கலாச்சார சீரழிவே புத்தாண்டு


2018 புத்தாண்டு மகிழும் நாளா

              வருந்தும் நாளா

புனிதர் இயேசுவை அவமதிக்கும்

             நாளே புத்தாண்டு

^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_
                  31-12-17 ஞாயிறு
               -----------------------------
                 J. யாஸீன் இம்தாதி
                       !+++++++++!
               கட்டுரை எண் 1174

                             بسم الله الرحمن الرحيم
→←→←→←→←→←→←→←

இயேசு நாதரின் பிறப்பை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டதே ஆங்கில ஆண்டு

அதாவது இயேசுநாதர் பிறந்து கிபி 2018 ஆண்டுகள் கழிந்து போனது என்பது தான் இதன் பொருள்

இந்த நாளை நினைவு கூற ஆசை படுபவர்கள் இயேசு நாதர் சொன்ன போதனைகளை நடைமுறை படுத்தி காட்டுவது தான் பொருத்தமானதே தவிர

புத்தாண்டை வரவேற்கிறோம் எனும் பெயரில் இயேசுநாதரே கண்டித்த


மதுபானங்களை அருந்தி கூச்சல் போடுவது

பெண்களை கிண்டல் செய்வது

ஆணும் பெண்ணும் ஒன்றினைந்து கிளப் ஹோட்டல்களில் அருவெறுப்பான நிலையில் ஆடி பாடி கும்மாளம் போடுவது

கார் சாவியை மாற்றுகிறோம் எனும் பெயரில் மனைவியை மாற்றி கொண்டு சுதந்திரத்தின் பெயரால் விபச்சாரம் செய்வது

புத்தாண்டை வரவேற்கிறோம் எனும் பெயரில் மக்கள் நடமாடும் இடங்களிலிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மிருகங்களை போல் ஊளையிட்டு செல்வது


சீர்கேடுகளை உருவாக்கி வரும் சினிமாக்களை கண்டு கழிப்பது

இவைகள் தான் இன்று உலகளவில் புத்தாண்டை ஆவலோடு வரவேற்று கொண்டாடும் லட்சனம் ஆகும்

இது போல் ஒரு நாளை கேவளமாக கொண்டாடி மகிழ்வதற்க்கு பதில் அத்தகைய ஒரு நாளை நினைத்து வருந்துவதும் திருந்துவதும் தான் சிறப்பாகும்


காரணம் இது இயேசு நாதரை கவுரவ படுத்தும் நாளாக இன்று தென்படவில்லை மாறாக அவர் சொன்ன அனைத்து உபதேசங்களையும் புறம் தள்ளி விட்டு அவருடைய கவுரவத்தை இழிவு படுத்தும் நாளாகவே புத்தாண்டை வரவேற்போரின் நிலைபாடாக உள்ளது


புதிய ஆண்டு பிறப்பது என்பது விழாவாக கொண்டாடும் ஒன்று அல்ல காரணம் ஒவ்வொரு நாளும் அன்றாடம் புதிதாகவே தான் பிறக்கிறது இதில் வருடத்திற்க்கு ஒரு நாளை மட்டும் நினைத்து கொண்டாடுவது பகுத்தறிவுக்கும் எதிரானது இயேசு நாதரும் கற்று தராத வழிமுறையே ஆகும்


புத்தாண்டு நல்வாழ்த்து என்று சடங்கு பூர்வமாய் வருடா வருடம் வாழ்த்துவதை விட எவ்வாறு வாழ வேண்டும் என்று மனித சமுதாயத்திற்க்கு கற்று தருவது தான் முக்கியமான கடமையாகும்


வழக்கத்திற்க்கு மாற்றமாக புத்தாண்டு தினங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் அரசாங்கத்தால் போடப்பட்டு வருகிறது என்று சொன்னால் அந்தளவு புத்தாண்டின் பெயரில் சீரழிவுகளும் ஒழுக்க கேடுகளும் சட்ட மீறுதல்களும் நடை பெற்று வருகிறது என்பது தான் எதார்த்தமான உண்மையாகும்

சுருக்கமாக சொன்னால் புத்தாண்டு குதூகலமாக மகிழும் நாள் அல்ல

மாறாக மனித சமூகத்தில் புத்தாண்டின் பெயரால் ஏற்பட்டுள்ள அவலங்களை நினைத்து வருந்தும் நாளாகும்

புத்தாண்டின் பெயரால் ஏற்பட்டு வரும் அவலங்களை கடுமையாக கண்டித்து பேச வேண்டிய கிருஸ்தவ மதத்தின் ஆன்மீக பாதிரிமார்கள்

அவைகளை கண்டும் காணாது இருப்பது அவர்கள் இயேசு நாதரின் புகழையும் போதனைகளையும் பரப்புவதில் அக்கரை உள்ளவர்கள் அல்ல என்பதும்

மதத்தில் பெயரால் நடக்கும் தீமைகளை கடுமையாக கண்டித்து அறிக்கை தருவதற்க்கு கூட துணிச்சல் இல்லாதவர்கள் என்பதும் தெளிவாக தெரிகிறது

பாவிகளை இரட்சகர் மன்னிப்பார் என்று எப்போதும் மக்கள் வேண்டுமென்றே செய்து வரும் பாவங்களுக்கு முலாம் பூசாமல் அது போன்ற பாவிகள் இனி வரும் காலங்களிலும் வருந்தி திருந்தாவிட்டால் அவர்களை கர்த்தர் கடுமையாக பரலோக ராஜ்யத்தில் தண்டிப்பார் என்றும் எடுத்து சொல்வது கிருஸ்தவ அறிஞர்களின் கட்டாய கடமையாக உள்ளது

            நட்புடன் J . இம்தாதி

         ++++++++++++++++++

புத்தாண்டு அவலங்களை கண்டிக்கும்

           பைபிள் வசனங்கள்

                     +--------------+

புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்

விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து கொள்வான்

            நீதிமொழிகள் 1:5

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்

நீதிமொழிகள் 1:7

என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே

          நீதிமொழிகள் 1:10

என் மகனே, நீ அவர்களோடே வழி நடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக

          நீதிமொழிகள் 1:15

அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது

         நீதிமொழிகள் 1:16

பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்

             நீதிமொழிகள் 1:22

அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள்

                நீதிமொழிகள் 1:29

என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை, என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்

              நீதிமொழிகள் 1:30

                         முற்றும்

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்