உறவுகளை இணைக்கும் இஸ்லாமிய குடும்ப WhatsApp Group


  

     
              
           கட்டுரை எண் 1155

            بسم الله الرحمن الرحيم 


இஸ்லாத்தை ஏற்று கொண்ட ஒரு மனிதன் தனக்கு தெரிந்த சத்தியத்தை ஊர் உலகத்துக்கு சொல்லுவதை விட தன்னை சார்ந்த குடும்பத்தார்களுக்கும் உறவினர்களுக்கும் எத்தி வைப்பது தான் முதல் கடமை 

சமூக வலைதளங்களில் இஸ்லாத்தை பல வகைகளில்  பரப்பும் முஸ்லிம்கள் அவர்களை சார்ந்த இரத்த பந்தங்களுக்கு அவர்கள் அறிந்த  இஸ்லாத்தை எத்தி வைப்பதில் அக்கரை செலுத்தாதவர்களாக உள்ளனர் என்பது வேதனையான விசயம் 

யார் என்றே தெரியாத நபர்களுக்கு சமூக வலைதளங்களில் அன்றாடம் சலாம் கூறி  அறிக்கை போடும் முஸ்லிமான  ஆண்களும் பெண்களும் அவர்களை சார்ந்த குடும்பத்தார்களுக்கு அந்த சலாத்தை அன்றாடம்  பரப்பி இருப்பார்களா ? தினம் ஒரு நபிமொழியை எத்தி வைத்திருப்பார்களா  ? குர்ஆன் போதனைகளை எடுத்து சொல்லி இருப்பார்களா ? என்றால் அநேகமாக இல்லை


அதே நேரம் பலதரப்பட்ட இஸ்லாமிய வாட்சப் குரூப்களில் அங்கம் பெற்று  ஏதோ இஸ்லாத்திற்க்கும் முஸ்லிம்களுக்கும் பொது சேவை செய்து வருவதாக ஒரு பிரம்மையை இயல்பிலேயே நம்மில் பலர்கள் ஏற்படுத்தி கொண்டனர் 

அதிலும் குறிப்பாக இஸ்லாமிய வாட்சப் குரூப் எனும் பெயரில் பிற இயக்கங்களை அல்லது தனி மனிதர்களை பற்றி கூட்டு முறையில் புறம் பேசுவதை தான் அதிகம் காண முடிகிறது 

அடுத்த மாதம் வர வேண்டிய வம்பு சண்டைகளை அடுத்த நாளே வர வைக்கும் அளவு இஸ்லாமிய வாட்சம் குரூப்களில் பொது சேவையை (?) ஆற்றி வருகிறார்கள்  

இஸ்லாமிய வாட்சப் குரூப்களில் மார்க்கம் எனும் போர்வையில் ஆண்களும்  பெண்களும்  இணைந்து செயல்படுகின்ற காரணத்தால் பல நேரங்களில் அது பல சங்கடங்களையும் தவறான நட்பு முறைகளையும் ஏற்படுத்தி விடுகிறது  

சுருக்கமாக சொன்னால் டைம் பாஸ் என்ற ஒன்று மட்டுமே அநேகமான இஸ்லாமிய குரூப்களின் பொழுது போக்காக அமைந்து விட்டது  

இதில் விதி விலக்காக  அரிதாக சில இஸ்லாமிய குரூப்கள் உள்ளது என்பதும்  உண்மை 

அதே நேரம் ஒவ்வொருவரும் தன்னை சார்ந்த குடும்பம் மற்றும் உறவினர்களை இணைத்து இஸ்லாமிய வாட்சப் குடும்ப  குரூப்களை உருவாக்கி அதை முறையாக குறிப்பிட்ட நேரம் மட்டும்  இயக்கினால் அதுவே  மிகவும் பயனுக்குரிய ஒன்றாக அமைந்து விடும் 


அவ்வாறு உருவாக்குவதின் மூலம் பொதுவான இஸ்லாமிய வாட்சப் குரூப்களில் நிகழும் பல சங்கடங்களை தவிர்க்க முடியும் அதே நேரம்  பல நன்மைகளை ஈட்டவும் முடியும்



 1 - குடும்பம் என்ற காரணத்தால் அனாவசியமான பயனற்ற பேச்சுக்கள் குடும்ப வாட்சம் குரூப்களில் இடம் பெறுவது குறையும் 

2 - ரத்த பந்தம் என்ற காரணத்தால்  நேராக எடுத்து சொல்ல  முடியாத பல நல்ல விசயங்களை கூட மார்க்கம் என்ற நிலையில் அறவுரையாக பொதுவாக எடுத்து சொல்லும் வாய்ப்பு அதிகம் ஏற்படும் 

3- குடும்பத்தை சார்ந்தவர் குறிப்பிடுகிறார் என்ற காரணத்தால் நியாயமான பல விசயங்களை தக்க காரணம் இல்லாது மறுத்து பேசும் சூழலும் ஏற்படாது 

4 -அந்நியர்கள் தனது தொடர்பு எண்ணை எடுத்து தவறாக பயன்படுத்தி விடுவார்களோ என்ற அச்சமும் குடும்ப வாட்சப் குரூப்களில் பெண்களுக்கு ஏற்படாது 

5- விரிசலான நிலையில் இருக்கும் பல ரத்த பந்தங்கள் இஸ்லாமிய குடும்ப குரூபின் மூலமாக மன கசப்புகளை கலைந்து நெருங்கும் சூழலும் ஏற்படும் 


மார்க்க ரீதியாக குடும்ப குரூப்பை உருவாக்கும் போது மார்க்கம் ரீதியான ஞானம் பெற்ற ஒருவரை குரூபில் நேரடியாக நுழைக்காது தனிப்பட்ட   ஆலோசகராக வைத்து கொள்வது  அவசியமானது 


குறிப்பாக குரூபில் ஒரு இரத்த உறவை இணைப்பதற்க்கு முன் குரூபிற்கான வரைமுறைகளை உருவாக்கி கொண்டு அதை முதலில் நேரடியாக அவரிடம் பரிமாற்றம் செய்து விட்டு இணைப்பதுவே தேவையற்ற பதிவுகளை குரூபில் அவர் பரப்பாமல் இருப்பதற்க்கு மூலமாக அமையும் 

இயன்றவரை ஆண் பெண் கலந்திருக்கும் எந்த குரூபிலும் இணையாமல் இருப்பதும் அவ்வாறு இருந்தால் அதில் இருந்து வெளியேறுவதும் தான் நமது  ஈமானுக்கு பாதுகாப்பு  

பித்னாக்களில் இருந்து விலகி கொள்ள அதுவே சிறந்த  வழிமுறையாகும்

பல விதங்களில் நமது மார்க்கப் பணிகள் அமைந்திருந்தாலும் சமூக களத்தில் நேரடியாக இறங்கி அழைப்பு பணி ஆற்றுவதே அனைத்தையும் விட சிறந்தது என்பதை நினைவில் நிறுத்த வேண்டும் 


يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏ 

முஃமின்களே! 

உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்

அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்

அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்

அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்

தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்

        (அல்குர்ஆன் : 66:6)


وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏ 

இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு

என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்
என்று நல்லுபதேசம் செய்து கூறியதை 

(நினைவு படுத்துவீராக)

       (அல்குர்ஆன் : 31:13)

يٰبُنَىَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِىْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَاْتِ بِهَا اللّٰهُ ‌ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ‏ 

(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும் அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்

 நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்

        (அல்குர்ஆன் : 31:16)

يٰبُنَىَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَ‌ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‌ ‏ 

“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்

       (அல்குர்ஆன் : 31:17)

          நட்புடன்  J .யாசின் இம்தாதி 

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்