பெண் இமாமத்
மார்க்க வரம்பு மீறும் மலப்புரம்
ஜமீலா (34) மற்றும்
குர்ஆன் சுன்னா சொசைட்டி
=======================
<<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1186
28-01-18
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
கேரளா மலப்புரம் பகுதியில் செயல்படும் குர்ஆன் சுன்னா எனும் சொசைட்டி சார்பாக ஆண்களுக்கு (ஜமீலா எனும் 34 வயதுள்ள பெண் ஜும்மா தொழுகை இமாமத் செய்வதை போல் இடம் பெற்றுள்ள ஒரு வீடியோ காணொளி அங்குள்ள ஒரு தனியார் தொலைகாட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு தற்போது சமூகவலைதளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றது
மார்க்கம் என்ற பெயரில் முஸ்லிம்கள் செய்யும் பல பித்அத்தான காரியங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இட்டுக்கட்டப்பட்ட சில ஹதீஸ்களை மேற்கோள் காட்டி நியாயப்படுத்தும் பழக்கம் பல முஸ்லிம்களிடம் உள்ளது
ஆனால் அந்த வகையில் கூட நியாயப்படுத்த முடியாத ஒன்றே ஆடவர்களுக்கு பெண்கள் இமாமத் செய்யும் நவீன மலப்புறம் பித்அத்தாகும்
அதனால் தான் வீடியோவில் சம்மந்தப்பட்ட குர்ஆன் சுன்னா சொசைட்டி (ஜமீலா) தனது பித்அத்தான செயல்பாட்டை நியாயப்படுத்த எவ்விதமான ஆதாரத்தையும் காட்டாது ஆண்களுக்கு பெண்கள் இமாமத் செய்ய கூடாது என்பதற்க்கு நேரடியாக ஆதாரம் ஒன்றுமே இல்லை என்று மட்டும் தர்க்கம் செய்து பேட்டி கொடுப்பதை அறிய முடிகின்றது
பஜ்ரு தொழுகையில் ஆறு ரக்அத் தொழ கூடாது என்றும் கூட ஹதீசில் தடை உத்தரவு இல்லை
அதற்காக பஜ்ரு தொழுகையில் ஆறு ரக்அத்தையோ லுஹர் தொழுகையில் எட்டு ரக்அத்தையோ இமாமாக நிற்பவர் தொழ வைக்க முடியுமா ?
சுருக்கமாக சொன்னால் நபி( ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான சொல் செயல் மற்றும் அங்கீகாரம் எவைகளிலும் ஒரு பெண் ஆடவர்களுக்கு இமாமத் செய்ய எவ்விதமான ஆதாரமும் இல்லை
அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஜமாத் தொழுகைகளும் மற்றும் ஜும்ஆ தொழுகையும் கடமை இல்லை என்று இஸ்லாம் சட்டம் சொல்லும் போது ஜமாத் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகை கடமையாக்கப்பட்ட ஆடவர்களுக்கு ஒரு பெண் எப்படி இமாமத் செய்ய முடியும் ?
ஜமாத் தொழுகை வரிசைகளில் பிந்திய வரிசை தான் பெண்களுக்கு ஏற்றது என்றும் முந்திய வரிசை பெண்களுக்கு மிகவும் கெட்டது என்றும் நபி( ஸல்)அவர்கள் ஜமாத் தொழுகைக்கு (ஸப் ) நிபந்தனை விதித்திருக்கும் போது ஆண்களுக்கு பெண்கள் இமாமத் எனும் பெயரில் எல்லா ஆண்களை விடவும் முந்திய பகுதியில் ஒரு பெண் நின்று இமாமாக தொழ வைப்பது நேரடியான பல ஹதீஸ்களுக்கும் முரண் என்பதையும் புரிய வேண்டும்
இமாமுக்கு தொழுகையில் தவறு ஏற்பட்டால் அதை சுட்டி காட்டும் விதமாக இமாமை பின்பற்றும் இதர ஆண்கள் தஸ்பீஹ் சொல்லி எச்சரிக்கை செய்வதையும்
இமாமை பின்பற்றும் பெண்கள் (குரல் மூலம் தஸ்பீஹ் சொல்லாது) கைதட்டி சுட்டி காட்டுவதையும் கடை பிடிக்க வேண்டும் என்று நபி( ஸல்)அவர்கள் ஜமாத் தொழுகைக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கும் போது
ஆடவர்களுக்கு இமாமாக நின்று ஒரு பெண் அனைவரும் கேட்கும் விதமாக சப்தமிட்டு எப்படி கிராத்களை படிக்க முடியும் ?
என்பதையும் சிந்திக்க கடமை பட்டுள்ளோம்
குர்ஆன் சுன்னா என்று பெயரை வைத்து கொண்டு ரூகூவில் இருந்து நிமிரும் போது சமியல்லா ஹீலிமன் ஹமித என்று தான் சொல்ல வேண்டும் என்ற சாதாரணம் மார்க்க ஞானமும் கூட இல்லாமல் அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் சொல்லும் நிலையில் தான் இமாமாக முன் நிறுத்தப்பட்ட ஜமீலா எனும் பெண் உள்ளார்
மார்க்கம் எனும் பெயரில் புதிதாக ஒரு செயலை யாராவது அரங்கேற்றம் செய்தால் அதை அரங்கேற்றம் செய்பவர்கள் தான் அதற்கான தெளிவான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்
அல்லது தங்களது செயல்பாட்டிற்க்கு தவ்பா செய்து முற்றிலும் அவர்கள் நீங்க வேண்டும்
அது போன்ற ஒரு அழுத்தத்தை சம்மந்தப்பட்ட ஜமாத்தினருக்கு கொடுப்பது தான் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் ஜமாத்தார்களின் முதல் கடமையாக உள்ளது
++++++++++++++++++++++
1204. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
(தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்பட்டால் அதை சுட்டிக்காட்டும் விதமாக தஸ்பீஹ்)
கூறுதல் ஆண்களுக்குரியதும் (குரலை கொண்டு சுட்டிக்காட்டாது தங்கள் இரு கைகளை இணைத்து கைதட்டுதல் (என்பது) பெண்களுக்குரியதுமாகும்
ஸஹ்ல் இப்னு ஸஃது
ஸஹீஹ் புகாரி
++++++++++++++++++++
749. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும் அவற்றில் தீயது கடைசி வரிசையாகும்
பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும் அவற்றில் தீயது முதல் வரிசையாகும்
அபூஹுரைரா (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம்
تِلْكَ حُدُوْدُ اللّٰهِ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَذٰ لِكَ الْفَوْزُ الْعَظِيْمُ
இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் அவன் நுழையவைப்பான்
அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்
இதுவே மகத்தான வெற்றியாகும்
(அல்குர்ஆன் : 4:13)
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment