முதுமையில்லா பேராசை
முதுமை இல்லா ஆசைகளும்
போதும்
போதும்
என்ற அஸ்திவாரமும்
••••••••••••••••••••••••••••••••
ஆக்கம். J யாஸீன் இம்தாதி
*******************
கட்டுரை எண் 1157
¡¡ بسم الله الرحمن الرحيم ¡¡
→←→←→←→←→←→←→←
01-11-17- புதன்கிழமை
***********************
ருசியான உணவு வகைகளை கடுமையான பசி உள்ளவனுக்கு வழங்கினாலும் ஒரு கட்டத்தில் அவன் போதும் போதும் என்றே சொல்லுவான்
எழிலான மங்கையர்களை விருப்பம் போல் அனுப்பி வைத்தாலும் ஒரு கட்டத்தில் அவன் போதும் போதும் என்றே சொல்லுவான்
காரணம் சலிப்பும் தெவிட்டும் இல்லாத எந்த ஒரு ஆசையும் உலகில் இல்லை
இன்று ரசனையாக இருக்கும் ஒன்று தான் நாளை ரசனை குறைந்ததாகவோ அல்லது வெறுப்பு நிறைந்ததாகவோ நிச்சயம் காணப்படும்
ஆனால் போதும் போதும் என்ற வார்த்தையை மனிதன் சொல்ல விரும்பாத ஓர் அம்சமே
★பொருளாதாரம் ★
தேடும் பொருள் கைவசம் இல்லாத கட்டத்தில் மாத்திரம் ஒரு மனிதன் இவ்வளவு தொகை இருந்தால் அது எனக்கு போதுமானது என்று உணர்ச்சி பூர்வமாய் சொல்லுவானே தவிர
அவன் நாடும் பொருள் கைவசம் கிடைத்து விட்டால் அவன் தேடிய பொருள் கிடைத்து விட்டதே இதுவே
போதும் என்ற மனப்பக்குவம் நிச்சயம் மாறிவிடும்
அதன் பிறகு அவன் அவனிம் இல்லாத வேறு ஒன்றை தேட முயற்சிப்பானே தவிர அப்போதும் அவன் இதுவே போதும் என்று அவன் மனதை சாந்த படுத்த மாட்டான்
காரணம் பொருளியல் ஆசை மட்டும் தான் ஒரு மனிதனுக்கு முதுமை இல்லா ஆசையாக தென்படுகிறது
பரம ஏழையும் தனது அன்றாட தேவைக்கு பொருளாதாரத்தை அனுதினமும் தேடுகிறான்
அதே நேரம் பரம்பறை சொத்து உள்ளவனும் தனது தேவைக்கு புதிய பொருளீட்டல் தேவை இல்லை என்றாலும் அனுதினமும் பொருளை தேட உழைக்கிறான்
இங்கே ஒரு மனிதனின் தேவையை அவனிடம் உள்ள பணம்
தீர்மானிப்பது இல்லை
மாறாக ஒவ்வொரு மனிதனின் மனமே அதை தீர்மானிக்கிறது
குறிப்பாக நம் சமூகத்தில் ஆண்களை விட பெண்களுக்கே இந்த பொருளியல் நாட்டமும் அதன் தேட்டமும் அதிகம் காணப்படுகிறது
அதனால் தான் மாதம் 15000 வருமானம் உள்ள குடும்ப தலைவனும் அன்றாடம் புலம்பி வருந்துகிறான்
மாதம் 50000 வருமானம் பெறும் குடும்ப தலைவனும் அன்றாடம் புலம்பி வருந்துகிறான்
உள்நாட்டில் இருக்கும் வேலையை தள்ளி விட்டு உற்றார் உறவினர் குழந்தை மற்றும் பிறந்த சொந்த ஊரை கூட மறந்து வெளிநாடுகளில் சென்று வருடக்கணக்காக பல ஆண்கள் வாலிபத்தை தொலைத்து உழைப்பதும் கூட அவர்களின் மனைவியரின் நிறைவில்லாத மனம் எப்போதும் பணம் பணம் என்று ஆடம்பரத்தின் மீது அலைவது தான் அடிப்படை காரணம்
பல்லாயிரம் கோடிகளுக்கு ஒருவன் உரிமையாளனாக இருக்கிறான் என்பதற்காக அவனது சொந்த தேவைகளுக்கு உயர் ரக கோடி மதிப்புள்ள கார்களில் இருபது கார்களை வாங்கி அவன் வீட்டு வாசல் முன் நிறுத்துவது இல்லை
பணம் குவிந்துள்ளது என்பதற்காக அன்றாடம் மட்டனும் சிக்கனும் தொடர்ந்து வாங்கி உண்ணுவது இல்லை
இந்த பேராசையை குறைந்து போதும் போதும் என்ற நிறைவான திருப்தியான வாழ்கையை தொடர்ந்து நீங்கள் வாழ விரும்புகிறீர்களா ?
வாழ்க்கையில் எது இல்லை என்று நினைத்து பார்ப்பதை விட எவை எல்லாம் நம்மிடம் உள்ளது என்பதை அடிக்கடி நினைவு கூறுங்கள்
அப்போது தான் புரியும் நம்மிடம் இருப்பில் உள்ளவை தான் நமது அத்தியாவசிய தேவை என்றும் நாம் எதிர்பார்ப்பது நமது ஆரம்பர ஆசை என்பதும் புரியும்
உயர்ந்த கோபுரங்களை அரண்மனைகளை நினைத்து பார்ப்பதை விட நம்மை விட பொருளியலில் மிகவும் தாழ்ந்த குப்பத்து மக்களின் இல்லங்களை நினைத்து பாருங்கள் அப்போது தான் புரியும் நாமும் மாளிகையில் தான் வாழ்ந்து வருகிறோம் என்று
உண்ண உணவும் உடுத்த உடையும் வாழ்வதற்க்கு ஒரு சிறு இல்லமும் இருப்பதை ஆசை படுவதும் அதற்காக இயன்ற வரை உழைப்பதும் தான் ஒரு மனிதனின் தேவையான ஆசை போதுமான ஆசை
இவைகளை தாண்டிய எந்த ஆசையும் பேராசையே
போதும் போதும்
எனும் சொல்லை கொலை செய்யும் ஆசையே
عَنْ مَالِكٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَا ذِئْبَانِ جَائِعَانِ اُرْسِلاَ فِيْ غَنَمٍ بِأَفْسَدَ لَهَا مِنْ حِرْصِ الْمَرْءِ عَلَي الْمَالِ وَالشَّرَفِ لِدِيْنِهِ
ஆட்டு மந்தையில் விடப்பட்ட பசியுள்ள இரு ஓநாய்களால் ஆடுகளுக்கு ஏற்படும் தீங்கைவிட பொருளாசையும், பதவி ஆசையும் மனிதனுடைய தீனுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
اَلْمَالُ وَ الْبَـنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَا وَالْبٰقِيٰتُ ا'لصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்
என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்க தக்கதாகவும் இருக்கின்றன
(அல்குர்ஆன் : 18:46)
நட்புடன் J . இம்தாதி
اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ
ReplyDeleteசெல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَ
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.
(அல்குர்ஆன் : 102:1,2)
மண்ணறையை சந்திக்கும் வரை நம் பொருளாதார ஆசை அடங்குவதில்லை. அந்த பொருளாதார தேடலில் அல்லாஹ் வை மறந்தால் நம் நிலையை அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்.
5670. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே அவற்றில் தம்மைவிடக் கீழிருப்பவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
பாரக்கல்லாஹ் 💐👆🏻இந்த ஹதீஸை நினைவூட்டியது இம்தாதி அவர்களின் பதிவு.
💐💐💐💐💐💐