வெளிநாட்டு மோகம்
தம்பதியர்களின்
ஆடம்பர மோகமும்
ஆபத்தான சூழல்களும்
=======================
<<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1195
19-02-18
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
மனிதனின் கூட்டு முறை வாழ்கைக்கு பணம் தேவை இதை மறுக்க இயலாது
ஆனால் வாழ்வதே பணத்திற்காக என்ற எண்ணம் மேலோங்கி தன்னை நம்பி இருக்கும் உறவுகளின் இதர கடமைகளையும் மறந்து நடக்கும் தம்பதியர்கள் இன்று பெருகி விட்டனர்
திருமணம் செய்த சில மாதங்களிலேயே மனைவியை உள்நாட்டில் தனியாக விட்டு பிரிந்து வெளிநாடுகளில் பணத்தை ஈட்ட வேலைக்கு செல்லும் இளைய தலைமுறை இன்று ஏராளம்
ஒரு வகையில் அவனோடு வாழ்கையில் இணைந்த மனைவியின் ஆடம்பர ஆசைகளும் இதற்க்கு மூல காரணமாகும்
இதன் மூலமாக பல மாதம் பிரிவை சந்தித்து வரும் இரு சாராரும் வழி மனஉளைச்சலில் தவிக்கும் அவலங்களையும் வழி தவறி ஒழுக்க கேடுகளில் சிக்கி தவிக்கும் சம்பவங்களும் இன்று தாராளம்
வெளிநாட்டில் இருக்கும் கணவன் குடும்பத்திற்க்கு தேவையான பணத்தை அனுப்பி வைக்க முடியுமே தவிர
மனைவிக்கு தர வேண்டிய இல்லற சுகத்தை வங்கிகளின் மூலம் அனுப்பி தர முடியுமா
அல்லது நான் நாடு திரும்பும் வரை அந்த சுகத்தை இந்த நபரிடம் நீ பெற்று கொள்
அதை சுகத்தை நான் இந்த நபரிடம் பெற்று கொள்கிறேன் என்று நபர்களை மாற்றி கொள்ள முடியுமா
உணர்வுகளை தூண்டி விடும் ஆசாபாசங்கள் நிறைந்திருக்கும் இக்காலத்தில்
சிறுவர்களே பல விதங்களில் சீரழியும் இக்காலத்தில் இதை கூட உணராது வாலிபத்தை வீணாக்கியும் இல்லற கடமைகளை புறக்கணித்தும் வெளிநாட்டு மோகத்தில் தம்பதியர்கள் வாழ்கின்றனர்
விலை கொடுத்து பொருளை வாங்கலாம் ஆனால் இல்லறம் எனும் திருப்தியை கடைவீதிகளில் வாங்க இயலுமா
கண்காணிப்பு இல்லாத கட்டுப்பாடுகளை எப்போதும் தம்பதியர் இரு சாராரும் பேணி நடப்பார்கள் என்று குருட்டு நம்பிக்கை வைப்பது மடமைதனம்
அதன் விளைவுகளில் ஒன்று தான் கள்ளக்காதலும் கள்ளக்காதலியும்
சொந்த நாட்டுக்கு விடுமுறையில் வரும் கணவன் தனது கள்ளத்தனத்தை கண்டு பிடித்து விட கூடாது என்பதற்காகவே கட்டிய கணவனை உடனடியாக வெளிநாட்டுக்கு விரைவாக அனுப்பும் சில மனைவியர்களும் உள்ளனர்
அதே போல் சொந்த நாட்டில் பத்தினியாக மனைவி இருந்தாலும் அவள் மீது கொண்ட விருப்பு வெறுப்பின் காரணமாகவோ அல்லது அவளது கணவனின் மீது கொண்ட விருப்பு வெறுப்பின் காரணமாகவோ வெளிநாட்டில் இருக்கும் கணவனின் காதுகளுக்கு தப்பான அவதூறான செய்திகளை பரப்பி விட்டு அதன் மூலம் நல்ல தம்பதியர்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் ஈனப்பிறவிகளையும் பார்க்கிறோம்
சந்தேகத்திற்கான வாசல்களை இரு சாராரும் திறந்து வைத்து விட்டு சந்தேகம் கொள்வது பாவம் என்று இரு சாராரும் ஊருக்கு மழுப்புக்காக கூறுவது தனது தவறை நியாயப்படுத்தும் வழிமுறையாகும்
கணவன் சொந்த ஊரில் இல்லை என்பதை வாய்ப்பாக பயன் படுத்தி ஊர் சுற்றும் மனைவிகளும் ஆடம்பரமாக செலவு செய்யும் மனைவிகளும் ஏராளம்
ஒரு பெண்ணிண் கணவன் சொந்த நாட்டில் இல்லை என்பதை தந்திரமாக தெரிந்து கொண்டு பல விதங்களில் அப்பெண்ணை தவறாக அணுக முயற்சிக்கும் கழிசடைகளும் ஏராளம்
பேப்பர் போடும் நபர்கள் கேபிள் பணம் வாங்கும் நபர்கள் பால் சப்ளை செய்யும் நபர்கள் வீட்டிற்க்கு வாகன ஓட்டிகளாக இருக்கும் நபர்கள் கணவனின் நட்பை காரணம் காட்டி அடிக்கடி வீட்டுக்கு வரும் நண்பரகள் அதிகமாக இந்த கேவலத்தில் ஈடுபவதை அன்றாடம் நாம் ஊடக செய்திகளில் காண முடிகின்றது
இருக்கும் சம்பாத்தியத்தை கொண்டே திருப்தி பெறும் தன்மையை தம்பதியர்கள் உருவாக்கி கொள்ள வேண்டும்
அல்லது கணவன் வேலை பார்க்கும் நாட்டிற்க்கே தனது மனைவியை உடன் அழைத்து வெளிநாட்டில் தங்கி வாழ கற்று கொள்ள வேண்டும்
மானம் போய்விட்டால் மீண்டும் அந்த மானத்தையும் கண்ணியத்தையும் திருப்பி வாங்க இயலாது என்ற உணர்வை பெற வேண்டும்
இரு சாராரும் விலகி இருந்து பத்தினிகளாக வாழ்ந்தாலும் தேவையான வயதில் இல்லறத்தை கோட்டை விடுவது உளவியல் மற்றும் உடலியல் ரீதியான பல பாதிப்புகளை மறைமுகமாக ஏற்படுத்தும் என்பதை மறவாதீர்
கோடிகளை சம்பாரித்து விட்டு வயது முதிர்ந்த சூழலில் உடலியல் இயலாமையில் சொந்த நாட்டில் வந்து வாழா வெட்டிகளாகஊருக்கு கணவன் மனைவியாக இணைந்து காட்சி தருவதற்க்கு பெயர் அல்ல இல்லறம்
அதன் விளைவுகளில் ஒன்றே கீழ்காணும் ஊடக தகவல்
இதில் கணவன் முதல் குற்றவாளி மனைவி இரண்டாம் குற்றவாளி கள்ளக்காதலன் மூன்றாம் குற்றவாளியே
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment