மனமே மாளிகை
மனிதர்களின் மனங்களே
வசந்த மாளிகைகள்
🏨🏠🏠🏠🏠🏠🏠🏠🏨
♣♣♦♣♦♣♦♣♣
26-11 -2017 கட்டுரை எண் 1166
-----------------------------
ஆக்கம் . J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
★★-------------------------------★★
ரோட்டில் படுக்கும் நிலை மாறி சாதாரண ஒரு வாடகை குடிசை வீட்டில் குடியிருக்க இறைவன் எனக்கு அருள் செய்தாலே அதுவே எனக்கு வாழ்நாளில் போதுமானது என்று நினைப்போர் ஒரு புறம்
குடிசை வீட்டின் நிலை மாறி ஒரு ஓடு போட்ட வீட்டின் வாய்ப்பை இறைவன் எனக்கு தந்தாலே அதுவே எனக்கு போதுமானது என்று நினைப்போர் ஒரு புறம்
வீட்டில் தங்கி இருப்போர் மூன்று நபர்களாக இருந்தாலும் அதன் அறைகள் மாத்திரம் ஏழு எட்டு என்று அடுக்குகளாக கட்டி வைத்து கொண்டு அதை பார்த்து பார்த்து மனம் நிறைவடையாது குறையாக கருதி அவர்களை விட வசதியில் பெரிய வீடுகளை கட்டியவர்களை பார்த்து மனதளவில் பொறாமை பட்டே வாழ்நாளை கழிப்போர் ஒரு புறம்
கோடிகள் கொஞ்சம் கையில் புரண்டாலே அழகாக பலமாக கட்டப்பட்டு இருக்கும் அவர்களின் இல்லத்தின் அறைகளையே இடித்து இடித்து அவைகளை மெருகூட்டி ரசித்தே வாழ்வில் மரிப்போர்கள் ஒரு புறம்
தங்கி இருக்கும் வாடகை வீட்டிற்க்கு கூட மாத மாதம் வாடகை தருவதற்க்கு சிரமப்பட்டு வட்டிகாரனிடம் கையேந்தும் ஏழைகளோ ஒரு புறம்
தெரு நாய்களும் பூச்சிகளும் தங்கி இருக்கும் தெருவின் ஓரங்களில் பிளாட்பாரங்களில் மின்விசிறியின்றி ஏசி இல்லாது தூசியிலேயே வாழ்நாளை கழிக்கும் பரம ஏழைகளோ மறு புறம்
இதில் ஏழைகள் யார் ?
இல்லை இல்லை
என்று அழுது புலம்பி கவலை பட்டு கண்ணீர் வடிக்கும் தகுதி பெற்றவர்கள் யார் ?
உலக வாழ்வில் மனிதனின் மனங்களே தன்னிடம் இருக்கும் செல்வத்தின் ஆத்மார்த்த திருப்தியை தீர்மானிக்கிறதே தவிர கோடிகளில் எழுப்பப்பட்ட மாளிகைகளோ குளுமை தரும் ஆடம்பரமான மன்னர்களின் அரண்மனைகளோ மனிதனின் திருப்தியை நிச்சயம் பெற்று தருவது இல்லை
தன்னிடம் கைவசம் உள்ள பாக்கியங்களை நினைவு கூறாது தன்னை விட அதிகமான வசதிகளை பெற்ற பிற மனிதர்களின் ஆடம்பரத்தை நினைத்து கொண்டிருப்பதே உளவியல் நோயாளிகளின் தனிச்சிறப்பு
ஏழையாக ஒருவன் இருப்பதும் பணக்காரனாக ஒருவன் இருப்பதும் மனிதர்களின் முயற்சிகளுக்கு உட்பட்டது அல்ல
அதனால் தான் கூலிக்கு வேலை செய்பவன் படித்து பட்டம் பெற்றவனாகவும் அவனுக்கு சம்பளம் தருபவன் கைநாட்டு பேர்வழியாகவும் இருப்பதை உலகில் பல இடங்களில் பார்க்க முடிகிறது
தேவைகளை கேட்டு இறைவனிடம் கையேந்துங்கள் அது குற்றம் இல்லை ஆனால் வாழ்நாளில் இறைவன் தந்திருப்பதை நினைத்து நன்றி கூறாது அவைகளை குறை கண்ணோட்டதுடன் விரக்தியாய் காணாதீர்கள் அதுவே மாபெறும்
குற்றம் மாட மாளிகைகளில் ஏசியில் உறங்குபவனும் தெருவின் ஓரங்களில் தூசியில் உறங்குபவனும் நிச்சயம் ஒரு நாள் புழுக்களும் பூச்சிகளும் விஷஜந்துக்களும் குடியிருக்கும் பூமியின் புதை குழியில் தான் நிறந்தரமாக தங்க போகிறான்
சுருக்கமாக சொன்னால் பல கோடிகளில் கட்டப்பட்டுள்ள மாளிகைகள் உண்மையான மாளிகைகள் அல்ல மாறாக மனிதர்களின் மனம் எனும் இல்லத்தில் வாழ்வில் கைவசம் இருப்பதை கொண்டு திருப்தி பெறும் மனம் படைத்தோரோ உண்மையான மன மாளிகைகளுக்கு சொந்தக்காரர்கள்
அதுவே மனிதனின் மனதை குளிரூட்டும் வசந்த மாளிகை
மனிதர்களின் மனதை சாந்தமாக்கும் மருத்துவ மாளிகை
நட்புடன் J . இம்தாதி
عَنْ عُرْوَةَؒ عَنْ عَائِشَةَؓ: أَنَّهَا كَانَتْ تَقُولُ: وَاللهِ يَا ابْنَ أُخْتِي! إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَي الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ، ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ، وَمَا أُوقِدَ فِي أَبْيَاتِ رَسُولِ اللهِ ﷺ نَارٌ، قَالَ: قُلْتُ: يَا خَالَةُ! فَمَا كَانَ يُعَيِّشُكُمْ؟ قَالَتْ: الأَسْوَدَانِ: اَلتَّمَرُ وَالْمَاء
ُசகோதரியின் மகனே!
நாங்கள் முதல் பிறையைப் பார்ப்போம் பிறகு மறுபிறையையும் பார்ப்போம், பிறகு மூன்றாம் பிறையையும் பார்ப்போம் இவ்வாறே இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்து விடுவோம்
ஆனால், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் வீடுகளில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாமல் கழிந்துவிடும் என்று கூறுவார்கள்
இதைக் கேட்ட நான் சிறிய தாயாரே பிறகு எதைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை கழித்து வந்தீர்கள்? என வினவியதற்கு
பேரீச்சம் பழத்தைக் கொண்டும் தண்ணீரைக் கொண்டும் வாழ்க்கையை கழித்து வந்தோம் என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக
ஹஜ்ரத் உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் முஸ்லிம்
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ
மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்
(அல்குர்ஆன் : 4:32)
முற்றும்
Comments
Post a Comment