புனித ஆலயம்
கன்னியாகுமரி சபரிமலை
பக்தர்களின் திண்டாட்டமும்
புனித பூமி காஃபாவின்
தனிச்சிறப்பும்
=======================
<<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1194
17-02-18
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
தமிழகத்தின் எல்லையான கன்னியாகுமரியில் சபரிமலைக்கு செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் ஆயிரக்கணக்கில் டூரிஸ் பஸ்களிலும் இதர வாகனங்களிலும் வருவது வாடிக்கை
குறிப்பாக சீசன் நேரங்களில் ஐய்யப்ப பக்தர்களின் நிறங்களே குமரியில் தென்படும் இடங்களில் எல்லாம் காணும் காட்சியாகும்
அந்த பக்தர்களின் வருகையை வைத்தே கன்னியாகுமரி நிர்வாகம் கோடி கணக்கில் சம்பாரித்து வருகிறது
ஆனால் வருகை தரும் ஐய்யப்ப பக்தர்களின் அடிப்படை தேவைகளான காலை கடன்களை நிறைவேற்றுவதற்க்கு கூட சுகாதாரமான கழிப்பிடங்கள் சுற்றுலாதளமான கன்னியாகுமரியில் இல்லாத சூழ்நிலையில்
வருகை தரும் சபரிமலை பக்தர்களான ஆண் பெண் குழந்தைகள் உட்பட அனைவரும் காலை கடன்களை கழிப்பதற்க்கு கூட மிகவும் சிரமப்படுவதை பல காலமாக தமிழக அரசாங்கம் கண்டு கொள்வது இல்லை
ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க இயலாது என்ற சாதாரண நடைமுறை வார்த்தையின் வலியை கூட உணராதவர்களாக உள்ளனர்
கன்னியாகுமரி பீச் ஓரங்களில் உணவருந்தும் கடை ஓரங்களில் ஏன் காணும் இடங்களில் எல்லாம் ஐய்யப்ப பக்தர்கள் கூச்சத்தை அடக்கி மலம் ஜலம் கழிக்கும் அவல நிலையை அலங்கோல நிலையை பல காலமாக குமரிமக்கள் கண்டு வருகின்றனர்
இந்து மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாக நாடகமாடும் இயக்கங்களும் பூசாரிகளும் இதை அரசாங்கத்திற்க்கு எத்தி வைப்பதாக தெரியவில்லை
கழிவுகளுக்கு ஒதுங்கும் இடம் கிடைக்காததால் எழ்மை பட்ட சபரிமலை பக்தர்களுக்கு இதை விட்டால் மாற்று வழிகள் இல்லை
எனவே இதில் வெளியூர்களில் இருந்து வருகை தரும் சபரிமலை பக்தர்களை குறை கூறுவதில் கடுகளவும் பலன் இல்லை
சுருக்கமாக சொன்னால் சபரிமலை சீசன் என்றாலே கன்னியாகுமரியின் பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்றும் அந்நேரம் கன்னியாகுமரி பீச்சுக்கு செல்வது ஆரோக்யத்தை நாசமாக்கும் என்ற மனோநிலையே அம்மாவட்ட மக்களிடம் பரவலாக நிலவி வருகிறது
இந்த இக்கட்டை வாய்ப்பாக பயன்படுத்தி கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளும் சபரிமலை பக்தர்களின் வருகை எந்த மாதங்களில் அதிகரிக்குமோ அப்போதெல்லாம் ரூம்களில் வாடகைகளை அவர்களுக்கு விரும்பும் விதங்களில் எல்லாம் மாறி மாறி போட்டி போட்டு கொண்டு லாபத்தை ஈட்டுகின்றனர்
இந்நிலை மாற வேண்டுமானால் சவுதி அரசாங்கத்திடம் இருந்து நம் தமிழக அரசாங்கம் பாடம் படிக்க வேண்டும்
உலகில் லட்சக்கணக்கான மக்கள் எப்போதும் ஒன்று கூடும் ஒரே இடம் மக்கா எனும் புனித நகரமாகும்
காஃபா எனும் ஆலயத்திற்க்கு முன் மனிதனின் கால் படாத விநாடிகளே பதினான்கு நூற்றாண்டுகளாக சரித்திரத்தில் இல்லை
ஏனைய கோயில்கள் நடை சாத்தப்படுவது போல் கஃபாவின் நுழைவாயில் பூட்டப்பட்டதும் இல்லை
கையில் உள்ள பொருள் கீழே விழுந்தால் கூட அதை குனிந்து எடுப்பதற்க்கு கூட தயங்குவார்கள் காரணம் அந்த அளவு நெரிசல்கள் ஏராளம்
அப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தும் ஒரு விநாடி கூட மின்சாரம் தடை செய்யப்படாத உலகில் ஒரே பகுதி காஃபா எனும் புனித பூமியாகும்
இவ்விடத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிடங்களை தேடி மக்கள் பல நூற்றாண்டுகளாக அலைந்ததே இல்லை
உடல் சுத்தம் செய்யப்படுவதை இஸ்லாம் அதிகமதிகம் வலியுருத்துவதால்
24 மணி நேரமும் தண்ணீர் பம்பு மோட்டார்கள் மாறி மாறி இயக்கப்படும் ஒரே பூமி உலகில் காஃபா எனும் புனித பூமியாகும்
இதை சீராக நடைமுறை படுத்த சவுதி அரசாங்கம் பல நிபுணர்களை நியமித்து மக்காவிற்க்கு வரும் ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களின் தேவைகளை முற்கூட்டியே திட்டம் போட்டு நடைமுறை படுத்தி வருகிறது
அரபு நாட்டு குற்றவியல் சட்டங்களுக்கும் சரி அங்குள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் இயற்றப்பட்ட திட்டங்களும் சரி ஒட்டு மொத்த உலக மாந்தர்களுக்கு எடுத்து காட்டு என்பதில் சந்தேகம் இல்லை
وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِيْمَ مَكَانَ الْبَيْتِ اَنْ لَّا تُشْرِكْ بِىْ شَيْـٴًـــا وَّطَهِّرْ بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْقَآٮِٕمِيْنَ وَ الرُّكَّعِ السُّجُوْدِ
நாம் (இறைதூதர்)இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் (கஃபா எனும் )இடத்தை நிர்ணயித்து
நீர் எனக்கு எவரையும் (கடவுள் தகுதியை கொடுத்து) இணைவைக்காதீர்
என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் குனிந்து நிமிர்ந்து தொழுவோருக்கும் அந்த இடத்தை தூய்மையாக்கி வைப்பீராக
என்று சொல்லியதை (நபிகள் நாயகமே நினைவு கூறுவீராக)
(அல்குர்ஆன் : 22:26)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment