காலத்தை குறை கூறாதீர்

  அறிவு இழந்த ஆன்மீகவாதிகள்

    _^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^
                03-01-18 புதன்
             -----------------------------
                 J. யாஸீன் இம்தாதி
                      !+++++++++!
                கட்டுரை எண் 1179
             ======================
                          بسم الله الرحمن الرحيم
      *****************************

இது நல்ல நேரம் இது கெட்ட நேரம் என்று காலத்தை பாகுபடுத்தி பார்ப்பதும் அவ்வாறு பார்த்து சொல்லும் ஞானம் பெற்றோர் இருப்பதாக கருதுவதும் மூடநம்பிக்கைகளில் ஒன்றாகும்

எந்த நேரத்திலும் உலகில் நல்லதும் நடக்கும் அதே நேரத்தில் கெட்ட நிகழ்ச்சிகளும் நடக்கும்

03-01-18 மதியம் 11-00 மணிக்கு ஒருவருக்கு திருமணம் நடந்தால் அது நல்ல நேரம்

அதே நேரம் உலகில் வேறு பலர்களுக்கு வியாபாரத்தில் நஷ்டமும் மனகஷ்டமும் விபத்துகளும் திருமண முறிவுகளும் பிறப்பும் இறப்பும் நிச்சயம் நடந்தே தீரும்

அப்படியானால் ஒரே நேரத்தில் உலகில் நல்லதும் நடக்கிறது தீயதும் நடக்கிறது இதில் ஒரு நேரத்தை மட்டும் குறிப்பிட்டு இது நல்ல நேரம் இது தீய நேரம் என்று பாகுபடுத்தி பார்ப்பதில் என்ன பகுத்தறிவு உள்ளது ?

மலம் ஜலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும் போது அதை கழிப்பதற்க்கு நல்ல நேரம் கெட்ட நேரம் என்று யாரும் சகுனம் பார்ப்பது இல்லை

வேலை முடிந்து வீடு திரும்பும் போது அதற்கான ஊதியத்தை முதலாளியிடம் பெறுவதற்க்கு நல்ல நேரம் கெட்ட நேரம் என்று யாரும் சகுனம் பார்ப்பது இல்லை


தாகம் பசி போன்ற உணர்வு ஏற்படும் போது அதை நிறைவேற்றுவதற்க்கு நல்ல நேரம் கெட்ட நேரம் என்று யாரும் சகுனம் பார்ப்பது இல்லை

                 காரணம் என்ன ?


இயல்பாக நடக்க வேண்டிய எந்த ஒன்றும் நாம் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து தான் நடக்கும் என்ற அவசியம் இல்லை என்பதை ஒவ்வொருவரும் இயல்பாகவே புரிந்து வைத்துள்ளோம்


அதே போல் தான் இறைவன் ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் தீர்மானித்துள்ள காரியங்கள் அனைத்தும் இறைவன் குறிப்பிட்ட நேரங்களில் நிச்சயம் நடந்தே தீரும்

இறைவன் ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் தீர்மானம் செய்துவிட்ட எந்த ஒன்றையும் எந்த மனிதனாலும் மந்திரத்தாலும் அல்லது தந்திரத்தாலும் யாகத்தாலும் நேர்சையாலும் சூழ்ச்சியாலும் அறிவியல் துணையாலும் முறியடிக்க முடியாது



ஒரு மனிதனின் உள்ளத்தில் என்ன உள்ளது என்பதை கூட துல்லியமாக அறியக்கூடிய ஆற்றலின் கடுகளவை கூட பெறாத மனிதனுக்கு இறைவனின் தீர்மானத்தை அறிந்து அதற்க்கு மாற்று வழிகளை காட்ட முடியும் என்று நினைப்பதே மடமைத்தனத்தின் தெளிவான ஆதாரம் ஆகும்


ஆன்மீகவாதிகளிடம் தான் அதிகமான அறிவார்த்தம் இருக்க வேண்டும் ஆனால் இன்று ஆன்மீகத்தை நம்பும் மக்களிடம் தான் மூட நம்பிக்கைகள் அதிகம் காணப்படுகின்றது

      ++++++++++++++++++++++

4826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான் ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான்

அவன் காலத்தை ஏசுகிறான் நானே காலம் (படைத்தவன்)

என் கையிலேயே அதிகாரம் உள்ளது

நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

               நூல் ஸஹீஹ் புகாரி
           +++++++++++++++++

4488. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை

இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

             நூல் -ஸஹீஹ் முஸ்லிம்
             ++++++++++++++++++++++

وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا‏

மேலும் அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான் யார் அல்லாஹ்வையே முழுவதும் சார்ந்திருக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன்

திண்ணமாக, அல்லாஹ் தன் பணியை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றான்

அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விதியை நிர்ணயித்து வைத்திருக்கிறான்

(அதை எவராலும் வெல்லவோ தடுக்கவோ இயலாது)

             (அல்குர்ஆன் : 65:3)

              நட்புடன் J .இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்