தொலை தொடர்பு

   தொலை தொடர்பு போட்டியால்

தொலைந்து போகும் கம்பனிகள்

           குடுமி சண்டையிடும்

                     AIRTEL-- JIO
     ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
   22-02-18--வியாழன் கிழமை
            --------------------------------
          J . Yaseen iMthadhi
                  ==========

வணிகத்தில் போட்டி இருக்கலாம் அவ்வாறு போட்டி ஏற்பட்டால் அது பொது  மக்களுக்கு நன்மைகளை அதிகம் பெற்று தரும்  சந்தேகம் இல்லை

அதே நேரம் எந்த  வணிகத்திலும்  பொறாமை எனும் நஞ்சு அமைந்து விடக்  கூடாது

அவ்வாறு அமைந்தால் அந்த நஞ்சு  அவர்களையும் நாசமாக்கி அவர்களை நம்பி வேலை பார்க்கும் ஊழியர்களையும் பிற  வணிகர்களையும் நாசமாக்கி விடும் என்பதற்க்கு தான் தற்போது நடைபெற்று வரும் JIO மற்றும் AIRTEL நிறுவனங்களின் குடுமி சண்டை

தற்போது இந்திய அளவில் தொலை தொடர்பு  சிம் நிறுவனங்களுக்கு இடையில் எற்பட்டிருப்பது ஆரோக்யமான  போட்டி  அல்ல மாறாக ஒருவரை ஒருவர் அழித்து கொள்ள அவர்களே அவர்களுக்கு தோண்டிக்கொள்ளும் புதைகுழி தான்

இவர்களின் அநாகரீகமான போட்டியின் காரணமாக  தொலை தொடர்பு கட்டணங்கள் மற்றும்  டேட்டாக்கள்  மலிவாக கிடைக்கிறது என்பதற்காக இது போன்ற   ஆரோக்யமற்ற போட்டிகளை  செயல்பாடுகளை அங்கீகரிப்பதும் ரசிப்பதும் சிறந்த பண்பாடு அல்ல

எந்த நிறுவனமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கீழ் வேலை பார்க்கும்  பலர்களின் குடும்ப வருமானம் பாதிக்கப்படும் என்ற உண்மையை சிந்திக்க மக்கள்  மறந்து விட கூடாது

நிறுவனங்கள் தடைபடுவதால் அதை நடத்தும்  தொழில் அதிபர்கள் பாதிக்கப்பட போவது இல்லை

காரணம் அதன் மூலம் கோடான கோடிகளை அவர்கள் சம்பாரித்து கொண்டிருப்பதால் தான் இது போன்ற ஆரோக்யமற்ற போட்டிகளே நிலவுகிறது

அதே நேரம் அந்த நிறுவனங்களின்  கீழ் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள்  தான் சம்பளம் தடை பட்டு அல்லது வேலை இழந்து பாதிக்கப்படுவார்கள் என்பதை பொதுமக்களாகிய நாம் நினைவில்  வைக்க வேண்டும்

ஊழியர்களின் சம்பளம் கட்டிட வாடகைகள் மற்றும்  இதர செலவினங்களை மையமாக வைத்து  தொலை தொடர்பு நிறுவனங்கள் மக்களுக்கு சிரமம் தராத வகையில்  பொதுவான ஒரு இலாபத்தை ஒன்று கூடி பேசி இதற்க்கு தீர்வு காண முன் வர வேண்டும்

தொலை தொடர்பு தரத்தை கூட்டி இதர நிறுனங்களை  விட தங்களது கம்பனிகளை முன்னுக்கு கொண்டு செல்வது குற்றம் இல்லை

ஆனால் தரத்தை காட்டி பிற கம்பனிகளின் வயிற்றில் அடிப்பது கயமைத்தனம் என்பதை உணர வேண்டும்

JIOநிறுவனத்தால் AIRTEL போன்ற  பிற நிறுவனங்கள்  இதுவரை அடித்து வந்த கொள்ளை இலாபம் தடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை என்றாலும்

அதே JIO நிறுவனத்தால் பிற கம்பனிகள் அழிவை நோக்கி செல்கிறது என்பதை தற்போது  மறுக்க இயலாது

இது போன்ற ஆரோக்யமற்ற சூழ்நிலை தொடர்வதை கண்டும் காணாதது போல் இருக்கும் மத்திய அரசாங்கம்

தனியார் கம்பனிகளுக்கு ஜால்ரா போட்டும் விளம்பரங்களை செய்து  கொண்டும் இருக்காமல்  அனைத்து கம்பனிகளும் நியாயமான வகையில்  பொருளீட்ட வழிவகை செய்ய வேண்டும்

அரசாங்க நிறுவனமான BSNL தொலை தொடர்பின் பலவீனத்தால் தான் இந்த அவலநிலையே நம் நாட்டில்  ஏற்பட்டுள்ளது என்பதை சிந்தனை உடைய எவரும் மறுக்க மாட்டார்கள்

ஒரு இணைப்பை பெற பல விதிமுறைகளை ஏற்படுத்தி மக்களுக்கு தந்த சிரமத்தின் எதிரொலி தான் இன்று BSNL நிறுவனமும் சந்தையில் கூவி கூவி காய்கறி விற்பனை செய்வதை போல் தங்களது சிம்மை விற்பனை செய்யும் அளவு நிலமை மாறிவிட்டது

     எதிர்பார்ப்புடன் J .இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்