மனைவியர்களின் வீட்டு வேலைகள்
மனைவியர்களும் உழைப்பாளிகளே
!! !!!=================!!!
^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_
!! 28-12-17. வியாழன்
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
கட்டுரை எண் 1173
بسم الله الرحمن الرحيم
→←→←→←→←→←→←→←
நான் ஆம்பளை நான் வேலை கஷ்டமனு சொல்றதுல ஒரு அர்த்தம் இருக்கு
நீ என்னடி பண்றே ?
வீட்ல சும்மா தானே இருக்கே?
கூட்றது பெருக்குறது துணி துவைக்கிறது சமையல் பண்றது ? இதெல்லாம் ஒரு வேலையா ?
நீயெல்லாம் நான் பார்க்குற வேலைகளை ஒரு மணி நேரம் கூட பார்க்க மாட்டே புரியுதா ?
போ போ வேலையை பாரு மூதேவி
இது திருமணம் செய்த சில கணவன்மார்கள் தங்களது மனைவியரிடம் அடிக்கடி கூறும் வார்த்தைகள்
இந்த வார்த்தைகள் உண்மையாக இருந்தால் அதை சில நேரங்கள் சொல்லி காட்டுவதை கணவன் என்ற முறையில் நியாயப்படுத்தலாம்
ஆனால் இந்த வார்த்தைகள் உண்மை இல்லை
ஒரு ஆண் வெளியில் சென்று பார்க்கும் வேலைகளின் பளுவை விட வீட்டில் மனைவியர்கள் செய்து வரும் வேலைகளே மிகவும் அதிகம்
ஊதியத்திற்க்கு கணவன் வேலை பார்ப்பதால் அவனது வேலை அவனுக்கு பெரிதாக தெரிகிறது ஊதியம் பெறாமல் மனைவியர்கள் வீட்டு வேலைகளை செய்து வருவதால் மனைவியர்கள் செய்யும் வீட்டு வேலைகள் கணவன்மார்களுக்கு பளுவாக தெரிவது இல்லை
ஆண்களை பொருத்தவரை அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரம் முதல் வீடு திரும்பும் நேரம் வரை தான் அவர்களின் வேலை பளுக்கள் அமைந்துள்ளது
ஆனால் பெண்களை பொருத்தவரை அவர்கள் காலை கண் விழித்தது முதல் இரவு தூங்க செல்லும் நேரம் வரை மனைவியர்களின் வேலை பளுக்கள் அமைந்துள்ளது
பாய் தலையணைகளை மடக்குவது முதல் பாத்திரங்களை கழுவுதல் துணிகளை துவைத்தல் சமைத்தல் வீடு வாசல்களை ஒதுக்குதல் தண்ணீர் இறைத்தல் பிள்ளைகளை பள்ளி கூடங்களுக்கு அனுப்புதல் குடும்பத்தார்களின் தேவைகளை நிறைவேற்றுதல் இவ்வாறு பல வேலைகளை பெண்களும் அன்றாடம் செய்தே வருகின்றனர்
உடல் நிலை பாதிக்கப்படும் சூழலில் வேலை பார்க்கும் கணவன்கள் கூட வேலைக்கு விடுமுறை போடுவார்கள்
ஆனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட சூழலிலும் வீட்டு வேலைகளை சிரமத்துடன் செய்து வரும் மனைவியர்களே அதிகம்
ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூட மனைவியர்களின் வேலைகள் அதிகப்படியாக இருக்குமே தவிர விடுமுறை நாள் என்பதால் மனைவியர்கள் அன்று முழுதும் வேலையே பார்க்காது இருப்பது இல்லை
ஒரு கணவன் செய்யும் வேலைகளை எப்படி மனைவியர்கள் செய்ய முடியாதோ அதே போலவே மனைவியர்கள் செய்யும் வேலைகளை கணவனாலும் எப்போதும் தொடர்ந்து செய்ய முடியாது இயலாது
இதில் வேறுபாடு என்னவென்றால் ஒரு கணவன் இரண்டு மணி நேரத்தில் முடிக்கும் வேலைகளை மனைவியர்கள் ஆறு மணி நேரத்தில் தான் செய்து முடிப்பார்கள்
கணவனை விட அதிகமான வேலைகளையும் செய்து முடிப்பார்கள்
இது தான் உண்மை
ஊதியம் குறைவாக வாங்கினாலும் கணவன் செய்யும் வேலைகளை மனைவியர்களும் குறைத்து மதிப்பிட கூடாது
கணவனும் மனைவியர்கள் செய்யும் வேலைகளை குறைத்து மதிப்பிட கூடாது
அப்போது தான் வாழ்கை இனிக்கும்
கடையில் வேலை பார்க்கும் போது முதலாளியின் ஏச்சு பேச்சுக்களை கணவன் சகிப்பதை போலவே மனைவியர்களும் மாமியார் மற்றும் குடும்பத்தார்களின் ஏச்சு பேச்சுக்களை சகித்தே வருகின்றனர்
குடும்பத்திற்க்கு தேவையான பொருளாதாரத்தை திட்டமிட்டு ஈட்டும் முயற்சிகள் மட்டும் தான் அதிகப்படியாக கணவன்மார்கள் பார்க்கின்றனர்
அதே நேரம் நவீன காலத்தில் வீட்டுக்கு தேவையான அனைத்து சாதனங்களும் மிஷின்களும் எளிமையாக கிடைத்து கொண்டிருப்பதால் தற்கால மனைவியர்களுக்கு சோம்பல் தனம் சற்று அதிகம் என்பதை மறுக்க முடியாது
இந்த சோம்பல் தனத்தின் காரணமாக மனைவியர்களின் உடல் உழைப்பு மிகவும் குறைந்து போனதால் திருமணம் ஆன துவக்க காலங்களில் கணவனுக்கு மனைவியர்களாக தோற்றத்தில் இருக்கும் பல மனைவியர்கள் திருமண ஆன ஐந்தே வருடத்தில் தனது கணவனுக்கே மாமியார் போல் உடல் அளவில் தோற்றம் தருகின்றனர்
இல்லறத்தின் இனிமை தோற்றத்தின் ஈர்ப்பில் தான் உள்ளது என்பதை மனைவியர்கள் கவனம் வைக்க வேண்டும்
வேலை இல்லாத விடுமுறை நாட்களிலும் தினமும் தன்னால் இயன்ற சில மணி துளிகளில் மனைவியர்கள் செய்யும் வேலைகளுக்கு உறுதுணையாக கணவன்மார்களும் செயல்படுவது மனைவியர்களுக்கு அதிகப்படியான மகிழ்ச்சியை தருவததோடு பாசம் எனும் பிணைப்பு அதிகப்படும்
+++++++++++++++++++++
மனைவியருக்கு உதவியாக நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள்
+-----------------+
நான் (நபிகளாரின் மனைவி ) அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்? என்று கேட்டேன்
அதற்கு ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள் தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள் என்று பதிலளித்தார்கள்
அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத்
நூல்: புகாரீ
************
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வீட்டில் வேலை செய்வார்களா?'' என்று ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் கேட்கப்பட்டது
அதற்கவர்கள் ஆம் தனது ஆடையைத் தைப்பார்கள் கிழிந்த செருப்பை தைப்பார்கள் வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள் என்று பதிலளித்தார்கள்
அறிவிப்பவர்: உர்வா
நூல்: அஹ்மத்
----------------------------------------
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து தம் மனைவியருக்கு உதவியாக இருந்துள்ளார்கள்
அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருந்தும் தம் குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்கியது அவர்களின் சிறந்த பண்பாட்டைக் காட்டுகிறது
நட்புடன் J இம்தாதி
முற்றும்
Comments
Post a Comment