தாய்மையின் முத்தம்
தாய்மையின் முத்தம்
♠____♠_____♠____♠
20-12-15, J.யாஸீன் இம்தாதி
----------------
Bismillahir Rahmanir Raheem
*********
ஆர்பறிக்கும் கடலின் அலைகள்
கரையை முத்தமிடுகிறது
மின்னலின் தாக்கம் தரையை
முத்தமிடுகிறது
பூக்களின் பேரழகு பார்வைகளை
முத்தமிடுகிறது
அதன் நறுமணமோ நாசிகளை
முத்தமிடுகிறது
வானவில்லின் ஏழு நிறங்கள்
பால்வெளியை முத்தமிடுகிறது
பால்வெளியின் இடியோசையோ
மழையை முத்தமிடுகிறது
குயில்களின் ரீங்காரம்
செவிகளை முத்தமிடுகிறது
மயில்களின் தோகை அழகோ
தற்பெறுமையை முத்தமிடுகிறது
ஏக்கத்தின் தேட்டங்களோ
காமத்தை முத்தமிடுகிறது
காமத்தின் வீரியமோ பாவைதனை முத்தமிடுகிறது
இம்முத்தத்தின் சப்தங்களுக்கு
சுயநலமே பின்னனியின் பங்கு
ஆனால் உன் தாயின் முத்தமோ
தனித்துவத்தின் பிறப்பிடம்
அவள் தரும் முத்த மழையே உன்
மகிழ்வின் சிறப்பிடம்
உன் குறுதிக்கு அவள் போடும்
உரம்
அதுவே உன் ஆறுதலுக்கு
நிழல் தரும் மரம்
நன்றி மறவாதே தாய்மையே
முதல் படி அவள் மகிழ்வே
உன் சுவன வழி
------------------
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் தொழுகையை நீட்டும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்கிறேன் அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதற்காக என் தொழுகையைச் சுருக்கிக் கொள்கிறேன்
என அபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்
நூல் புகாரி. நட்புடன் J. இம்தாதி
தாய்மை -இறைவனின் தனி பெரும் அற்புதம்....
ReplyDeleteதாய்மையின் கருவறை மழலைகளின் முதல் வீடு...
தாய்மையின் ஸ்பரிஸம் சாமரங்கள் வீசும் குல்மொஹாரின் நேசம்....
தாய்மையின் சுவாசம் சுகந்தங்களின் வாசம்...
மழலைகள் தாய்மையின் மடியில் தவம் செய்யும்.. வரம் தாயின் காலடி சொர்க்கம் ...இறைவனின் தனி பெரும் அற்புதம்....
தாய்மையின் கருவறை மழலைகளின் முதல் வீடு...
தாய்மையின் ஸ்பரிஸம் சாமரங்கள் வீசும் குல்மொஹாரின் நேசம்....
தாய்மையின் சுவாசம் சுகந்தங்களின் வாசம்...
மழலைகள் தாய்மையின் மடியில் தவம் செய்யும்.. வரம் தாயின் காலடி சொர்க்கம் ...