அரசாங்க வீண் விரயம்

         பஸ் கட்டணம் உயர்வும்

அரசாங்கத்தின்  வீண் விரயங்களும்

        ^======^======^======^
    <<<<<<•••••••••••••••••••••>>>>>>

            கட்டுரை எண் 1183
        
    ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி

            ^^________________^^
   Bismillahir Rahmanir Raheem

              ******************

ஏழைகள் பயன் படுத்தும் பஸ் கட்டணம் உயர்த்தப்படும் போது அதை எதிர்த்து மக்கள் போராடுவதும்

அதற்க்கு பின் அரசாங்கம் அதற்க்கு ஏதாவது ஒரு விளக்க  காரணம் கூறுவதும்

அல்லது பஸ் கட்டணம் ஏற்றும் போதே போராட்டாகாரர்களின் வீரியத்தை  குறைப்பதற்காகவே சற்று கூடுதலாக ஏற்றி அதில் சிலதை போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டு சற்று  குறைத்துள்ளோம் என்று  நாடகமாடுவதும் வாடிக்கையாகி விட்டது

இந்தியாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அடிக்கடி  நடை பெறும் நிகழ்வே இது 

இதில் எந்த கட்சியும் விதி விலக்கு பெற்றவர்கள்  அல்ல

போன ஆட்சியை  விட இந்த ஆட்சியில் கூடுதல் என்று ஒவ்வொரு நேரமும் நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கிறோம் ஆனால் அது உண்மை இல்லை



கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி புரிந்த கட்சியை விட தற்போதைய ஆளும் கட்சி கூட்டி விட்டது என்று நாம் பார்க்கிறோமே தவிர

கடந்த கால ஆட்சியாளர்களை அதற்க்கு முந்தைய ஆட்சியாளர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் கடந்த கால ஆட்சியாளர்களும் பஸ் மற்றும் இதர கட்டணங்களை பல காரணங்களை சொல்லி   கூட்டியே இருப்பார்கள்

அல்லது சிலதை குறைத்து வேறு சிலதில் விலையேற்றம் செய்து குறைக்கப்பட்ட பற்றாகுறையை  இதை  கொண்டு சமாளித்திருப்பார்கள்


சுருக்கமாக சொன்னால்  எந்த கட்சியும் அதற்க்கு முந்தைய ஆட்சியாளர்களை விட எந்த கட்டணத்தையும் சதவிகித கணக்கில் குறைத்து இருக்க மாட்டார்கள்

சிந்திக்க வேண்டிய விசயத்தை சிந்திக்காது நமக்கு நாமே இது போல் போலியான சமாதானம் சொல்லிக் கொள்வது தான் குடிமக்களாகிய நாம் செய்யும் முதல் முட்டாள் தனம்


     +++++++++++++++++++++

குடிமக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் சார்பாக  வசூலிக்கப்படும் சக்தி மீறிய கோடான கோடி வரிப்பணங்கள் எந்த முறையில் ஆட்சியாளர்களால் நாட்டில்  அதிகம் செலவிடப்படுகின்றது  என்பதை யோசித்தால் தான் இது போன்ற கட்டண உயர்வுகள் அன்றாடம்  ஏன் நடக்கிறது என்பதை குடிமக்களாகிய நம்மால் உணர முடியும்

அந்த வகையில் சிந்தித்தால் நாட்டு மக்களிடம் இருந்து ஒவ்வொரு பொருளின் மீதும் அறிந்தும் அறியாமலும் கட்டாயமாக வாங்கப்படும் கோடான கோடி வரிப்பணங்கள் யாவும் குடிமக்களுக்கு பயன் இல்லாத வகைகளுக்கு தான் அதிகமதிகம் அரசியல்வாதிகளால் அன்றாடம்  செலவு செய்யப்படுகிறது

ஒரு கட்சியில் காலமாகி போன ஒருவருக்கு சமாதியை எழுப்புவதாக இருந்தால் அல்லது மணிமண்டபங்களை கட்டுவதாக இருந்தால் அந்த கட்சியின் பணத்தில் இருந்து அதற்கான செலவுகள் செய்யப்பட வேண்டும் அல்லது இது போன்ற பயன் இல்லாத வீண் விரயங்களை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்

ஆனால் எந்த அரசியல்வாதி இறந்தாலும் அவருக்கான சமாதியை பல கோடிகளில் எழுப்ப அன்றாடம் உழைத்து அதன் மூலம் வரி செலுத்தும்  குடிமக்களின் வரிப்பணங்கள் தான் செலவிடப்படுகிறது


( சமீபத்தில் சத்ரபதி வீரசிவாஜி சிலையை நிறுவ 3600 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில்  நிதி ஒதுக்கீடு செய்ததும்  முன்னால் முதல்வர் ஜெயலலிதா சமாதியை அழகு படுத்த 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததும்


சினிமா துறையில் பல கோடிகளை சம்பாரித்து இறந்து விட்ட  பிரபல்யமானவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில்  சிலைகளை நிறுவி வருவதும் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுவதற்க்கு மூல ஆதாரமாகும்)

இது போன்ற சமாதிகளால் மணிமண்பங்களால் அல்லது சமாதிகளுக்கும்  இறந்து போன தலைவர்களுக்கும் நினைவு நாள் எனும் பெயரில் அவர்களின் மண்ணறைகளை வருடா வருடம் அழகு படுத்தி  மிளிரும்  விளக்குகளால் ஜோடனை செய்வதில் நாட்டு மக்களுக்கு என்ன பலன்  ?




அல்லது இறந்து போன அவர்களுக்கு தான் என்ன நன்மை?

அரசாங்கத்தில் வேலை பார்க்கும் காலம் வரை தவறாமல் சம்பளத்தை பெற்று கொண்டு அதன் பிறகு அரசாங்க வேலை காலம் நிறைவடைந்த பின்பும் பழைய அரசாங்க ஊழியர் சாகும் வரை பென்சன் எனும் பெயரில் மாதாமாதம் எவ்வித உழைப்பும் செய்யாத பழைய அரசாங்க ஊழியர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து கோடான கோடி ரூபாய்களை வாரி ஊக்க தொகை எனும் பெயரில் வாரி  இறைப்பதில் குடிமக்களுக்கு என்ன நன்மை ?




தேவையுடையவர்களை கண்டறிந்து முறையாக உதவி தொகைகளை வாழ்கைக்கு தேவையான பெருகும் வழியை காட்டாது கோடீஸ்வரன் முதல் பரம ஏழை வரை அனைவருக்கும் இலவசம் எனும் பெயரில்  விலை இல்லா பொருள் எனும் பெயரில் மக்களின் வரிப்பணத்தில் இருந்து கோடான கோடிகளை கொட்டுவதில் என்ன அறிவார்த்தம் உள்ளது  ?




அரசாங்கத்தில் ஒருவர் ஆட்சி பொறுப்பில் இருந்தால் அவர்கள் குடிக்கும் குடிநீர் முதல் தங்கும் வீடு வரை பயணச்சீட்டு தொலை பேசி பில்கள் போன்றவைகளில் தள்ளுபடியும் சலுகையும் எதற்காக? அதுவும் வெள்ளை சட்டையை அணிந்து கொண்டு ஏசி போட்ட கார்களில் வலம் வரும் இவர்களுக்கு இலட்ச கணக்கில் சம்பளங்களையும் கொடுத்து இத்தனை சலுகை மற்றும் தள்ளுபடிகளையும் செய்வதால் குடிமக்களுக்கு என்ன பலன்  ?

    +++++++++++++++++++++
அன்றாடம் கூலி வேலை பார்க்கு
ம் ஒரு தொழிலாளியே தினம்  வரும் குறைந்த வருமானத்தில் குடும்பத்தையும் கவனித்து வீட்டு வாடகையும் கொடுத்து இயன்ற வரை சேமிப்பிலும் கைவசம் வைக்கும் போது

ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் எத்தனை கோடிகள் வரியின் பெயரால் ஒவ்வொரு நிமிடமும்  அரசாங்கத்திற்க்கு  வருமானங்களாக வரும்


அவ்வாறு வரும்  வரிப்பணங்களை எல்லாம்  நாட்டு மக்களின் அவசிய  தேவைக்கு மட்டும் செலவினம் செய்து மீதீயை சேகரித்தாலே உலக நாடுகளை விட பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கலாம்

               ----------------------

இது போன்று அரசாங்கத்தின் நிலைபாடுகளை மாற்றாமல் கஜானா காலியாகும் தருவாயில் ஏழை மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றத்தையும் அதிகப்படியான  வரி மாற்றத்தையும் எந்த அரசாங்கத்தாலும் தடை செய்ய இயலாது என்பது தான் உண்மை



இந்த மாற்றத்தை மக்களின் மனோ நிலையும் புரட்சியும் தான் ஏற்படுத்தும்

          நட்புடன்  J .இம்தாதி









Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்