  மின்விசிறியின் சுழற்சிக்கு எதிர்புறமாக  சுற்றுவார்

அதாவது மின்விசிறியின் கீழ் அமர்ந்துள்ள நபர் தனது கைவிரலை  வலது புறம்  வட்டமிட்டு சுற்றுவதாகவும்  கருதுவார்

இந்த பதிவை  முழுமையாக படித்து முடிக்கும் முன்பே உங்கள் தலைக்கு மேல் மின்விசிறி சுழன்று கொண்டிருந்தால் அது எந்த புறம் சுற்றுகிறது என்பதை இப்போது பாருங்கள் அல்லது கற்பனை செய்து பாருங்கள்

அதே போல் உங்கள் வலது கையின் விரல்களையும் மேல்பகுதி நோக்கி வலது புறமாக சுற்ற வைத்தும்  பாருங்கள்

   =========================

இவ்விசயத்தில் உங்கள் கண்கள் கூறும் விடையை  மாத்திரம் நம்பி  முடிவு செய்தால் உங்கள்   முடிவில் தவறான முடிவையே எடுத்திருப்பீர்  என்பது தான் உண்மை

இந்த குழப்பம் மனிதனுக்கு இறைவன்  வழங்கியுள்ள  கண்களால் ஏற்பட்ட குழப்பம் அல்ல

மாறாக இறைவன் வழங்கிய பகுத்தறிவை இவ்விசயத்தில்பயன் படுத்த தவறிவிட்டு  பகுத்தறியும் தன்மை இல்லாத நமது கண்கள் சொல்லிய முடிவை  நம்பியதே இந்த தவறான  முடிவுக்கு  மூல காரணம்

உண்மையில் உங்கள் கைகளை நீங்கள் வலது புறம் சுற்றியது போல் தான் உங்கள் கண் முன் சுற்றும் மின்விசிறியும் அதன் வலது புறம் சுற்றுகிறது

உங்கள் கை விரலை வான் நோக்கி சுழற்றி கொண்டே தரை நோக்கி வைத்து இப்போது அந்த மின்விசிறியை பாருங்கள் அந்த மின்விசிறியும் உங்கள் கை விரலும் வலது புறமாக சுற்றும்

அதாவது மின்விசிறியின் கீழ் இருந்து பார்க்கும் போது தான் இடது புறம் சுற்றுவதாக தோணும் அதே மின்விசிறியை மேல் புறம் இருந்து பார்த்தால் அதுவும் வலது புறமாக சுற்றும்

இது தான் எதார்த்தம்

இதன் மூலம் பெற வேண்டிய பாடம் என்ன ?

பகுத்தறிவை பெற்றிருப்பதால் மாத்திரம் ஒருவன் சரியான ஒன்றை கண்டறிய முடியாது

மாறாக அந்த பகுத்தறிவையும்  அதை சார்ந்து சிந்திக்கும் போது தான் எந்த ஒன்றின்  உண்மை நிலையையும்  அறிய முடியும்

உலகில் அநேகமான மனிதர்கள் இந்த உண்மையை சிந்திக்காத காரணத்தால் தான் ஆன்மீகத்திலும் சரி  உலகியல் விவகாரங்களிலும் சரி  ஏமாற்றத்தையும் விரக்தியையும் அடைந்து அதன் மூலம்  மூடநம்பிக்கைகளிலும் சிக்கி தவிக்கின்றனர்

சிங்கத்தை காட்டி விட்டு இதை குரங்காக பாருங்கள் என்று ஒரு ஆன்மீகவாதி சொன்னால் அவர் மீதுள்ள மரியாதையால் கூட நாம் அந்த  சிங்கத்தை குரங்கு என்று கூற மாட்டோம்

அதே ஆன்மீகவாதி கற்களால் செதுக்கப்பட்ட சிலைகளை காட்டி இதை கடவுளாக பாருங்கள் என்று சொல்லும் போது  நாம் நமது பகுத்தறிவை கழட்டி வைத்து விட்டு அதை கடவுளாக வணங்க தயாராகி விடுகிறோம்

சக மனிதனை மனித உணர்வுகளுக்கு உட்பட்டு பார்க்கும் நாம் ஆன்மீக வேடம் போட்டுள்ள குருமார்களை  மாத்திரம் மனித இயல்புக்கு மாற்றமான நிலையில் கற்பனை செய்து  கொண்டு அவர்கள் சுயமாக கூறும் சொற்களை எல்லாம்  தெய்வ வாக்குகளாக நம்பி சிந்திக்க வேண்டிய நமது பகுத்தறிவை  இழப்பதோடு பல நேரங்களில் அவர்களின் சூழ்ச்சியில்  கர்ப்பையும் இழந்து விடுகிறோம்

முறையான சிந்தனையே நமக்கு சீரிய வழி காட்டும்

முறையற்ற சிந்தனையோ நம் வாழ்நாளையே நாசமாக்கும்

شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا  بِالْقِسْطِ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான்

மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை

அவன் மிகைத்தவன் ஞானம் மிகுந்தவன்

        (அல்குர்ஆன் : 3:18)

اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِ ‏ 

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும் இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன

         (அல்குர்ஆன் : 3:190)

          நட்புடன்  J.இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்